டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

'ஃப்ளோசினாசினிஹிலிபிலிஃபிகேஷன்'.. இந்திய பொருளாதார நிலை இப்படி இருக்குங்க.. ஆர்பிஐ விளக்கம்!

Google Oneindia Tamil News

டெல்லி: பொருளாதார மந்தநிலை ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள் "ஃப்ளோசினாசினிஹிலிபிலிஃபிகேஷன்". என்ற வார்த்தையையும், பாங்லோசியன் முகத்தை காட்டவில்லை என்ற வார்த்தையையும் பயன்படுத்தி இருந்தனர்.

இந்திய பொருளாதார மிகவும் சிக்கலாகி கொண்டு இருப்பது குறித்து பணக்கொள்கை குறித்து முடிவெடுக்கும் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் சில தகவல்களை இந்த வாரம் தெரிவித்தனர்.

அவர்கள் பயன்படுத்திய வார்த்தைகளுக்கு அர்த்தங்களை டிக்ஸ்னரியிலும், கூகுளிலும் தேடி அலைந்துள்ளனர் நம்ம மக்கள்.

கூகுளில் தேடுகிறார்கள்

கூகுளில் தேடுகிறார்கள்

குறிப்பாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் பயன்படுத்திய வார்த்தைகள் குறித்து அர்த்தம் இன்னும் பலருக்கும் விளங்கி இருக்குமா என்பது கேள்விக்குறிதான். ஏனெனில் அதற்கு அர்த்தங்கள் தெரிந்தால் மட்டுமே இந்திய பொருளதாரம் எப்படி இருக்கிறது என்பது குறித்து ரிசர்வ் வங்கி என்ன நினைக்கிறது என்பதை சாமானியர்களும் எளிதாக புரிந்து கொள்ள முடியும்.

ரிசர்வ் வங்கி உறுப்பினர்

ரிசர்வ் வங்கி உறுப்பினர்

சரி இப்போது விஷயத்துக்கு வந்துவிடுவோம், பொருளாதார மந்த நிலை ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்த ரிசர்வ் வங்கி உறுப்பினர் சேடன் காடே, இந்தியாவில் பொருளாதார வளர்ச்சியின் மதிப்பீடுகள் துரதிர்ஷ்டவசமாக நியாயமான அளவிலான ஃப்ளோசினாசினிஹிலிபிலிஃபிகேஷனுக்கு உட்பட்டுள்ளன. இருந்த போதிலும் வளர்ச்சி அதிகரிக்கும்" என்று கூறியிருந்தார்.

18வது நூற்றாண்டு வார்த்தை

18வது நூற்றாண்டு வார்த்தை

இந்த "ஃப்ளோசினாசினிஹிலிபிலிஃபிகேஷன்" என்ற ஒரு வார்த்தை ஆக்ஸ்போர்டு அகராதியில் 18வது நூற்றாண்டின் மத்தியில் பயன்படாத ஒரு விஷயத்தை மதிப்பிடுவதற்காக பயன்படுத்தப்பட்டது. அதாவது எதற்கும் பயன்படாத விஷயத்தை மதிப்பிடவே இந்த வார்த்தையை பயன்படுத்தி உள்ளார்கள்.

சக்தி காந்த தாஸ்

சக்தி காந்த தாஸ்

இதேபோல் திங்கள் அன்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ், நாங்கள் பாங்லோசியன் முகத்தை பராமரிப்போம் என்றோ, ஒவ்வொரு விஷயத்தையும் சிரித்தே சமாளிப்போம் என்றோ சொல்லவில்லை என்றார். அவர் சொல்லிய பாங்லோசியன் முகம் என்பது குறித்து அகராதியில் தேடிய போது, பாங்லோசியன் வாழ்க்கை முறை என்பது தீவிர நம்பிக்கைகளில் ஒன்று . அதாவது எப்படி என்றால், "குறிப்பிட்ட விஷயத்தில் இதில் எது நடந்தாலும் சிறந்தது என்று தீவிரமாக நம்புவதுடன், அதை மாற்ற எந்த முயற்சியும் செய்ய வேண்டாம்" என்பதே பாங்லோசியன் வாழ்க்கை முறை நம்பிக்கையாகும். இதைத்தான் இவ்வளவு கடிமான மொழியில் ரிசர்வ் வங்கி ஆளுநர் கூறியுள்ளார்.

மந்த நிலைக்கு பல காரணம் இருக்கு

மந்த நிலைக்கு பல காரணம் இருக்கு

ரிசர்வ் வங்கி நிதி கொள்கை கூட்டத்தில் ரிப்போ வட்டியை குறைக்க முடிவு செய்து 35 அடிப்படை புள்ளிகள் குறைத்தது. அப்படி இருந்தும் பொருளாதார மந்த நிலையில் எந்த முன்னேற்றமும்இல்லை. இதற்கு பல காரணங்கள் உள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் கூறியுள்ளார்.

இந்த வார்த்தைகளைக் கேட்டதுமே அப்படியே தலை சுத்திருச்சு போங்க

English summary
what is the meaning of 'Floccinaucinihilipilification' The word used by RBI while talking about economic forecast
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X