டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செல்பிக்கு எதிராக பாஜக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! லோக் சபாவில் திக் கோரிக்கை.. ஏன் தெரியுமா?

Google Oneindia Tamil News

Recommended Video

    செல்பிக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்க பாஜக எம்.பி-க்கள் கோரிக்கை- வீடியோ

    டெல்லி: மக்கள் செல்பிக்கு அடிமை ஆகி இருப்பதற்கு எதிராக மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்து இருக்கிறது என்று பாஜக எம்.பிக்கள் லோக் சபாவில் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

    உலகம் முழுக்க செல்பி மோகம் தற்போது அதிகமாகிவிட்டது. செல்பி எடுப்பது என்பது நமது கலாச்சாரத்தில் ஒன்றாக மாறிவிட்டது.

    இந்த நிலையில் செல்பி எடுப்பது ஒரு நோய் என்று சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஆனால் அதே கருத்து லோக் சபாவில் ஒலித்து பாஜகவிற்கு கொஞ்சம் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.

    என்ன கேள்வி

    என்ன கேள்வி

    பீகாரை சேர்ந்த பாஜக எம்.பி ஓம் பிரகாஷ் யாதவ் ''நம் நாட்டில் மக்கள் பலர் செல்பி எடுப்பதற்கு அடிமையாகிவிட்டனர். செல்பி என்பது நோயாகிவிட்டது. மத்திய அரசு இதற்கு எதிராக எதாவது நடவடிக்கை எடுத்து இருக்கிறதா என்று தெரியவில்லை, பயமாக இருக்கிறது'' என்று கூறினார்கள்.

    மீண்டும்

    மீண்டும்

    அவரை தொடர்ந்து எழுந்த இன்னொரு பாஜக எம்.பியான உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஹரிஷ் திரிவேதி ''மத்திய அரசு இதற்கான விவரங்களை வைத்து இருக்கிறதா? எத்தனை பேர் செல்பி நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று மத்திய அரசுக்கு தெரியுமா? செல்பி மோகத்தால் பலர் கஷ்டப்படுகிறார்கள் என்பது அரசுக்கு தெரியுமா?'' என்றார். இவரின் இந்த பேச்சை பார்த்து மத்திய பாஜக எம்.பிக்கள் திகைத்து போனார்கள்.

    பதில் சொன்னார்

    பதில் சொன்னார்

    இதையடுத்து அப்னா தல் கட்சியை சேர்ந்த குடும்பம் மற்றும் சுகாதார முன்னேற்றத்திற்கான மத்திய இணையமைச்சர் அனுப்பிரியா பட்டேல் ''செல்பி என்பது நோய் கிடையாது. உலக சுகாதார நிறுவனம் செல்பி எடுப்பதை எங்கும் நோயாக வரையறுக்கவில்லை. அதேபோல் இதை ஒரு குறைபாடு என்றும் உலக சுகாதார நிறுவனம் கூறவில்லை'' என்று கூறினார்.

    பெரிய வைரல்

    இந்த விவாதம் இணையத்தில் பெரிய வைரலானது. பலர் இதை வைத்து நிறைய மீம்ஸ் போட்டு வருகிறார்கள். அட அப்படி பார்த்தா நம்ம பிரதமர் மோடி கூட ஒரு விதத்தில் போட்டோ எடுக்க அடிமையாகிதான் இருக்கிறார். அப்ப அவரையும் இந்த செல்பி நோய் தாக்கிடுச்சா பாஸ்? என்று பலர் பல விதமாக கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

    English summary
    Two Bharatiya Janata Party (BJP) parliamentarians – one each from UP and Bihar – have found a serious issue to address and have put their own party’s government at the Centre in some discomfort and the social media amused.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X