டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தாமதமாக கருத்து சொன்ன மோடி.. அயோத்தி தீர்ப்பு வந்த போது என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா?

Google Oneindia Tamil News

Recommended Video

    Aspects in Ayodhya verdict | அயோத்தி வழக்கின் தீர்ப்பு.. முக்கிய அம்சங்கள் என்னென்ன?

    டெல்லி: அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்ட நேரத்தில் பிரதமர் மோடி பஞ்சாப் எல்லையில் கர்தார்பூர் வழித்தட திறப்பு விழாவில் பிசியாக இருந்தார்.

    அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வந்தது. இந்த தீர்ப்பு காரணமாக நாடு முழுக்க பாதுகாப்பு போடப்பட்டது. உள்துறை அமைச்சகத்தின் அறிவுரையின் பெயரில் நாடு முழுக்க பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் காலை 10.30 மணிக்கு அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. சுமார் 30 நிமிடங்கள் இந்த தீர்ப்பு வாசிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு யாருக்கும் வெற்றியும் அல்ல.. தோல்வியும் அல்ல- பிரதமர் மோடிஉச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு யாருக்கும் வெற்றியும் அல்ல.. தோல்வியும் அல்ல- பிரதமர் மோடி

    என்ன தீர்ப்பு

    என்ன தீர்ப்பு

    அயோத்தி வழக்கில் அரசியல் சாசன அமர்வில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், போப்டி ஆகியோர் ஒரே தீர்ப்பை வழங்கி உள்ளனர்.அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம், இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்ட 5 ஏக்கர் மாற்று இடம் தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

    என்ன எதிர்ப்பார்ப்பு

    என்ன எதிர்ப்பார்ப்பு

    இதனால் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தீர்ப்பை பாஜக தலைவர்கள், ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பெரிய அளவில் கொண்டாடினார்கள். நாடு முழுக்க பாஜக கட்சியின் பெரிய அளவில் கொண்டாட்டங்களை நிகழ்த்தி வருகிறார்கள்.

    மோடி லேட்

    மோடி லேட்

    இந்த நிலையில் அயோத்தி வழக்கின் தீர்ப்பு குறித்து பிரதமர் மோடி கொஞ்சம் தாமதமாகத்தான் கருத்து கூறினார். ராம பக்தியோ அல்லது ரஹீம் பக்தியோ இது தேச பக்தியை வலுப்படுத்த வேண்டிய நேரம் இது. இந்த தீர்ப்பை யாருடைய வெற்றியாகவோ, தோல்வியாகவோ பார்க்கக் கூடாது. நாட்டு மக்கள் அமைதியையும் நல்லிணக்கத்தையும் நிலை நாட்ட வேண்டும் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

    ஏன் தாமதம்

    ஏன் தாமதம்

    சுமார் 1 மணி நேரம் கழித்துதான் மோடி இந்த டிவிட்டை செய்தார். இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்ட நேரத்தில் பிரதமர் மோடி பஞ்சாப் எல்லையில் கர்தார்பூர் வழித்தட திறப்பு விழாவில் பிசியாக இருந்தார்.

    என்ன பணிகள்

    என்ன பணிகள்

    இந்தியா பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் கர்தார்பூர் வழி தடத்தை திறக்கும் விழா இன்று நடந்தது. இதன் திறப்பு விழா இன்று நடந்தது. இதில் இந்தியா பக்கம் உள்ள கர்தார்பூர் வழித்தடத்தை இன்று பிரதமர் மோடி திறந்து வைத்தார். கர்தார்பூர் பகுதியில் எல்லா வருடமும் தர்பார் சாஹிப் என்ற பெயரில் விழா நடத்தப்படும். இங்கு செல்வது சீக்கியர்களின் கடமைகளில் ஒன்று.

    என்ன பாதை

    என்ன பாதை

    இதற்காகத்தான் கர்தார்பூர் வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதை பல வருட பேச்சுவார்த்தைக்கு பின் ஒரு வருட கட்டுமான பணியில் உருவாக்கப்பட்டுள்ளது. இன்று பஞ்சாப்பில் நடந்த இதன் திறப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். தீர்ப்பு வழங்கப்பட்ட நேரத்தில் மோடி அந்த விழாவில்தான் இருந்தார். இதனால்தான் அவரால் அயோத்தி குறித்து உடனே கருத்து தெரிவிக்க முடியவில்லை.

    1045 பக்க அயோத்தி தீர்ப்பு

    English summary
    What was PM Modi doing during Ayodhya Verdict today? - Here are the details.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X