டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அயோத்தி வழக்கு.. உச்சநீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் இவைதான்!

Google Oneindia Tamil News

Recommended Video

    Aspects in Ayodhya verdict | அயோத்தி வழக்கின் தீர்ப்பு.. முக்கிய அம்சங்கள் என்னென்ன?

    டெல்லி: அயோத்தி வழக்கில் 5 நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பை வழங்கியுள்ளனர். அதில் முஸ்லிம்கள் தங்களுக்கே இடம் சொந்தமானது என்பதற்கான ஆதாரத்தை நிரூபிக்கவில்லை என கூறிய உச்சநீதிமன்றம் அவர்களது மனுக்களை ரத்து செய்தது.

    அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் இடம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக பிரச்சினை நீடித்து வந்தது. இந்த நிலையில் இன்றைய தினம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ் ஏ பாப்டே, டி ஒய் சந்திரசூட், அசோக் பூஷன், எஸ் ஏ நசீர் ஆகியோர் தீர்ப்பை வழங்கினர்.

     What are the important aspects in the Ayodhya verdict?

    இதையொட்டி இந்தியா முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் தீர்ப்பின் நகலை ரஞ்சன் கோகாய் வாசிப்பதற்கு முன்னர் தீர்ப்பை அனைத்து தரப்பினரும் ஏற்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

    இதைத் தொடர்ந்து 30 நிமிடங்கள் தீர்ப்பை வாசித்தார். அவர் கூறுகையில் முஸ்லீம் அமைப்புகள் சர்ச்சைக்குரிய இடம் தங்களுக்கு சொந்தமானது என்பதை நிரூபிக்க தவறிவிட்டது. எனவே இந்த இடம் ராமர் ஜென்ம பூமிக்கே சொந்தம் என்றார்.

    1045 பக்க அயோத்தி தீர்ப்பு

    இந்த தீர்ப்பில் ரஞ்சன்கோகாய் முன் வைத்த முக்கிய அம்சங்கள் குறித்து பார்ப்போம்:

    • ஒரு பிரிவினரின் நம்பிக்கையை மறுபிரிவினர் மறுக்க முடியாது
    • மசூதியில் கடந்த 1949-ஆம் ஆண்டு சிலைகள் வைக்கப்பட்டன
    • பாபர் மசூதி மிர்பாகியால் கட்டப்பட்டது
    • தொல்லியல் துறை ஆதாரங்களை புறக்கணிக்க முடியாது
    • தொல்லியல் துறை ஆதாரங்கள் எல்லாம் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவையாக உள்ளன.
    • பாபர் மசூதி வெற்றிடத்தில் கட்டப்படவில்லை
    • பாபர் மசூதிக்கு கீழ் கண்டறியப்பட்ட கட்டடங்கள் இஸ்லாமியர்களுடையது அல்ல
    • சர்ச்சைக்குரிய இடம் தங்களுக்கு சொந்தமானது என்பதை இஸ்லாமிய அமைப்புகள் நிரூபிக்கவில்லை
    • நிலத்தின் உரிமை நம்பிக்கையின் அடிப்படையில் உறுதி செய்ய இயலாது
    • சர்ச்சைக்குரிய இடம் ராம ஜென்மபூமி நியாஸ் அமைப்புக்கே சொந்தமானது
    • இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் நிலம் வழங்கப்படும்
    • அயோத்தியில் இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம் வழங்கப்படும்
    • வஃக்பு வாரியம் ஏற்கும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் தர மத்திய, உத்தர பிரதேச மாநில அரசுகளுக்கு உத்தரவு
    • சர்ச்சைக்குரிய இடத்தில் கோயில் கட்டுவதற்கு அறங்காவலர் குழுவை அமைக்க வேண்டும்
    • அயோத்தில் கோவில் கட்ட 3 மாதங்களில் மத்திய அரசு ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்
    • சர்ச்சைக்குரிய இடமான அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என தீர்ப்பு வழங்கினர்.
    • ராமர் கோவில் கட்ட மத்திய அரசு அறக்கட்டளை அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    English summary
    What are the important aspects in the Ayodhya verdict? Here are the points.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X