Stealth Omicron: வேகமாக பரவும் புதிய வேரியண்ட்.. ஆர்டி பிசிஆர் சோதனையிலும் சிக்காது.. ஏன் தெரியுமா?
டெல்லி: 40க்கும் மேற்பட்ட நாடுகளில் வேகமாக பரவி வரும் புதிய வேரியண்டான stealth omicron ஐரோப்பிய நாடுகளில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸின் வேரியண்ட்டான ஓமிக்ரான் கடந்த நவம்பர் மாதம் முதல் தென்னாப்பிரிக்காவிலிருந்து பரவி வருகிறது என்பதை அனைவரும் அறிவோம். தற்போது இந்தியாவில் 4000- க்கும் மேற்பட்டோர் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
டெல்டா வேரியண்ட்டை விட வேகமாக ஓமிக்ரான் பரவினாலும் இது யாருக்கும் எந்தவித தீவிர பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பிரிட்டனில் புதிய வேரியண்ட்டான BA.2 கண்டறியப்பட்டுள்ளது.
ராகு கேது பெயர்ச்சி எப்போது? எந்த ராசிக்காரர்களுக்கு பாதிப்பு? யாருக்கு அதிர்ஷ்டம் தேடி வரும்

புதிய வேரியண்ட்
இது stealth omicron என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த வேரியண்ட் 40 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. டென்மார்கில் கடந்த 20-ஆம் தேதி பதிவான மொத்த கொரோனா கேஸ்களில் 50 சதவீதம் புதிய வேரியண்ட் கேஸ்கள் ஆகும். பிரிட்டன், டென்மார்க் ஆகிய நாடுகளை தவிர ஸ்வீடன், நார்வே, இந்தியாவிலும் இந்த புதிய வேரியண்ட் BA.2 கண்டறியப்பட்டுள்ளது.

உருமாற்றங்கள்
உலக சுகாதார நிறுவனத்தை பொருத்தமட்டில் ஓமிக்ரான் வேரியண்ட் மூன்று விதமான உருமாற்றங்களை கொண்டுள்ளது. அவை BA.1, BA.2, BA.3 ஆகியவை ஆகும். இதில் ஓமிக்ரான் மூலம் BA.1 துணை வேரியண்ட் உலகம் முழுவதும் பரவி வருகிறது. BA.2 தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்தியாவும், பிரான்ஸும் இந்த புதிய வேரியண்ட் பழைய BA.1 ஐ விட வேகமாக பரவலாம் என கூறுகின்றன.

சளி பரிசோதனை
ஆர்டி பிசிஆர் மூலம் மேற்கொள்ளப்படும் சளி பரிசோதனையில் எஸ் ஜீன் இல்லாமல் இருந்தால் அது BA.1 வேரியண்ட் ஆகும். இதன் மூலம் ஓமிக்ரான் எளிதாக கண்டறியப்பட்டு வருகிறது. ஆனால் BA.2 வேரியண்டில் BA.1 வேரியண்டை போல் இல்லாததால் அதை ஆர்டி பிசிஆரில் கண்டறிவது கடினமாகிறது.

எஸ் ஜீன் இல்லை
அதாவது எஸ் ஜீன் இல்லாதது கண்டறிய முடியவில்லை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எல்லா வைரஸ்களும் உருமாறிக் கொண்டே இருப்பது இயற்கையான ஒன்று என்கிறார்கள். பிரிட்டனில் மட்டும் BA.2 கேஸ்கள் 426 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.