டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"அவசரம் ஏன்?" ஒரே நாளில் தேர்தல் ஆணையர் நியமனம் ஏன்! சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி

Google Oneindia Tamil News

டெல்லி: தேர்தல் ஆணையரை அவசர அவசரமாக நியமித்தது ஏன் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

இந்தியத் தேர்தல் ஆணையராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அருண் கோயல் கடந்த சில நாட்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார். இதற்கிடையே இது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் முக்கிய கேள்விகளை எழுப்பி உள்ளது.

இது தொடர்பாக நேற்று நடந்த வழக்கு விசாரணையில் அருண் கோயல் நியமனம் தொடர்பான ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆன்லைன் மூலமாக மருத்துவ கவுன்சில் தேர்தல்.. தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு ஆன்லைன் மூலமாக மருத்துவ கவுன்சில் தேர்தல்.. தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

 உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

அதன்படி இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், அருண் கோயல் நியமனம் தொடர்பான விவரங்களை சுப்ரீம் கோர்டில் மத்திய அரசு தாக்கல் செய்தது. இதற்கிடையே தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. பல மாதங்களாகத் தேர்தல் ஆணையர் பதவி காலியாக இருந்த நிலையில், அதை நிரப்பாதது ஏன் என்று சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது. மேலும், தேர்தல் ஆணையர் அருண் கோயல் நியமனம் அவசரமாக நடந்தது ஏன் என்றும் சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.

 சரமாரி கேள்வி

சரமாரி கேள்வி

நீதிபதிகள் மேலும் கூறுகையில், "நான்கு பெயர்கள் ஷாட்லிஸ்ட் செய்யப்பட்டு இருந்த நிலையில், அதில் இருந்து ஒருவரைச் சட்ட அமைச்சர் தேர்ந்தெடுத்துள்ளார். அந்த கோப்பு நவம்பர் 18ஆம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது. அதே நாளில் அனைத்தும் நடக்கிறது. பிரதமர் கூட அதே நாளில் தேர்தல் ஆணையரைப் பரிந்துரைக்கிறார். நாங்கள் இந்த விவகாரத்தில் அரசுடன் மோதல் போக்கை வைக்க விரும்பவில்லை. ஆனால், இது அவசரத்தில் செய்யப்பட்ட நியமனமா? என்ன இந்த அவசரம்?

 24 மணி நேரத்திற்குள்

24 மணி நேரத்திற்குள்

தேர்தல் ஆணையர் பதவி கடந்த மே 15ஆம் தேதி முதல் காலியாக உள்ளது. மே முதல் நவம்பர் வரை இந்த பதவி காலியாகவே இருந்தது. அப்போதெல்லாம் இந்த பதவி நிரப்பப்படவில்லை. ஆனால், இந்த வழக்கை நாங்கள் விசாரிக்கத் தொடங்கியதும் மின்னல் வேகத்தில் நியமனம் நடந்து உள்ளது. தேர்தல் ஆணையரை நியமிக்கும் ஒட்டுமொத்த செயல்முறையும் அனைத்தும் ஒரே நாளில் நடந்து உள்ளது. 24 மணி நேரத்திற்குள்ளாக நியமனம் நடந்து உள்ளது. மிக வேகமாக இந்த செயல்முறை முடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

எப்படி

எப்படி

என்ன மாதிரியான செயல்முறை கீழ் தேர்தல் ஆணையர் தேர்வு செய்யப்பட்டார். எந்த அடிப்படையில் 4 பெயர்களின் பெயர்கள் முதலில் பரிந்துரை செய்யப்பட்டது. எங்களுக்கு இது நிஜமாகவே புரியவில்லை. இந்த நான்கு பெயர்களும் கவனமாகக் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டார்களா? தேர்வு செயல்முறையில் நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம்" என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த விவகாரத்தை நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு மூன்றாவது நாளாக இன்று விசாரிப்பது குறிப்பிடத்தக்கது.

கேள்வி

கேள்வி

முன்னதாக நேற்றைய தினம் தான் அருண் கோயல் நியமனம் தொடர்பாக நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது. அருண் கோயல் சமீபத்தில் தான் விருப்ப ஓய்வைப் பெற்றிருந்த நிலையில், அவர் உடனடியாக தேர்தல் ஆணையத்தில் நியமிக்கப்பட்டது குறித்தும் கேள்வி எழுப்பி இருந்தது. மேலும், அருண் கோயல் நியமனம் தொடர்பான ஆவணங்களையும் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி இன்றைய தினம் அந்த ஆவணங்களை மத்திய அரசு சமர்ப்பித்து இருந்தது. அருண் கோயல் நவம்பர் 21ஆம் தேதி தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்றார். பஞ்சாப் கேடரைச் சேர்ந்த 1985 பேட்ச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான இவர், 37 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வீஸில் இருந்தவர்.

 பிரசாந்த் பூஷண்

பிரசாந்த் பூஷண்

மத்திய கனரக தொழில்துறை அமைச்சகத்தின் செயலாளராக பணிபுரிந்த இவர் சமீபத்தில் தான் விருப்ப ஓய்வைப் பெற்றார். தற்போது தலைமைத் தேர்தல் ஆணையராக உள்ள ராஜீவ் குமாரின் பதவிக்காலம் பிப். 2025 உடன் நிறைவடையும் நிலையில், அடுத்து இவர் தலைமைத் தேர்தல் ஆணையராகும் வாய்ப்புகள் மிக அதிகம். இந்த நியமனத்தை எதிர்த்து சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷண் வழக்கு தொடரந்து உள்ளார். அதில்,அவர், "கடந்த வாரம் பெரிய நியமனம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வரும் வரை மத்திய அரசு இந்த விவகாரத்தில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 விருப் ஓய்வு

விருப் ஓய்வு

கடந்த வாரம், அருண் கோயல் பணியாற்றி வந்த நிலையில் அவருக்கு விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டு, அவர் திடீரென தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டு உள்ளார் என்றும் பிரசாந்த் பூஷண் தெரிவித்தார். விருப்ப ஓய்வு உள்ளிட்ட தனிப்பட்ட விவகாரங்கள் குறித்து விசாரிப்பது சரியல்ல என்று அரசு வழக்கறிஞர் ஜெனரல் ஆர்.வெங்கடரமணி வாதிட்டார். இருப்பினும், இதை ஏற்க மறுக்க நீதிபதிகள், செயல்முறை குறித்து தெரிந்து கொள்ள விரும்புவதாகவும் இது தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்யுமாறும் நீதிமன்றம் வலியுறுத்தி இருந்தது.

 சந்தேகம் இல்லை

சந்தேகம் இல்லை

இன்று ஆவணங்களைத் தாக்கல் செய்த மத்திய அரசு வழக்கறிஞர், முதலியில் மூத்த அதிகாரிகளின் பெயர் ஷார்லிஸ்ட் செய்து சட்ட அமைச்சருக்கு அனுப்பப்படும் என்றும் அதுவே பிரதமர் மோடிக்கு அனுப்பப்படும் என்று கூறி இருந்தனர். இதற்கு பதிலளித்த நீதிமன்றம், "நாங்கள் இந்த விவகாரத்தில் தவறு நடந்து உள்ளது என்று நாங்கள் கூறவில்லை ஆனால், இதுபோன்ற செயல்முறைகள் வெளிப்படைத் தன்மையுடன் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.

English summary
Supreme Court questioned what the "tearing hurry" was for the "super fast" appointment of ex-IAS officer Arun Goel.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X