டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

35ஏ சட்டம் என்றால் என்ன? காஷ்மீரில் ஏன் இதனால் பதட்டம்? இதை நீக்க சொல்வது ஏன் தெரியுமா?

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 35ஏ சட்டம் மிகவும் சிக்கலான, அதே சமயம் சர்ச்சையான சட்டங்களில் ஒன்றாகும்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Article 35A case | காஷ்மீர் சிறப்பு சட்டம் : உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

    டெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 35ஏ சட்டம் மிகவும் சிக்கலான, அதே சமயம் சர்ச்சையான சட்டங்களில் ஒன்றாகும்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அதிகாரங்களை வழங்கும் 35ஏ சட்டப்பிரிவை நீக்க கோரிய வழக்கு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடக்க உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் இன்று காலை இந்த வழக்கு விசாரிக்கப்பட உள்ளது.

    இதனால் காஷ்மீரில் தற்போது பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. அங்கு இதனால் பாதுகாப்பு அதிக அளவில் போடப்பட்டுள்ளது .

    என்ன சட்டம்

    என்ன சட்டம்

    35ஏ சட்டப்பிரிவு என்பது ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்குகிறது. இந்தியாவில் மற்ற எந்த மாநிலங்களுக்கும் இல்லாத சிறப்பு அதிகாரம் இந்த மாநிலத்திற்கு இருக்கிறது. இந்த சிறப்பு அதிகாரம் காரணமாக மற்ற மாநிலங்கள் பாதிக்கப்பட்டாலும் கூட இதன் மீது மத்திய அரசு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க முடியாது.

    என்ன அதிகாரம்

    என்ன அதிகாரம்

    இந்த சட்டப்பிரிவு மூலம் பின்வரும் சிறப்பு அதிகாரங்களை ஜம்மு காஷ்மீர் பெறுகிறது.

    1. ஜம்மு காஷ்மீரில் காஷ்மீர் மக்கள் மட்டுமே நிலம் வாங்க முடியும். வேறு மாநில மக்கள் எத்தனை வருடமாக அங்கு இருந்தாலும் நிலம் வாங்க முடியாது.

    2. ஜம்மு அரசு வேளைகளில் வேறு மாநில மக்கள் சேர முடியாது.

    3. ஜம்முவில் கல்லூரிகளில் வேறு மாநில மக்கள் ஸ்காலர்ஷிப் பெற முடியாது..

    4. இந்த சட்டம் காரணமாக வேறு மாநில மக்கள் நேரடியாக பாதிக்கப்பட்டாலும் இதை மத்திய அரசு நீக்க முடியாது.

    எப்படி வந்தது

    எப்படி வந்தது

    இந்த சட்டம் 1954ல் குடியரசுத்தலைவர் ராஜேந்திர பிரசாத் மூலம் கொண்டுவரப்பட்ட சட்டம் ஆகும். இந்திய சுதந்திரத்தை அடுத்த குடியரசுத்தலைவர் ராஜேந்திர பிரசாத் கொண்டு வந்த சிறப்பு பிரகடணம் மூலம் கொண்டு வரப்பட்டது. முன்னாள் பிரதமர் நேரு மூலம் இந்த சட்டத்தை பரிந்துரை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஏன் இந்த சட்டம்

    ஏன் இந்த சட்டம்

    அப்போது காஷ்மீரில் மிக கடுமையான கலவரங்கள் நடந்து வந்தது. இந்த கலவரங்களை தடுக்கும் பொருட்டே இந்த சட்டம் அப்போது கொண்டு வரப்பட்டது. ஜம்மு காஷ்மீர் இயல்பு நிலைக்கு திரும்பும் பொருட்டு அப்போது இந்த சட்டம் அமல்படுத்தட்டது.

    என்ன தவறு

    என்ன தவறு

    ஆனால் இந்த சட்டம் அடிப்படையிலேயே தவறு ஆகும். சட்டவிதி 368ன் படி பாராளுமன்றம் மட்டுமே வாக்கெடுப்பு மூலம் சட்டங்களை இயற்ற முடியும். ஆனால் குடியரசுத்தலைவர் அப்படி எதுவும் செய்யாமல் சிறப்பு பிரகடனம் மூலம் இந்த சட்டத்தை கொண்டு வந்து இருக்கிறார். சட்ட விதி 370ஐ அவர் இதில் பயன்படுத்தி உள்ளார். ஆனால் 370 மூலம் சட்ட திருத்தங்களை கொண்டு வரலாம் புதிய நிரந்தர சட்டங்களை கொண்டு வர முடியுமா என்று பெரும் கேள்வி எழுந்து இருக்கிறது.

    இதுதான் பிரச்சனை

    இதுதான் பிரச்சனை

    இந்த கேள்விதான் தற்போது இந்த வழக்கு விசாரணைக்கு காரணம். இந்த சட்டம் இருப்பது சரியா, கொண்டு வரப்பட்ட முறை சரியா என்று இன்று விசாரிக்கப்பட உள்ளது. இதனால் காஷ்மீரில் மிகவும் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    இப்போது என்ன

    இப்போது என்ன

    இந்த சட்டத்திற்கு காஷ்மீர் பிரிவினைவாதிகளின் ஆதரவு அதிகம் இருக்கிறது. இந்த சட்டம் நீக்கப்பட்டால், காஷ்மீரில் இந்து மக்கள் அனுமதியின்றி குடியேறுவார்கள். இது ஒரு கலாச்சார போர்தொடுப்பாக இருக்கும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் இது இந்திய இறையாண்மைக்கு எதிரான சட்டம் என்று பெரும்பாலான வலதுசாரி அமைப்பினர் நினைக்கிறார்கள்.

    English summary
    What is actually Article 35A? Why it creates issues in Jammu Kashmir - Here is the details.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X