டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாஜக ஆட்சிக்கு ஆபத்தா.. காங்கிரசுடன் சமாதானம்.. அனில் அம்பானியே சிக்னல் கொடுத்துவிட்டாரே!

தேசிய அரசியலில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை பார்த்து ரிலையன்ஸ் நிறுவன தலைவர் அனில் அம்பானி தனது திட்டங்களை மாற்றி இருக்கிறார் என்கிறார்கள்.

Google Oneindia Tamil News

டெல்லி: தேசிய அரசியலில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை பார்த்து ரிலையன்ஸ் நிறுவன தலைவர் அனில் அம்பானி தனது திட்டங்களை மாற்றி இருக்கிறார் என்கிறார்கள்.

ஒருவழியாக ஒரு மாதமாக நடந்த லோக்சபா தேர்தல் தற்போது முடிந்து இருக்கிறது. நேற்று முதல்நாள் தேர்தல் முடிந்ததை அடுத்து நேற்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியானது.

இந்த கருத்து கணிப்புகள் என்னவோ பாஜக கட்சிக்குத்தான் ஆதரவாக வந்தது. அதாவது பாஜக கட்சி லோக்சபா தேர்தலில் அதிக இடங்களில் வென்று கூட்டணியாக ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

கருத்துக்கணிப்பை ஏற்கமுடியாது.. 22லும் நாங்கள்தான்.. ஆட்சியும் எங்களுக்குதான் பொன்முடி நம்பிக்கை! கருத்துக்கணிப்பை ஏற்கமுடியாது.. 22லும் நாங்கள்தான்.. ஆட்சியும் எங்களுக்குதான் பொன்முடி நம்பிக்கை!

ஆனால் உண்மை என்ன

ஆனால் உண்மை என்ன

ஆனால் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காது. கருத்து கணிப்புகள் கூறும் அளவிற்கு மெஜாரிட்டி கிடைக்காது என்கிறார்கள். 2004 கருத்து கணிப்பு போல இந்த கணிப்பும் பொய்யாகவே வாய்ப்பு இருக்கிறது. காங்கிரஸ் கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு உள்ளது என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

என்ன செய்கிறார்

என்ன செய்கிறார்

இந்த நிலையில் தேசிய அரசியலில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை பார்த்து ரிலையன்ஸ் நிறுவன தலைவர் அனில் அம்பானி தனது திட்டங்களை மாற்றி இருக்கிறார் என்கிறார்கள். அனில் அம்பானி இந்திய அரசியலில் எப்படியோ ஒரு வகையில் எப்போதும் அழுத்தம் அளித்து வருபவர். முக்கியமாக தற்போது இவர் சில பாஜக கட்சி தலைவர்களுக்கு நெருக்கமாக இருக்கிறார்.

காங்கிரஸ் கட்சிக்கு எதிர்

காங்கிரஸ் கட்சிக்கு எதிர்

அதே சமயம் காங்கிரஸ் கட்சி இவரை நேரடியாக எதிர்த்து வருகிறது. ரபேல் ஒப்பந்தத்தில் ஆப்செட் பார்ட்னராக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனம் சேர்க்கப்பட்டு உள்ளது. இதில் முறைகேடு நடந்து இருப்பதாக ராகுல் குற்றஞ்சாட்டி இருந்தார். அதன்படி, அனில் அம்பானிக்கு மோடி 30,000 கோடி ரூபாயை கொடுத்துவிட்டார். இதில் மிகப்பெரிய ஊழல் நடந்து இருக்கிறது என்று ராகுல் குற்றஞ்சாட்டி இருந்தார்.

நிலைமை சரியில்லை

நிலைமை சரியில்லை

இதற்கு எதிராக அனில் அம்பானி சார்பாக உச்ச நீதிமன்றத்தில் 5000 கோடி ரூபாய் கேட்டு அவமதிப்பு வழக்கும் தொடுக்கப்பட்டது. இதனால் காங்கிரஸ், அனில் அம்பானி இடையே கடுமையான மோதல் நிலவி வந்தது. தற்போது தேசிய அரசியலில் ஏற்பட்டு இருக்கும் மாற்றம் காரணமாக அனில் அம்பானி காங்கிரஸ் கட்சியுடன் சமாதானம் செய்ய தொடங்கி இருப்பதாக கூறுகிறார்கள்.

வாபஸ் பெறுகிறார்

வாபஸ் பெறுகிறார்

தேர்தல் முடிவுகள் மாறலாம் என்பதால் இந்த மாற்றம் என்கிறார்கள். இந்த நிலையில் ரபேல் வழக்கில் காங்கிரஸ் கட்சி மீதும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீதும் தொடுத்து இருந்த அவதூறு வழக்கை அனில் அம்பானி வாபஸ் பெற்று இருக்கிறார். பாஜக கட்சிக்கு எதிரான சூழ்நிலை நிலவுவதால் அனில் இப்படி முடிவு எடுத்து இருப்பதாக தேசிய அரசியலில் பேசிக்கொள்கிறார்கள்.

English summary
What is happening? Anil Ambani goes against BJP party for the first time in Rafale Deal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X