டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சீன செயலிகள் தடை செய்யப்பட்ட மறுநாளே.. ஹேக் செய்யப்பட்ட மோடியின் டிவிட்டர்.. யார் இந்த ஜான் விக்?

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் மோடியின் தனிப்பட்ட டிவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்ட நிலையில், இந்த ஹேக்கிங் குறித்த கூடுதல் விவரங்கள் வெளியாகி உள்ளது. ஜான் விக் என்ற ஹேக்கிங் குழு இந்த ஹேக்கிங்கை செய்ததாக புகார் எழுந்துள்ளது. யார் அந்த ஜான் விக் ஹேக்கிங் குழு?

Recommended Video

    Modi-யின் Twitterஐ Hack செய்த John Wick யார்? | Oneindia Tamil

    இந்தியா - சீனா இடையே மீண்டும் எல்லை பிரச்சனை பெரிதாகி உள்ளது. லடாக்கில் மீண்டும் அத்துமீற சீனா திட்டங்களை வகுத்து வருகிறது. இதனால் எல்லையில் இந்தியா படைகளை குவித்து பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் சீனாவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று சீனாவின் 118 செயலிகள் தடை செய்யப்பட்டது. பப்ஜி உள்ளிட்ட சீனாவின் 118 செயலிகள் தடை செய்யப்படுவதாக மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டது.

    பிரதமர் நரேந்திர மோடியின் ட்விட்டர் பக்கத்தை ஹேக் செய்த கும்பல்.. செய்த காரியம்! பிரதமர் நரேந்திர மோடியின் ட்விட்டர் பக்கத்தை ஹேக் செய்த கும்பல்.. செய்த காரியம்!

    ஹேக்கிங் செய்யப்பட்டது

    ஹேக்கிங் செய்யப்பட்டது

    சீனாவுடன் மோதல் நிலவி வரும் நிலையில்தான் தற்போது பிரதமர் மோடியின் தனிப்பட்ட டிவிட்டர் கணக்கான @narendramodi_in ஹேக் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் இந்த கணக்கில் பிரதமர் மோடியின் கொரோனா நிவாரண நிதிக்கு பிட் காயின் மூலம் நிதி உதவி செய்யுங்கள் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதற்கான பிட்காயின் லிங்க் எண் கொடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் மூன்று முறை இதே டிவிட்கள் செய்யப்பட்டுள்ளது.

    சந்தேகம் 1

    சந்தேகம் 1

    இந்த ஹேக்கிங்கை யார் செய்தது என்று மூன்று விதமான சந்தேகங்கள் எழுந்துள்ளது. முதல் சந்தேகம், கடந்த சில வாரங்கள் முன் இதேபோல் பிரபலங்களின் டிவிட்டர் கணக்குகள் அமெரிக்காவில் ஹேக் செய்யப்பட்டது. இதில் எலோன் மஸ்க், வாரன் பப்பெட், கென்யே வெஸ்ட், பாரக் ஒபாமா, பில்கேட்ஸ் , ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரபூர்வ கணக்கு, கிம் கார்டிஷியன், ஜெப் பெஸோஸ் ஆகியோரின் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டது.

    தற்போதும் அதேபோல்

    தற்போதும் அதேபோல்

    தற்போதும் அதேபோல் பிரதமர் மோடியின் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக பிரபலங்களின் கணக்குகளை ஹேக் செய்த ஹேக்கர்கள், இதன் மூலம் பிட் காயின் மோசடியை செய்தனர். நாங்கள் சொல்லும் பிட்காயின் விலாசத்திற்கு 1000 டாலர் அனுப்புங்கள். அப்படி அனுப்பினால் 2000 டாலர் உங்களுக்கு கிடைக்கும் என்று அவர்கள் டிவிட் செய்தனர். ஆனால் இந்த ஹேக்கிங்கை செய்த புளோரிடாவை சேர்ந்த 17 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் பெயர் கிரகாம் இவான் கிளார்க் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    கைது செய்யப்பட்டுவிட்டார்

    கைது செய்யப்பட்டுவிட்டார்

    இந்த குறிப்பட்ட ஹேக்கர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுவிட்டதால், அவரால் இந்த ஹேக்கிங் செய்யப்பட்டு இருக்க வாய்ப்பில்லை. இதனால் இன்னொரு பக்கம் சீனா மீதும் சந்தேகம் எழுந்துள்ளது. பொதுவாக சீனாதான் அண்டை நாடுகளை ஹேக்கிங் மூலம் தாக்கும். முக்கியமாக எந்த நாட்டுடன் சீனா சண்டையில் இருக்கிறதோ, அந்த நாட்டின் தலைவர்கள் கணக்கை சீனா ஹேக் செய்யும்.

    சீனா ஹேக்கிங்

    சீனா ஹேக்கிங்

    ஆஸ்திரேலியாவில் அரசியல் தலைவர்களின் கணக்கை இதேபோல் சீனா ஹேக் செய்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல் மீண்டும் தற்போது ஹேக்கிங் புகார் வைக்கப்பட்டுள்ளது. சீனாவுடன் மோதல் நிலவி வரும் நிலையில, பிரதமர் மோடியின் டிவிட்டர் கணக்கை சீன ஹேக்கர்கள் ஹேக் செய்துள்ளனரா என்று கேள்வி எழுந்துள்ளது. அதே சமயம் இந்த ஹேக்கிங்கை நாங்கள்தான் செய்தோம் என்று ஜான் விக் என்ற ஹேக்கர் குழு தெரிவித்துள்ளது.

    யார் இவர்கள்

    யார் இவர்கள்

    முன்னதாக பேடிஎம் மால் மீது ஜான் விக் ஹேக்கர் குழு ஹேக்கிங் செய்ததாக புகார் வைக்கப்பட்டது. ஆனால் இதை ஜான் விக் குழு மறுத்துள்ளது. பெரிய அளவில் இந்த குழு ஹேக்கிங் எதையும் செய்தது இல்லை. இப்போது திடீரென இந்த ஹேக்கிங் குழு உருவாகி உள்ளது. ஜான் விக் என்பது ஹாலிவுட் நடிகர் கீனு ரீவிஸ் நடித்த பிரபல ஹாலிவுட் ஆக்சன் படமாகும். இந்த படத்தின் ஹீரோ பெயர் ஜான் விக். தற்போது அதே பெயரில் ஹேக்கிங் குழு பிரதமர் மோடியின் கணக்கை ஹேக் செய்துள்ளது.

    எங்கு இருந்து

    எங்கு இருந்து

    இந்த ஹேக்கிங் குழு எங்கிருந்து செயல்படுகிறது என்று முழு விவரம் வெளியாகவில்லை. சீனாவில் இருந்து இந்த ஜான் விக் ஹேக்கிங் குழு செயல்படலாம் என்று அச்சம் எழுந்துள்ளது. முன்னதாக இந்தியாவில் ஹேக்கிங் தாக்குதல்கள் நடக்க வாய்ப்புள்ளது என்று செர்ட் அமைப்பு மற்றும் மத்தியசைபர் உளவுத்துறை தெரிவித்து இருந்தது. தற்போது அதேபோல் ஹேக்கிங் தாக்குதல்கள் தொடங்கி உள்ளது.

    English summary
    What happened to PM Modi twitter account? Who is this John Wick hacker group ?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X