• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

தடுப்பூசியை 'லேசா' நினைச்சுடாதீங்க.. அடுத்து இருக்கு 'ஆப்பு'.. எத்தனை கோடி தெரியுமா?

|

டெல்லி: இந்தியாவில் 18 வயது நிரம்பிய ஒவ்வொரு குடிமகனுக்கும் தடுப்பூசி போடுவதற்கான செலவு என்ன தெரியுமா? தொடர்ந்து படிங்க..

மக்கள் தங்கள் தினசரி வாழ்க்கையை இழந்து திக்கற்று நிற்க வைத்துவிட்டது கொரோனா 2ம் அலை. எங்கு திரும்பினாலும் கொரோனா பாதிப்புகள்.. மாஸ்க் அணியவில்லை மாட்ட வேண்டியது தான்.

தமிழகத்திலாவது ஆக்சிஜன், ரெமிடிசிவர் போன்றவற்றுக்கு பற்றாக்குறை என்ற நிலை இப்போது வரை இல்லாமல் இருக்கிறது. ஆனால், தலைநகர் தொடங்கி பல மாநிலங்கள் உயிர் மூச்சுக் காற்று போதாமல் தவித்து வருகின்றன.

தமிழகத்திற்கு 20 லட்சம் தடுப்பூசிகள் அவசரமாக தேவை - பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம் தமிழகத்திற்கு 20 லட்சம் தடுப்பூசிகள் அவசரமாக தேவை - பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்

 ஜிடிபி 0.36%

ஜிடிபி 0.36%

இப்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. கொரோனா உள்ளிட்ட பல மாநிலங்கள் கொரோனா தடுப்பூசி இலவசம் என்று அறிவித்துவிட்டன. எனினும், ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் கொரோனா தடுப்பூசி போட அரசுக்கு எவ்வளவு செலவாகும் தெரியுமா? India Ratings and Research estimate தகவலின் படி, 18 வயது தாண்டிய ஒவ்வொரு குடிமகனுக்கும் தடுப்பூசி செலுத்த குறைந்தபட்சம் ரூ .67,193 கோடி (billion 9 பில்லியன்) செலவிட வேண்டியிருக்கும். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.36% ஆகும்.

 இதுக்கு எவ்ளோ ரேட் தெரியுமா?

இதுக்கு எவ்ளோ ரேட் தெரியுமா?

18 முதல் 45 வயதிற்குட்பட்டோருக்கு தடுப்பூசி போட, ரூ.46,323 கோடி அல்லது செலவாகும். இது தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.24% ஆகும். மாநில அரசுகள் இந்த செலவில் பெரும்பகுதியை ஏற்கும். மத்திய அரசை விட அதிக விகிதத்தில் கொள்முதல் செய்யப்படும். சுகாதார ஊழியர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டத்தைத் தொடர மத்திய அரசு ரூ .20,870 கோடி அல்லது தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.12% செலவிட வேண்டும்.

 யார் டாப்?

யார் டாப்?

இதன் தாக்கம் எல்லா மாநிலங்களிலும் ஒரே போன்று இருக்காது. மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பீகார் (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.60%) அதிகம் செலவு செய்யும். அதைத் தொடர்ந்து உத்தரபிரதேசம் (0.47%), ஜார்க்கண்ட் (0.37%), மணிப்பூர் (0.36%), அசாம் (0.35%), மத்தியப் பிரதேசம் (0.30%) ) மற்றும் ஒடிசா (0.30%) ஆகிய மாநிலங்கள் செலவு செய்ய வேண்டியிருக்கும்.

 மாநிலங்கள் நிலைமை?

மாநிலங்கள் நிலைமை?

மத்திய அரசு கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு வரி உட்பட ஒரு டோஸுக்கு ரூ .236 என்றும் கோவாக்சின் தடுப்பூசிக்கு ஒரு டோஸுக்கு ரூ .243.67 என்ற விலையில் மத்திய அரசு கொள்முதல் செய்வதாக Ind-Ra மதிப்பிடுகிறது. மாநிலங்களைப் பொறுத்தவரை, கோவிஷீல்ட் ஒரு டோஸுக்கு ரூ.400 என்று கணக்கிடப்பட்டுள்ளது.

 மீண்டும் துண்டு விழுமா?

மீண்டும் துண்டு விழுமா?

ஆனால் ... சீரம் இன்ஸ்டிடியூட் மற்றும் பாரத் பயோடெக் ஆகியவை தேவையை பூர்த்தி செய்ய முடியாததால் உண்மையான செலவு அதிகமாக இருக்கலாம். இதனால், இந்தியா மேற்கொண்டு தடுப்பூசிகளை வெளிநாட்டிலிருந்து வாங்க வேண்டியிருக்கும். அவை அதிக விலை கொண்டதாக இருக்கலாம். மேலும், இந்த தடுப்பூசிகளால் உருவாக்கப்படும் ஆன்டிபாடிகள் 12-18 மாதங்களுக்கு மட்டுமே நீடிக்கும் என்பதால், மத்திய மற்றும் மாநில பட்ஜெட்டில் மீண்டும் துண்டு விழும் அபாயம் ஏற்படலாம்.

English summary
What is the cost of vaccinating every Indian adult - கொரோனா
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X