டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தம்மாண்டுனு நெனக்காதீங்க.. எபோலா, கொரோனாவைவிட மோசமான சப்பரே வைரஸ்.. அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

Google Oneindia Tamil News

டெல்லி: சப்பரே எனப்படும் எபோலா எனும் கொடிய வைரஸானது மனிதர்களிடம் பரவுவதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளது. சப்பரே வைரஸ் என்றால் என்ன?

கடந்த 2004இல் பரவியதை போல் இது பரவக் கூடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள். இது ரத்தக் கசிவு காய்ச்சலை ஏற்படுத்தக் கூடியது. இது பொதுவாக எலிகளில் இருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பரவுகிறது.

இந்த நோய் பாதிப்புக்குள்ளான எலிகளின் சிறுநீர், நீர்த்துளிகள், மலம் வழியாக இந்த வைரஸ் பரவும். இது காற்று வழியாக பரவும் நோய் அல்ல.

தலைவலி

தலைவலி

இந்த நோய் வந்தால் காய்ச்சல், தலைவலி, வயிற்றுவலி, மூட்டு, தசை வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, ஈறுகளில் ரத்த போக்கு, தடிப்புகள், எரிச்சல் ஆகியவை அறிகுறிகளாகும். இந்த நோய்க்கும் மருந்துகள் இல்லை. இந்த நோய்க்கும் கொரோனாவை போல் துணை சிகிச்சைகளே வழங்கப்படுகின்றன.

வலி நிவாரணம்

வலி நிவாரணம்

அதாவது நீரேற்றம், வலி நிவாரணம், ரத்த மாற்றம் உள்ளிட்ட சிகிச்சைகள்தான் வழங்க முடியும். இந்த நோய் முதலில் 2003-ஆம் ஆண்டு பொலிவியாவில் சப்பரே மாகாணத்தில் முதல்முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் இந்த வைரஸுக்கு மாகாணத்தின் பெயரே சூட்டப்பட்டது.

மனிதன்

மனிதன்

இந்த நோய் பாதிப்பு ஏற்பட்ட 5 பேரில் இரு மருத்துவர்களும் ஒரு நோயாளியும் பலியானது குறிப்பிடத்தக்கது. சில நாட்களுக்கு முன்பு நடந்த அமெரிக்க நோய் தடுப்பு ஆராய்ச்சியாளர்களின் கூட்டத்தின் போது 2019-ஆம் ஆண்டு பொலிவியாவில் சப்பரே வைரஸ் தொற்று பரவியதை ஆய்வு செய்த போது அது ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு பரவுவதை கண்டறிந்தார்கள்.

வைரஸ்

வைரஸ்

இந்த வைரஸ் நேரடியாக ரத்தத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதாலும், ரத்தக் கசிவை உண்டாக்குவதாலும் எபோலா, கொரோனாவை விட மிகவும் ஆபத்தானவை என கூறப்படுகிறது. இந்த நோயை கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதல்ல என்பதால் மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

English summary
What is Chapare Virus? Know how it is formed, origin country, death rate and symptoms in Tamil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X