டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா வைரஸின் நிலைகள் என்ன? எந்தெந்த நாடுகள் எந்த நிலையில் இருக்கு?

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா வைரஸ் 4 நிலைகளை கொண்டுள்ளது. அவை என்னென்ன? எந்தெந்த நாடுகள் எந்த நிலையில் உள்ளது.

Recommended Video

    கொரோனா வைரஸ் பரவும் ஸ்டேஜ் விவரம்

    இந்தியாவில் 21 நாட்களுக்கு அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்று 4ஆவது நாளில் உள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் கொரோனாவால் 19 பேர் பலியாகிவிட்டனர்.

    பாதிப்பு எண்ணிக்கை 850ஐ தாண்டிவிட்டது. அதாவது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 900-ஐ நெருங்கிவிட்டது. எனவே இந்த நோய் தொற்றானது இந்தியாவை சமூக பரவலுக்கு முன்னெடுத்து செல்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    டீச்சரை மிரட்டி விரட்டி கடத்திய வணக்கம் சோமு.. கொரோனா பீதியில் போலீசில் சரண்.. திருச்சியில் பரபரப்புடீச்சரை மிரட்டி விரட்டி கடத்திய வணக்கம் சோமு.. கொரோனா பீதியில் போலீசில் சரண்.. திருச்சியில் பரபரப்பு

    3ஆவது நிலை இல்லை

    3ஆவது நிலை இல்லை

    இதுகுறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், மத்திய சுகாதாரத் துறை கூறுகையில் இந்தியாவில் இந்த நேரம் வரை கொரோனா வைரஸ் 3ஆவது நிலையான சமூக பரவலை அடையவில்லை என தெரிவித்துள்ளன. சீனா, இத்தாலி, பிரிட்டன் ஆகிய நாடுகள் மட்டுமே 3ஆவது நிலையை அடைந்துள்ளன என கூறப்படுகிறது.

    நோயின் ஆரம்ப நிலை

    நோயின் ஆரம்ப நிலை

    கொரோனா வைரஸில் எத்தனை நிலைகள் உள்ளன என்பதை பார்ப்போம். இதில் மொத்தம் 4 நிலைகள் மட்டுமே உள்ளன. அதில் முதல் நிலை வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவது அவர்கள் தனிமைப்படுத்தப்படுவதும்தான். இதுதான் இந்த நோயின் ஆரம்ப நிலை. இந்த நிலையின் மூலம் வெளிநாடு செல்லாதோருக்கு பரவவே பரவாது.

    2ஆவது நிலை

    2ஆவது நிலை

    அது போல் இரண்டாம் நிலை என்பது வெளிநாட்டிலிருந்து வந்தவர்களிடம் இருந்து உள்ளூர் மக்களுக்கு பரவுவது. அதாவது இந்த நபர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தால் கொரோனாவால் பாதிக்கப்படுவர். இவர்கள் பெரும்பாலும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களின் உறவினர்கள், நண்பர்கள் ஆவர். இந்த நிலையில் இந்தியா உள்ளது. இது சற்று பாதுகாப்பான நிலை. இதன் மூலம் யாரிடம் இருந்து யாருக்கு நோய் பரவியது என்பதை தெரிந்து கொள்ளவும் முடியும்.

    சிங்கப்பூர், இத்தாலி

    சிங்கப்பூர், இத்தாலி

    அது போல் 3-ஆவது நிலை என்பது சமூக பரவலாகும். அதாவது நோய் பாதித்த நாடுகளுக்கே செல்லாமல் தொற்றிக் கொள்வது. இது மிகவும் ஆபத்தான நிலையாகும். இந்த நிலையில் யாரிடம் இருந்து யாருக்கு பரவியது என்பதை கண்டுபிடிப்பது மிகவும் சிரமம் ஆகும். இதனால்தான் சமூக விலகலை பல்வேறு நாடுகள் வலியுறுத்துகின்றன. இந்த நிலையில் சிங்கப்பூர், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் உள்ளன.

    கடினம்

    கடினம்

    4 ஆவது நிலை என்பது மிகவும் அபாயகரமான நிலையாகும். தொற்று போன்ற ஒரு நிலையை உருவாக்கும். ஆங்காங்கே கொத்து கொத்தாக இந்த நோய் பரவும். ஏராளமானோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டால் அவற்றை கட்டுப்படுத்துவது கடினமாகும். அது போல் நோய் பரவலையும் தடுக்க முடியாது. இந்த நிலையில்தான் சீனா இருந்தது. இங்கு 3300-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர்.

    English summary
    What are the Stages of Coronavirus? What are they mean? Which countries are in what stages?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X