டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அவசரமாக திகாரில் டி.கே சிவக்குமாரை சந்தித்த சோனியா.. 15 நிமிட பேச்சு.. காங்கிரசில் என்ன நடக்கிறது?

திஹார் சிறையில் காங்கிரஸ் மூத்த உறுப்பினர் டி.கே சிவக்குமாரை, இன்று காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி சந்தித்து உரையாடினார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Sonia Gandhi Meets DK Shivakumar in Tihar Jail

    டெல்லி: திஹார் சிறையில் உள்ள காங்கிரஸ் மூத்த உறுப்பினர் டி.கே சிவக்குமாரை, காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி நேரில் சந்தித்து உரையாடினார்.

    ஹவாலா மோசடி, வரி ஏய்ப்பு, முறைகேடாக பணம் சேர்ந்தது உட்பட பல்வேறு வழக்குகளின் கீழ் தற்போது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டிகே சிவக்குமார் கைது செய்யப்பட்டு இருக்கிறார். தற்போது இவர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    காங்கிரஸ் கட்சியின் முக்கியமான உறுப்பினர்கள் வரிசையாக கைது செய்யப்பட்டு வரும் நிலையில் சிவக்குமாரின் கைதும் காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. டி.கே சிவக்குமாரை இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேரில் சந்தித்தார்.

    அவர்தான் முக்கியம்.. ஜஸ்டின் ட்ரூடோ நம்பி இருக்கும் இந்தியர்.. கனடாவின் கிங் மேக்கராக மாறும் சிங்!அவர்தான் முக்கியம்.. ஜஸ்டின் ட்ரூடோ நம்பி இருக்கும் இந்தியர்.. கனடாவின் கிங் மேக்கராக மாறும் சிங்!

    என்ன பேசினார்

    என்ன பேசினார்

    டி. கே சிவக்குமாரை நேரில் சந்தித்த சோனியா அவரிடம் வலிமையாக இருக்கும்படி கூறியுள்ளார். இது அரசியல் பழிவாங்கல். அனைத்தையும் மீறி நீங்கள் வெளியே வர வேண்டும், என்று சோனியா டிகே சிவக்குமாரிடம் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் கர்நாடக மாநில முக்கிய உறுப்பினர்கள் இந்த சந்திப்பில் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் 15 நிமிடம் பேசியதாக கூறப்படுகிறது.

    தலைவர்

    தலைவர்

    காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த தலைவர் யார் என்ற பெரிய எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில்தான் டி.கே சிவக்குமாரை சோனியா காந்தி சந்தித்து இருக்கிறார். ப. சிதம்பரம் மற்றும் டி. கே சிவக்குமார் இரண்டு பேரும் காங்கிரஸ் கட்சிக்கான தலைவர் ரேஸில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு பேருக்கும் கட்சியில் பெரிய ஆதரவு உள்ளது.

    பார்க்கவில்லை

    பார்க்கவில்லை

    ஆனால் இப்போது இரண்டு பேருமே திஹார் சிறையில்தான் இருக்கிறார்கள். கடந்த மாதம் திஹார் சிறைக்கு சென்ற சோனியா காந்தி, ப. சிதம்பரத்தை மட்டும் நேரில் சந்தித்தார். அப்போது சிறையில் இருந்த டிகே சிவக்குமாரை சோனியா காந்தி சந்திக்கவில்லை.

    சர்ச்சை

    சர்ச்சை

    அப்போதே இது பெரிய சர்ச்சையானது. ப. சிதம்பரத்தை பார்த்தவருக்கு சிவக்குமாரை பார்க்க ஏன் நேரம் கிடைக்கவில்லையா? என்று அவரின் தொண்டர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். சிவக்குமாரை எப்போதும் கைவிடுவதே காங்கிரஸ் கட்சியின் வேலையாகிவிட்டது என்று விரக்தியில் சிலர் பேசி இருந்தனர்.

    ஏன் சிவகுமார்

    ஏன் சிவகுமார்

    இந்த நிலையில்தான் தற்போது ஒரு வழியாக டிகே சிவக்குமாரை சோனியா காந்தி சந்தித்து உள்ளார். இதனால் சிவக்குமாரின் தொண்டர்கள் கொஞ்சம் கோபம் தணிந்துள்ளனர். இன்று டி. சிவக்குமாரின் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    What is the reason behind Sonia Gandhi's meeting with DK Shiva Kumar in Tihar Jail?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X