டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நிறைவேறாத 2 பிளான்கள்.. திடீரென்று ஓய்வு பெறுவதாக அறிவித்த தோனி.. பரபரப்பு முடிவுக்கு என்ன காரணம்?

Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் தோனி திடீர் என்று ஓய்வு அறிவிப்பை வெளியிட்டது ஏன்? இதற்கு என்ன காரணம் என்ற கேள்விகள் எழுந்துள்ளது.

Recommended Video

    Dhoni Retirement அறிவிப்பை இப்போது வெளியிட்டது ஏன்

    இந்திய கிரிக்கெட் வீரர் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே இந்த அறிவிப்பை தோனி வெளியிட்டு இருக்கிறார்.

    கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் இந்த அறிவிப்பு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உலகம் முழுக்க முன்னணி கிரிக்கெட் வீரர்கள் தோனியின் முடிவை தொடர்ந்து அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

    விடைபெற்றார் தல தோனி.. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு.. ஷாக்கிங் அறிவிப்பு!விடைபெற்றார் தல தோனி.. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு.. ஷாக்கிங் அறிவிப்பு!

    தோனி விளையாடவில்லை

    தோனி விளையாடவில்லை

    தோனியின் முடிவிற்கு 2 காரணங்கள் சொல்லப்படுகிறது. தொடர்ந்து 12 மாதங்களுக்கும் மேலாக கிரிக்கெட் போட்டியில் விளையாடவில்லை. கடைசியாக உலகக் கோப்பை செமி பைனல் போட்டியில் தோனி விளையாடினார். அந்த போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. அதன்பின் கண்டிப்பாக தோனி ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    தோனி எதிர்ப்பு

    தோனி எதிர்ப்பு

    தோனி தனது ரிட்டயர்மெண்ட் குறித்து இரண்டு திட்டங்கள் வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. முதல் திட்டத்தின்படி, இந்த வருடம் ஒருநாள் போட்டிகளில் விளையாடிவிட்டு, உடல்நிலையை பொறுத்து ஓய்வு முடிவை எடுக்கலாம் என்று தோனி திட்டமிட்டு இருந்தார். இரண்டாவதாக இந்த வருடம் இறுதியில் நடக்க இருந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள திட்டமிட்டு இருந்தார்.

    ஆனால் என்ன?

    ஆனால் என்ன?

    ஆனால் கொரோனா காரணமாக இந்த வருடம் போட்டிகள் எதுவும் நடக்கவில்லை. வருட தொடக்கத்தில் நடந்த போட்டியில் தோனி கலந்து கொள்ளவில்லை. அதன்பின் தோனி சில போட்டிகளில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக எல்லா போட்டியும் தள்ளி வைக்கப்பட்டது. இதனால் தோனியின் முதல் பிளான் ரத்தானது.

    அடுத்த பிளான்

    அடுத்த பிளான்

    அதற்கு அடுத்து டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரும் இந்த வருடம் நடக்கவில்லை. நவம்பர் மாதம் நடக்க வேண்டிய தொடர் தள்ளி வைக்கப்பட்டது. அடுத்த வருடம் இந்த தொடர் நடப்பதாக தள்ளி வைக்கப்பட்டது. இதனால் இந்த தொடரிலும் தோனி கலந்து கொள்ள முடியாமல் போனது. அவரின் இந்த பிளானும் தோல்வி அடைந்தது.

    நடக்க வாய்ப்பில்லை

    நடக்க வாய்ப்பில்லை

    அடுத்த வருடம் இந்தியாவில் நடக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் தோனி கலந்து கொண்டு வெற்றியோடு ஓய்வு பெறுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தோனியின் உடல் இதற்கு ஒத்துழைக்க வாய்ப்பில்லை என்று கூறுகிறார்கள். உடல் மற்றும் அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். இதை தொடர்ந்தே ஓய்வு பெறும் அறிவிப்பை தோனி எடுத்து இருக்கிறார்.

    ஓய்வு அறிவிப்பு

    ஓய்வு அறிவிப்பு

    சரியான ஆலோசனைக்கு பின்பே தோனி இந்த முடிவை எடுத்து இருக்கிறார். இரண்டு நாட்கள் முன்தான் தோனி ஐபிஎல் கிரிக்கெட் பயிற்சி மேற்கொள்ள சென்னை வந்தார். இந்த பயணத்திற்கு பின் அவர் ஓய்வு பெறுவது குறித்து ஆலோசனை செய்தார் என்கிறார்கள். சிஎஸ்கே நிர்வாகத்துடன் ஆலோசனை செய்து இவர் இந்த முடிவை எடுத்துள்ளார். தொடர்ந்து இவர் சிஎஸ்கே போட்டிகளில் விளையாடுவார் என்கிறார்கள்.

    English summary
    What is the reason behind Mahendra Singh Dhoni sudden retirement from international cricket?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X