டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மோடி முதல் ரெட்டி வரை.. அரசியலை தீர்மானித்த ஒருவர்.. ஒய்எஸ்ஆர் காங்கிரஸுக்கு அறிவுறுத்தியது என்ன?

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி முதல் ஜெகன்மோகன் ரெட்டி வரை அரசியலை தீர்மானித்த பிரசாந்த் கிஷோர், ஜெகன்மோகன் ரெட்டிக்கு அறிவுறுத்தியது என்ன? என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் முதன்மை அரசியல் நிபுணரான பிரசாந்த் கிஷோர் இந்திய அரசியல் செயல்பாட்டு கமிட்டி என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். அதன் மூலம் தங்களை அணுகும் அரசியல் கட்சிகளுக்கு வியூகங்கள் அமைத்து தருகிறார். கடந்த 2012-ஆம் ஆண்டு நரேந்திர மோடிக்கு வியூகம் வகுத்து கொடுத்தது மூலம் குஜராத் முதல்வராக மோடி தேர்வு செய்யப்பட்டார்.

பின்னர் 2014-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலிலும் பாஜக கூட்டணிக்கு வியூகம் வகுத்து கொடுத்ததில் அக்கட்சி மிகப் பெரிய வெற்றியை பெற்று ஆட்சியை பிடித்தது. இது போல் நிதிஷ் குமார், லாலு பிரசாத் என இவரது பட்டியல் நீள்கிறது.

கோதாவரி-கிருஷ்ணா நதிகளை இணைப்பதே முதல் பணி என்ற நிதின் கட்கரி.. நன்றி தெரிவித்த எடப்பாடி கோதாவரி-கிருஷ்ணா நதிகளை இணைப்பதே முதல் பணி என்ற நிதின் கட்கரி.. நன்றி தெரிவித்த எடப்பாடி

மாஸ் வெற்றி

மாஸ் வெற்றி

இந்த சட்டசபை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு பிரசாந்த் கிஷோர் வகுத்த வியூகங்களால் அவர் 151 இடங்களில் மாஸ் வெற்றி பெற்றார். அப்படி என்னதான் பிரசாந்த் கிஷோர் அறிவுறுத்தினார் என்பதை பார்ப்போம்.

பட்டியல்

பட்டியல்

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னரே பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைகளை ஜெகன்மோகன் கேட்க துவங்கினார். முதலாவதாக கடந்த 2014-ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி செய்த தவறுகளை பட்டியலிட்டார் கிஷோர்.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்

இதைத் தொடர்ந்து 15 மாதங்களில் ஜெகன்மோகன் ரெட்டியை 3000 கி.மீ. தூரம் நடைப்பயணம் மேற்கொள்ள வைத்து இரண்டே கால் கோடி மக்களை சந்திக்க வைத்தார். இதையடுத்து ஜெகன் எங்களுக்கு வேண்டும். ஜெகன் வெல்ல வேண்டும் என்ற பாடலை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் ரிலீஸ் செய்ய வைத்தார்.

தீர்மானம்

தீர்மானம்

நாயுடு அரசை நம்ப மாட்டோம், சென்று வாருங்கள் பாபு ஆகிய வாசகங்களை இந்த சட்டசபை தேர்தலில் பிரபலப்படுத்தினார். இதன் மூலம் ஜெகனின் பிம்பம் உயர்ந்தது , சந்திரபாபு நாயுடுவின் பிம்பம் சரிந்தது. இப்படித்தான் ஜெகன்மோகன் ரெட்டியின் வெற்றி தீர்மானிக்கப்பட்டது.

English summary
What Strategy Prashant Kishore framed for YSR Congress? Here are the reasons how Jagan Mohan Reddy wins in assembly election!
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X