டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிக கல்லூரிகள் கொண்ட மாநிலங்கள்.. டாப் 5 இடங்களில் தமிழகம் இல்லை.. யாருக்கு முதலிடம் தெரியுமா

நாட்டில் அதிக கல்லூரி, பல்கலைக்கழகங்கள் கொண்ட மாநிலங்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் அதிக பல்கலைக்கழகங்களைக் கொண்ட மாநிலங்களின் பட்டியலை AISHE எனப்படும் அகில இந்திய உயர்கல்வி கணக்கெடுப்பு அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில் தமிழ்நாடு எந்த இடத்தில் உள்ளது என்பதைப் பார்க்கலாம்.

இந்தியாவில் உயர்கல்வி படிப்போரின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏழை மாணவர்களும் கல்வி கற்க அரசு பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

இதனிடையே நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் குறித்த பட்டியலை AISHE எனப்படும் அகில இந்திய உயர்கல்வி கணக்கெடுப்பு அமைப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

 அடி தூள்! அனைத்து கல்லூரி மாணவிகளுக்கும் மாதவிடாய் விடுமுறை கட்டாயம் - கேரள அரசு 'வாவ்' அறிவிப்பு! அடி தூள்! அனைத்து கல்லூரி மாணவிகளுக்கும் மாதவிடாய் விடுமுறை கட்டாயம் - கேரள அரசு 'வாவ்' அறிவிப்பு!

இந்தியா

இந்தியா

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிகப்படியான மாணவர்கள் கல்லூரிகளில் சேர்கிறார்கள். தேசிய சராசரியைக் காட்டிலும் தமிழ்நாட்டின் gross enrolment ratio மிக அதிகம். தமிழ்நாட்டின் கடந்த கால ஆட்சியாளர்கள் இங்கு மாணவ, மாணவிகள் கல்வி கற்கக் கொண்டு வந்த பல்வேறு திட்டங்களே காரணம். குறிப்பாக, மருத்துவத் துறையில் இந்தியாவிலேயே அதிகப்படியான மருத்துவக் கல்லூரியைக் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு உள்ளது. இதனாலேயே பலரும் சென்னைக்கு மருத்துவ சுற்றுலா வருகிறார்கள்.

மத்திய அரசு பட்டியல்

மத்திய அரசு பட்டியல்

இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய கல்வி அமைச்சகத்தின் அகில இந்திய உயர்கல்வி கணக்கெடுப்பு அமைப்பு நாட்டிலேயே அதிக பல்கலைக்கழகங்களைக் கொண்ட பட்டியலை வெளியிட்டிருந்தது. இந்த பட்டியலில் ராஜஸ்தான் முதல் இடத்தில் உள்ளது. உத்தரப் பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் அதிக பல்கலைக்கழகங்கள் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன. மேலும், மத்திய அரசின் இந்தப் பட்டியலில் எந்த மாவட்டத்தில் அதிகபட்ச கல்லூரிகள் உள்ளன என்பது குறித்த தரவுகளும் இடம்பெற்றுள்ளன.

முதலிடம் யாருக்கு

முதலிடம் யாருக்கு

மத்திய அரசின் இந்தப் பட்டியலில் 52 அரசுத் தனியார் பல்கலைக்கழகங்கள், 26 மாநில பப்ளிக் பல்கலைக்கழகங்கள், 7 டீம்ட் பல்கலைக்கழகங்களாக்க (deemed to be universities) உள்ளன. மேலும், ராஜஸ்தானில் மத்திய அரசின் ஐஐடி, ஐஐஎம் போன்ற நிறுவனங்கள் 5 உள்ளன. இது தவிர மத்திய அரசு நடத்தும் ஒரு பல்கலைக்கழகமும் மாநில அரசு நடத்தும் ஒரு பல்கலைக்கழகமும் உள்ளது. ஒட்டுமொத்தமாக ராஜஸ்தானில் 92 பல்கலைக்கழகங்கள் உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

அடுத்தடுத்த இடங்கள்

அடுத்தடுத்த இடங்கள்

ராஜஸ்தானுக்கு அடுத்த இடத்தில் நாட்டிலேயே மிக பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசம் உள்ளது. அங்கு மொத்தம் 84 பல்கலைக்கழகங்கள் உள்ளன. உத்தரப் பிரதேசத்தை விட ஒரு பல்கலைக்கழகம் குறைவாக 83 பல்கலைக்கழகங்கள் உடன் குஜராத் இதில் மூன்றாம் இடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து 74 பல்கலைக்கழகங்கள் உடன் மத்திய பிரதேசமும் 72 பல்கலைக்கழகங்களுடன் கர்நாடகாவும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. அதைத் தொடர்ந்து 72 பல்கலைக்கழகங்களுடன் மகாராஷ்டிரா 6ஆவது இடத்தில் உள்ளது.

அடுத்தடுத்த இடங்கள்

அடுத்தடுத்த இடங்கள்

மகாராஷ்டிராவுக்குப் பின்னரே தமிழ்நாடு இந்தப் பட்டியலில் உள்ளது. மொத்தம் 59 தமிழ்நாடு ஏழாவது இடத்தில் உள்ளது. அடுத்து ஹரியானா (56 பல்கலைக்கழகங்கள்), மேற்கு வங்கம் (52 பல்கலைக்கழகங்கள்) ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 45 பல்கலைக்கழகங்களுடன் 10ஆவது இடத்தில் ஆந்திரா உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. இவை தவிர, நாட்டிலேயே குறைந்த பல்கலைக்கழகங்கள் உள்ள மாநிலமா லடாக் (2) உள்ளது. சண்டிகர், கோவா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் தலா மூன்று பல்கலைக்கழகங்களை மட்டுமே கொண்டுள்ளன

 கல்லூரிகள்

கல்லூரிகள்

அதேபோல அதிகப்படியான கல்லூரிகளைக் கொண்ட மாநிலங்களின் பட்டியலும் தனியாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் உத்தரப்பிரதேசத்தில் 8114 கல்லூரிகள் உள்ளன. இருப்பினும் இதன் சராசரி சற்று குறைவாகவே உள்ளது. ஒரு லட்சம் பேருக்கு 32 கல்லூரிகள் மட்டுமே உள்ளன. அதைத் தொடர்ந்து 4532 கல்லூரிகளுடன் மகாராஷ்டிரா இரண்டாம் இடத்தில் உள்ளது. அதாவது அங்கு ஒரு லட்சம் பேருக்கு 34 கல்லூரிகள் உள்ளன. 4233 கல்லூரிகளுடன் கர்நாடகா மூன்றாவது இடத்திலும் (ஒரு லட்சம் பேருக்கு 62 கல்லூரிகள்), 3694 கல்லூரிகளுடன் ராஜஸ்தான் நான்காவது இடத்திலும் (ஒரு லட்சம் பேருக்கு 40) உள்ளது.

தமிழ்நாடு

தமிழ்நாடு

இதில் ஐந்தாவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டில் ஒரு லட்சம் பேருக்கு 40 கல்லூரிகள் என்ற விகிதத்தில் மொத்தம் 2667 கல்லூரிகள் உள்ளது. அதைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளது. அதேபோல மாவட்ட வாரியாக பார்க்கும் போது பெங்களூர் 1508 கல்லூரிகளுடன் டாப் இடத்தில் உள்ளன. ஜெய்ப்பூர், ஹைதராபாத், புனே ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

English summary
State With most number of colleges and universities: Tamilnadu has one of the most number of colleges and universities.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X