டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒட்டுமொத்த இந்தியா என மோடி உருவகப்படுத்திய அந்த 10 மாநிலங்கள்.. கரெண்ட் ஸ்டேட்ஸ் என்ன?

Google Oneindia Tamil News

டெல்லி: தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 10 மாநிலங்களில் கொரோனா தொற்றை ஒழித்தால் இந்தியாவே கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெறும் என பிரதமர் மோடி உருவகப்படுத்தி கூறியிருந்த நிலையில் அந்த 10 மாநிலங்களில் கொரோனாவின் தற்போதைய ஸ்டேடஸ் என்ன என்பதை பார்ப்போம்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 22 லட்சத்தை தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கையோ 45,383 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 15 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 6.41 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் மட்டுமே கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே அந்த மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சியில் ஆலோசனை நடத்தினார்.

எனது மகளுக்கே இந்த தடுப்பூசி போடப்பட்டுள்ளது.. முதல் கொரோனா தடுப்பூசி குறித்து ரஷ்யா அதிபர்! எனது மகளுக்கே இந்த தடுப்பூசி போடப்பட்டுள்ளது.. முதல் கொரோனா தடுப்பூசி குறித்து ரஷ்யா அதிபர்!

ஆந்திரா

ஆந்திரா

அப்போது அவர் கூறுகையில் மகாராஷ்டிரா, ஆந்திரா, பீகார், குஜராத், உத்தரப்பிரதேசம், தெலுங்கானா, பஞ்சாப், தமிழகம் மற்றும் மேற்கு வங்கம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்த 10 மாநிலங்களில் கொரோனாவை விரட்டிவிட்டால் ஒட்டுமொத்த இந்தியாவே கொரோனா போரில் வென்றதாக ஒரு பார்வை எழுந்துள்ளது.

குஜராத்

குஜராத்

மேலும் பீகார், குஜராத், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் டெஸ்டிங்கை உயர்த்த வேண்டும். கன்டெய்ன்மென்ட், கான்டாக்ட் டிரேசிங், கண்காணிப்பு ஆகிய மூன்றும் கொரோனாவுக்கு எதிரான மிகவும் திறமையான ஆயுதங்கள் என்பதை நமது அனுபவத்தில் தெரிந்து கொண்டோம் என்றார் மோடி.

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா

மோடி சொல்வதற்கேற்ப மகாராஷ்டிரா, ஆந்திரா, தமிழகம், கர்நாடகா, உத்தரப்பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கையும் புதிய கொரோனா பாதிப்புகளும் அதிகமாகவே உள்ளன. மகாராஷ்டிராவை எடுத்துக் கொண்டால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5.24 லட்சமாகும்.

தமிழகம்

தமிழகம்

நேற்று ஒரே நாளில் 9,181 பேர் பாதிக்கப்பட்டனர். இதுவரை கொரோனாவால் 18,050 பேர் பலியாகிவிட்டனர். நேற்று ஒரே நாளில் 293 பேர் பலியாகிவிட்டனர். இதுவரை 3.58 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். அது போல் தமிழகத்தில் கொரோனாவால் 3.02 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நேற்று ஒரே நாளில் 5,914 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுவரை 5,041 பேர் பலியாகிவிட்டனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 114 பேர் பலியாகினர். இதுவரை 2.44 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளார்கள்.

ஆந்திரா

ஆந்திரா

ஆந்திராவில் கொரோனாவால் 2.35 லட்சம் பேரும், நேற்று ஒரே நாளில் 7,665 பேரும், பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுவரை கொரோனாவால் 2,116 பேர் பலியாகிவிட்டனர், நேற்று மட்டும் 80 பேர் பலியாகிவிட்டனர். இதுவரை கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 1.45 லட்சம் ஆகும். அது போல் கர்நாடகாவில் கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 1.82 லட்சமாகும். நேற்று ஒரே நாளில் 4,267 பேர் பாதிப்புக்குள்ளாகினர்.

உத்தரப்பிரதேசம்

உத்தரப்பிரதேசம்

உத்தரப்பிரதேச நிலவரத்தை எடுத்துக் கொண்டால் 1.26 லட்சம் பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 4,113 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அது போல் இதுவரை 2,120 பேர் பலியாகிவிட்டனர். நேற்று ஒரே நாளில் 51 பேர் பலியாகிவிட்டனர். இதுவரை மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 76,724 ஆகும்.

மேற்கு வங்கத்தில் பாதிப்பு

மேற்கு வங்கத்தில் பாதிப்பு

மேற்கு வங்கத்தில் 98,459 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நேற்று ஒரே நாளில் 2,905 பேருக்கு புதிதாக நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை 2100 பேர் பலியாகிவிட்டனர். நேர்று ஒரே நாளில் 41 பேர் பலியாகிவிட்டனர். இதுவரை 70,328 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள்.

தெலுங்கானாவில் பாதிப்பு

தெலுங்கானாவில் பாதிப்பு

இதுவரை 3,312 பேர் பலியாகிவிட்டனர், நேற்று ஒரே நாளில் 114 பேர் பலியாகிவிட்டனர். இதுவரை மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 99,126 ஆகும். தெலுங்கானாவில் 82,647 பேரும், நேற்று ஒரே நாளில் 1,896 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுவரை 645 பேர் பலியாகிவிட்டனர், நேற்று ஒரே நாளில் 8 பேர் பலியாகிவிட்டனர். அது போல் 59,374 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள்.

பஞ்சாப்

பஞ்சாப்

பீகார் மாநிலத்தில் 82,550 பேரும் நேற்று ஒரே நாளில் 3,099 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுவரை 397 பேர் பலியாகிவிட்டனர், நேற்று ஒரே நாளில் 10 பேர் பலியாகிவிட்டனர். இதுவரை 55 ஆயிரம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளார்கள். அது போல் பஞ்சாபில் 24,889 பேரும் நேற்று ஒரே நாளில் 986 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள், இதுவரை 604 பேர் பலியாகிவிட்டனர், நேற்று ஒரே நாளில் 18 பேர் பலியாகிவிட்டனர், இதுவரை மருத்துவமனைகளில் இருந்து 15,735 பேர் வீடு திரும்பியுள்ளார்கள். எனவே இவர்கள் எல்லாம் பாதிப்பை குறைத்து விட்டால் இந்தியாவே கொரோனா போரில் வெற்றி பெறும் என மோடி கூறியது உண்மைதான். மற்ற மாநிலங்களில் இந்த அளவுக்கு தொற்று இல்லை.

English summary
What are the status of 10 states in Which covid 19 has increased? Modi said that if these 10 states beat covid, then India will win in the battle.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X