டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடித்து தூக்கும் அப்பாச்சியை இந்தியாவிடம் கொடுத்த அமெரிக்கா.. இனி ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது

Google Oneindia Tamil News

Recommended Video

    Watch Video : Apache choppers Ceremony

    டெல்லி: இந்திய விமானப் படையில் அமெரிக்க தயாரிப்பான அதிநவீன அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் இன்று சேர்க்கப்பட்டுள்ளன. அமெரிக்காவிடமிருந்து வாங்கப்பட்ட அப்பாச்சி ஹெலிகாப்டர்கள், மலை, காடு போன்ற கடுமையான பகுதிகளிலும் எதிரிகளை தாக்க பயன்படும் வகையிலான நவீனத்துவம் பெற்றவை.

    பதன்கோட் விமானப்படை தளத்தில் இன்று காலை நடைபெற்ற ஹெலிகாப்டர்கள் சேர்ப்பு விழாவில், விமானப்படை தளபதி, பி.எஸ்.தனோவா முக்கிய விருந்தினராக கலந்து கொண்டார். வாட்டர் சல்யூட் அடித்து, இந்த ஹெலிகாப்டர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    முதல்கட்டமாக 8 அப்பாச்சி போர் ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட்டுள்ளன. 2020ம் ஆண்டுக்குள், 22 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை விமானப்படையில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானுடன் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள இந்த சூழ்நிலையில், அப்பாச்சி ஹெலிகாப்டர் வருகை முக்கியத்துவம் பெறுகிறது. இதன் சிறப்பம்சங்கள் என்ன என்று பார்த்தால், அசத்தலாக இருக்கிறது.

    2 இன்ஜின்கள்

    2 இன்ஜின்கள்

    அப்பாச்சி ஹெலிகாப்டரில் பறக்க 2 விமானிகள் இருப்பது அவசியம். இதன் உயரம் 60 அடி மற்றும் அகலம் 50 அடி. அப்பாச்சி ஹெலிகாப்டரை இயக்க 2 இன்ஜின்கள் உள்ளன, இதன் காரணமாக அதன் வேகம் மிக அதிகமாக உள்ளது.

    ஈராக், ஆப்கானிஸ்தான்

    AH-64E வகை அப்பாச்சி, உலகின் மிக நவீன பல்நோக்கு போர் ஹெலிகாப்டர்களில் ஒன்றாகும். இது அமெரிக்க ராணுவத்தால் பயன்படுத்தப்படுகிறது. அவர்கள் இந்த ஹெலிகாப்டரை ஈராக், ராணுவத்துடன் சண்டையிடவும், ஆப்கானிஸ்தான் மலைகளில் மறைந்திருந்த தலிபான்களை அழிக்கவும் பயன்படுத்தினர்.

    8 அதிநவீன அப்பாச்சி போர் ஹெலிகாப்டர்கள் விமானப்படையில் சேர்ப்பு.. குங்குமம், தேங்காய் உடைத்து பூஜை8 அதிநவீன அப்பாச்சி போர் ஹெலிகாப்டர்கள் விமானப்படையில் சேர்ப்பு.. குங்குமம், தேங்காய் உடைத்து பூஜை

    ரேடார்கள்

    ரேடார்கள்

    மணிக்கு 280 கி.மீ வேகத்தில் பறக்கும் இந்த ஹெலிகாப்டர். பொதுவாக ஹெலிகாப்டர்கள் இந்த அளவுக்கு வேகத்தில் செல்வது அரிதானதாகும். அதன் வடிவமைப்பு காரணமாக ரேடார்களால் எளிதில் இதை கண்டுபிடிக்க முடியாது.

    குறிபார்த்து நொறுக்கலாம்

    குறிபார்த்து நொறுக்கலாம்

    தொடர்ச்சியாக, சுமார் மூன்றரை மணி நேரம் பறந்து தாக்குதலை தொடுக்க வல்லது அப்பாச்சி ஹெலிகாப்டர். இதிலிருந்து, எதிரிகள் அல்லது, பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம்களை, குறிபார்த்து சரியாக அடித்து நொறுக்க முடியும்.

    இரவிலும்

    இரவிலும்

    இந்த ஹெலிகாப்டரில் உள்ள ஹெலிஃபையர் ஏவுகணை தொழில்நுட்பம் மூலமாக நள்ளிரவு வேளையிலும், 4 மைல்களுக்கு தொலைவில் உள்ள டார்கெட்டையும் சரியாக குறி பார்த்து அழிக்க முடியும். இது மட்டுமல்லாமல், இந்த ஹெலிகாப்டரில் 30 எம்எம் M230E1 செயின் துப்பாக்கி இரண்டு உள்ளன.

    ஹெல்மெட் குறிபார்த்தல்

    ஹெல்மெட் குறிபார்த்தல்

    அப்பாச்சி ஹெலிகாப்டரின் மிக நவீன அம்சங்களில் ஒன்று, ஹெல்மெட்டில் பொருத்தப்பட்ட தானியங்கி குறிபார்க்கும் கருவிதான். ஒருங்கிணைந்த ஹெல்மெட் மற்றும் காட்சி பார்வை அமைப்பு என்ற தொழில்நுட்பத்தில் இது இயங்குகிறது. அதாவது, ஹெலிகாப்டரில் உள்ள வீரர் எங்கே பார்க்கிறாரோ, அவரது பார்வையில் உள்ள பொருளை தானாகவே குறி பார்க்கும் துப்பாக்கி இதுவாகும். தனியாக அந்த வீரர் குறிபார்க்க தேவையில்லை. அவர் பார்க்கும் இடத்தை சரியாக சுட முடியும்.

    இஸ்ரேல் வாங்கிய அப்பாச்சி

    இஸ்ரேல் வாங்கிய அப்பாச்சி

    ஆயுத தயாரிப்பில் பிரசித்தி பெற்ற இஸ்ரேலே, கூட இந்த வகை ஹெலிகாப்டர்களை அமெரிக்காவிடம் வாங்கியுள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இஸ்ரேல் விமானப்படை (IAF) முதன்முதலில் AH-64A அப்பாச்சி ஹெலிகாப்டர்களை 1990ல் வாங்கியது. அந்த நாட்டின் பிரசித்தி பெற்ற எச் -1 கோப்ரா போர் ஹெலிகாப்டர்களை மேம்படுத்தாமல் அமெரிக்காவிடம் அப்பாச்சியை வாங்கியது இஸ்ரேல் என்றால் நீங்கள் அதன் மகத்துவத்தை புரிந்து கொள்ளலாம்.

    English summary
    Why Boeing AH-64 Apache the American twin-turboshaft attack helicopter is important for Indian air force? here is the detail.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X