டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நினைத்த நேரத்தில் கார் ஓட்ட முடியாது.. நாளெல்லாம் காத்திருக்கனும்.. டெல்லியில் வந்த ரேஷன் நடைமுறை!

Google Oneindia Tamil News

Recommended Video

    No 'good air' in national capital | டெல்லியில் பொறுத்துக் கொள்ள முடியாத காற்று மாசு !

    டெல்லி: டெல்லியில் காற்று மாசுபாடு வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதால், 'கார் ரேஷன்' நடைமுறையை ஆளும் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.

    டெல்லியில் வாகனப் போக்குவரத்தை குறைத்து விட வேண்டும் என்ற நோக்கத்துடன், ஆட்-ஈவன் (Odd-Even) என்ற இந்த திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

    What is Delhi’s Odd-even Car Rationing Scheme?

    இன்று ஆரம்பித்து உள்ள இந்த கெடுபிடி வரும் 15ஆம் தேதி வரை நீடிக்கும் என்று அரசு அறிவித்துள்ளது.

    • அதாவது வாகனங்களின் பதிவு எண், 2, 4, 6, 8 போன்ற இரட்டைப் படை (Even) எண்களில் முடிவடைந்தால் அந்த வாகனங்களை, Even நாட்களில் மட்டுமே சாலையில் ஓட்ட முடியும்.
    • 3, 5, 7, 9 போன்ற ஒற்றைப்படை (Odd) எண்களில் முடிவடைந்தால் அந்த கார்கள், அதுபோன்ற தினங்களில் தான் சாலையில் இயங்க முடியும்.
    • இந்த விதிமுறை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அமலில் இருக்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் விதிவிலக்கு.
    • அதேநேரம் இருசக்கர வாகனங்களுக்கு இந்த விதி பொருந்தாது. அதேபோன்று எலக்ட்ரிக் வாகனங்களுக்கு நெறிமுறை பொருந்தாது.
    • 2016ம் ஆண்டில் இது போன்ற ஒரு திட்டம் கொண்டுவரப்பட்டது. அப்போது எரிவாயு சிலிண்டர் மூலமாக இயங்கக்கூடிய கார்களுக்கு இந்த விதியிலிருந்து விலக்கு வழங்கப்பட்டது, ஆனால் இப்போது எரிவாயு மூலம் இயங்கக்கூடிய வாகனங்களுக்கும் விலக்கு கிடையாது.
    • அரசின் இந்த விதிமுறையை மீறி இயங்கக்கூடிய வாகனங்களுக்கு ரூ.4000 வரை அபராதம் விதிக்கப்படும்,
    • இதில் மற்றொரு சலுகையும் செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை தவறான பதிவு எண் இருந்தால் கூட பெண்கள் மட்டுமே காரை இயக்கினால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது. கூடவே ஆண் யாராவது அமர்ந்திருந்தால் அப்போது அபராதம் கேரண்டி.
    • மேலும் பள்ளி குழந்தைகளை அழைத்துச் செல்லக்கூடிய தனியார் பஸ்களும் இதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. குடியரசுத் தலைவர், பிரதமர் போன்ற விஐபிகளுக்கு இதில் விலக்கு உண்டு.

    இன்றைய தினம், 4ம் தேதி என்பதால், இது Even நாளாகும். எனவே, முதல்வர் கேஜ்ரிவால் 2ல் முடிவடையும் பதிவு எண் கொண்ட வாகனத்தில் இன்று அலுவலகம் வந்திருந்தார்.

    உலகிலேயே மிக மோசம்.. என்னதான் நடக்கிறது தலைநகரில்?.. டெல்லியில் காற்று மாசடைய இதுதான் காரணம்!உலகிலேயே மிக மோசம்.. என்னதான் நடக்கிறது தலைநகரில்?.. டெல்லியில் காற்று மாசடைய இதுதான் காரணம்!

    English summary
    What is Delhi’s Odd-even Car Rationing Scheme? here is the full detail. What is Delhi’s Odd-even Car Rationing Scheme? here is the full detail.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X