டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இது என்ன சொல்லுங்க.. கொரில்லா காலா.. நம்மளோட காலா.. அட அதெல்லாம் இல்லைங்க.. இது வேற!- வைரலாகும் படம்

Google Oneindia Tamil News

டெல்லி: பயமுறுத்தும் கால்கள் கொண்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இதை இந்திய வனத்துறை அதிகாரி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டுள்ளார். இதை பார்க்கும் நெட்டிசன்கள் இது என்னவாக இருக்கும் என குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

சந்திரமுகி படத்தில் வருவது போல் பேய் இருக்கா இல்லையா நம்பலாமா நம்பக் கூடாதா என ரஜினிகாந்திடம் வடிவேலு கேள்வி எழுப்புவார். அப்போது ரஜினிகாந்த் பேய் வரும் அறிகுறிகளை காமெடியுடன் பட்டியலிடுவார்.

அண்மையில் ஒரு பூங்காவில் உள்ள உடற்பயிற்சி சாதனம் தானாக இயங்குவதாகவும் அதில் பேய் உடற்பயிற்சி செய்வதாகவும் ஒரு தகவலும் அதன் வீடியோவும் வைரலானது.

கொரோனோ பாதிப்பை Dexamethasone குணப்படுத்துகிறது- லண்டன் ஆக்ஸ்போர்ட் விஞ்ஞானிகள் கொரோனோ பாதிப்பை Dexamethasone குணப்படுத்துகிறது- லண்டன் ஆக்ஸ்போர்ட் விஞ்ஞானிகள்

தகவல்கள்

தகவல்கள்

இது போல் அமானுஷயங்கள் குறித்த எந்த தகவலாக இருந்தாலும் அது வைரலாகி வருகிறது. இந்த நிலையில் இந்திய வனத் துறை அதிகாரி சுசந்தா நந்தா ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு பெரிய மரம் சாய்ந்துள்ளது. அதன் கீழ் 5 விரல்கள் கொண்ட தெரிகிறது. மெட்டாலிக் போன்று இருக்கிறது.

இயற்கை சீற்றம்

இயற்கை சீற்றம்

இது எந்த விலங்கு என கண்டறியுங்கள் என அவர் கேட்டுள்ளார். அந்த புகைப்படம் பார்ப்பதற்கு பயங்கரமாக இருக்கிறது. யாரேனும் இயற்கை சீற்றத்தால் இறந்தவர்களின் காலாக இருக்கலாமோ என சந்தேகம் எழுகிறது. ஆனால் அது எலும்பு கூடாகத்தானே இருக்கும், இது என்ன மெட்டலாக இருக்கிறது என சந்தேகம் வருகிறது.

விலங்கு

விலங்கு

அந்த வனத்துறை அதிகாரியும் எந்த விலங்கு என கேட்டுவிட்டதால் ஏராளமானோர் இதை கொரில்லா என்கிறார்கள். எட்டியின் பாதம் என்கிறார்கள், லங்கூரின் பாதம், மெட்டாலிக் நிற நெயில் பாலிஷ் போட்ட ஒரு பெண் என்கிறார்கள். இன்னும் சிலரோ அய்யோ இது பார்ப்பதற்கு பயமாக இருக்கிறது என்கிறார்கள்.

Recommended Video

    Kid playing cricket shots is trending in twitter.
    பெருமூச்சு

    பெருமூச்சு

    இப்படியே ஒவ்வொருவரும் ஒவ்வொன்றாக கூறி வருவதால் அந்த வனத்துறை அதிகாரியே அதற்கான பதிலை கூறிவிட்டார். அவர் கூறுகையில் அந்த புகைப்படம் கால் இல்லை. அது ஒரு விதமான பூஞ்சை. அதன் பெயர் ஜைலரியா பாலிமார்பா என்பார்கள். இறந்த மனிதனின் விரல்கள் என்றும் அழைப்பார்கள். இந்த பதிலை பார்த்த நெட்டிசன்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

    English summary
    What is this spooky viral picture shows? Any guess. Its a foot like fungi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X