டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்காவை அலற விட்டு லைம் லைட்டுக்கு வந்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயின்.. பயனும் பக்க விளைவும்!

Google Oneindia Tamil News

டெல்லி: மலேரியாவுக்கு கொடுக்கப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் எனும் மருந்து என்றால் என்ன? அது கொரோனாவை அழிக்கும் வல்லமை கொண்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Recommended Video

    Trump says they need hydroxychloroquine or India will face retaliation

    ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் எனும் மருந்தை இந்தியா கொடுக்காவிட்டால் உரிய பதிலடி அளிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டும் தொனியில் பேசியுள்ளதை அடுத்து அந்த மருந்தின் பெயர் தற்போது அதிகமாக பேசப்பட்டு வருகிறது. உண்மையிலேயே இந்த மருந்துக்கு நோய்களை குணப்படுத்தும் திறன் உள்ளதா, தொற்று நோயிலிருந்து மனிதனை காக்கும் அற்புதத்தை நிகழ்த்துமா என பல்வேறு கேள்விகள் எழுகின்றன.

    நாட்டில் 3ல் 2 பங்கு கொரோனா பாதிப்பு 31 மாவட்டங்களில் தான்.. அத்தனைக்கும் உள்ள ஒற்றுமை.. ஷாக் தகவல் நாட்டில் 3ல் 2 பங்கு கொரோனா பாதிப்பு 31 மாவட்டங்களில் தான்.. அத்தனைக்கும் உள்ள ஒற்றுமை.. ஷாக் தகவல்

    பல்கலைக்கழகம்

    பல்கலைக்கழகம்

    ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் என்பது மலேரியா காய்ச்சலுக்காக பயன்படுத்தப்படும் ஒரு மருந்தாகும். இந்த மருந்து இரண்டாம் உலக போரின் போது கண்டுபிடிக்கப்பட்டது. இது ருமடாய்டு ஆர்த்ரைட்டீஸ் நோய்க்கும் கொடுக்கப்படுகிறது. இந்த ஆன்டி மலேரியா மருந்தை உட்கொண்டால் தசை மற்றும் மூட்டுகளில் வலி, தோலில் அரிப்புகள், இதயம் மற்றும் நுரையீரல் அழற்சி, காய்ச்சல், சோர்வு ஆகிய அறிகுறிகளை காட்டும் என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

    கட்டுப்பாட்டு ஆணையம்

    கட்டுப்பாட்டு ஆணையம்

    ஹைட்ராக்ஸிகுளோரோகுயின், பிளாக்குயூனில் என்ற பிராண்டின் பெயரில் பொதுவான மருந்தாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த மருந்தை கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் நோய் அறிகுறிகளற்ற சுகாதாரப் பணியாளர்களுக்கு நோய் வராமல் தடுக்க அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது. தேசிய டாஸ்க் போர்ஸால் பரிந்துரை செய்யப்பட்ட இந்த மருந்தை அவசர நிலைகளில் மட்டுமே பயன்படுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

    நோய் தொற்று

    நோய் தொற்று

    கோவிட் 19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களைப் பார்த்துக் கொள்ளும் பணியில் உள்ள, நோய் அறிகுறிகளற்ற சுகாதாரப் பணியாளர்களுக்கு, இந்த நோய்த் தொற்றுப் பரவாமல் இருக்க hydroxychloroquine கொடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தை பயன்படுத்தினால் இதயத்தில் அடைப்பு, மயக்கம், குமட்டல், தலைச்சுற்றல், வாந்தி, வயிற்றுபோக்கு உள்ளிட்ட பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.

    சிகிச்சை

    சிகிச்சை

    கடந்த மார்ச் மாதம் அரிசோனாவில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தின் காம்பினேஷன் கொண்ட குளோரோகுயின் பாஸ்பேட் மருந்தை கணவன், மனைவி இருவரும் உட்கொண்டனர். மீன் தொட்டிகளை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் இந்த மருந்தை உட்கொண்டதால் கணவன் பலியாகிவிட்டார். மனைவி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றார்.

    பக்கவிளைவுகள்

    பக்கவிளைவுகள்

    பிரான்ஸ் நாட்டில் 40 கொரோனா நோயாளிகளுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து கொடுக்கப்பட்டது. இதில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு 3 முதல் 6 நாட்களில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. மலேரியா தடுப்பு மருந்து Sars Cov 2 தொற்று உடலில் உள்ள செல்களில் வேகமாக நுழைவதை தடுக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் சீனாவில் ஒரு நோயாளிக்கு ஹைட்ராக்ஸிகுளோராகுயின் கொடுக்கப்பட்டு நிலைமை மோசமானது. மேலும் 4 நோயாளிகளுக்கு கல்லீரல் கோளாறு, வயிற்றுபோக்கு ஏற்பட்டது. ஒரு நோயை தடுக்க பயன்படுத்தப்படும் ஒரு மருந்து சிறந்த முறையில் சோதிக்கப்படாமல் பயன்படுத்தினால் அது பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    English summary
    Here are the details of Hydroxychloroquine which came to lime light after US President Trump hints India about retaliation.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X