டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

படுமோசம்.. லோக் சபாவில் தொடர்ந்து சரிவை சந்திக்கும் பாஜக.. இப்போதைய எம்.பி பலம் என்ன தெரியுமா?

பாஜகவில் கூட்டணியில் இருந்து ஆர்எல்எஸ்பி கட்சி விலகியதை அடுத்து, லோக் சபாவில் பாஜக கூட்டணியின் பலம் மேலும் குறைந்து உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    கூட்டணியில் இருந்து வெளியேறிய ஆர்எல்எஸ்பி... பாஜகவின் பலம் மேலும் குறைந்தது- வீடியோ

    டெல்லி: பாஜகவில் கூட்டணியில் இருந்து ஆர்எல்எஸ்பி கட்சி விலகியதை அடுத்து, லோக் சபாவில் பாஜக கூட்டணியின் பலம் மேலும் குறைந்து உள்ளது.

    பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ராஷ்டிரிய லோக் சமதா பார்ட்டி ( RLSP - Rashtriya Lok Samta Party ) விலகுவதாக அறிவித்துள்ளது. இதனால் பாஜகவிற்கு லோக் சபாவில் மீண்டும் பெரும்பான்மை போய் இருக்கிறது.

    2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு போதிய இடம் ஒதுக்காத காரணத்தால் இந்த கூட்டணி பிளவு ஏற்பட்டு இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி இருக்கும் பாஜகவிற்கு இது பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    மத்திய இணையமைச்சர் பதவியிலிருந்து குஷ்வாஹா ராஜினாமா.. ஆர்.எல்.எஸ்.பி- பாஜக கூட்டணி உடைந்தது! மத்திய இணையமைச்சர் பதவியிலிருந்து குஷ்வாஹா ராஜினாமா.. ஆர்.எல்.எஸ்.பி- பாஜக கூட்டணி உடைந்தது!

    பாஜகவின் தொடக்க பலம்

    பாஜகவின் தொடக்க பலம்

    மத்தியில் பாஜக கட்சி ஆட்சி அமைத்த போது 282 உறுப்பினர்கள் இருந்தார்கள். தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைத்தது. கடந்த 30 வருடங்களில் இப்படி ஒரு கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது இல்லை. ஆனால் இன்று பாஜக இப்போது இப்படி மோசமான நிலைக்கு தள்ளப்படும் என்று அப்போது யாரும் நினைக்கவில்லை.

    தொடர் தோல்வியால் குறைந்தது

    தொடர் தோல்வியால் குறைந்தது

    அதன்பின் தொடர் தோல்விகள் காரணமாக பாஜகவின் பலம் நாடாளுமன்றத்தில் குறைந்தது. 2014க்கு பின் இந்தியாவில் மொத்தம் 30 லோக் சபா இடைத்தேர்தல் நடந்தது. இதில் மொத்தமாக 6ல் மட்டுமே பாஜக வென்று இருக்கிறது. காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணிதான் 20 தொகுதிகளில் வென்று இருக்கிறது. இது போக 4 இடங்களில் மாநில கட்சிகள் தனியாக வென்றுள்ளது.

    காலையில் என்ன பலம் இருந்தது

    காலையில் என்ன பலம் இருந்தது

    இதனால் பாஜகவின் பலம் 269ஆக குறைந்தது. அதாவது பாஜக 282ல் இருந்து 269 இடங்களை மட்டுமே தற்போது கொண்டு இருக்கிறது. இதனால் பாஜக தனிப்பெரும்பான்மையை இழந்து தற்போது கூட்டணி கட்சிகளின் உதவியுடன் ஆட்சி நடத்தி வருகிறது. பெரும்பான்மைக்கு பாஜவிற்கு இன்னும் 4 இடங்கள் தேவை. இதில் மூன்று இடங்களை ராஷ்டிரிய லோக் சமதா பார்ட்டி ( RLSP - Rashtriya Lok Samta Party ) அளித்து வந்தது.

    விலகல்

    விலகல்

    இந்த நிலையில் ராஷ்டிரிய லோக் சமதா பார்ட்டியை சேர்ந்த மூன்று பேரும் பாஜக கூட்டணியில் இருந்து விலகி இருக்கிறார்கள். அதோடு அந்த கட்சியின் தலைவர் உபேந்திர குஷ்வாஹா மத்திய இணையமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். இதனால் பாஜகவின் பலம் லோக் சபாவில் 269 ஆக உள்ளது. அதே சமயம் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள வேறு சில கட்சிகள் பாஜகவிற்கு ஏற்கனவே ஆதரவு அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    BJP led NDA's loses its strength in Lok Sabha after Rashtriya Lok Samta Party quits from the alliance.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X