டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இம்ரான் கானுக்குத்தான் இந்தியா மீது எத்தனை கோபம்.. உலக நாடுகளை தொடர்ந்து பாக் மக்களிடமும் புலம்பல்

Google Oneindia Tamil News

டெல்லி: இம்ரான் கானுக்கு இந்தியா மீதும் பிரதமர் நரேந்திர மோடி மீது எத்தனை கோபம் என்பதை அவரது சுதந்திர தின உரை காட்டுகிறது.

இந்தியாவும், பாகிஸ்தானும் சிறந்த நட்பு நாடுகளாக இருந்தன. சர்ஜிக்கல் ஸ்டிரைக், பதான்கோட் தாக்குதல், புல்வாமா தாக்குதல், காஷ்மீர் பிரச்சினை என இருந்தாலும் பாகிஸ்தான் மீது அதிருப்தி நிலவிய நிலையில் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் எந்தவித பிரச்சினையும் ஏற்படவில்லை.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மீண்டும் 2-ஆவது முறையாக ஆட்சி அமைத்தபோது பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்தார் இம்ரான்கான். மேலும் தேர்தலுக்கு முன்பே காஷ்மீர் பிரச்சினை தீர மோடியே மீண்டும் பிரதமராக வேண்டும் என இம்ரான்கான் விருப்பம் தெரிவித்திருந்தார்.

யூனியன் பிரதேசம்

யூனியன் பிரதேசம்

இந்த நிலையில் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு ஜம்மு காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டது. இது பாகிஸ்தானுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

இம்ரான் கான்

இம்ரான் கான்

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நடவடிக்கையை உலக நாடுகள், ஐநா பாதுகாப்பு கவுன்சில் ஆகியவற்றில் இம்ரான் கான் பஞ்சாயத்து வைத்தார். எனினும் அவர்கள் இவரது அழைப்பை ஏற்கவில்லை. எனினும் இம்ரான் கானின் கோபம் தீரவில்லை.

எந்த வார்த்தை

எந்த வார்த்தை

பாகிஸ்தான் சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. அப்போது பிரதமர் இம்ரான்கான் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவர் சித்தாந்தம் என்ற வார்த்தையை 23 முறை பயன்படுத்தியுள்ளார். அதற்கடுத்தபடியாக காஷ்மீர் என்ற வார்த்தையை 20 முறையும் , மக்கள் என்ற வார்த்தையை 14 முறையும் பாகிஸ்தான் என்ற வார்த்தையை 12 முறையும் பயன்படுத்தியுள்ளார்.

மோடி பயன்படுத்தியவை

மோடி பயன்படுத்தியவை

அதுபோல் உலகம் என்ற வார்த்தையை 12 முறையும் இந்தியா, இன்று என்ற வார்த்தைகளை தலா 11 முறையும், முஸ்லிம்கள் என்ற வார்த்தை 14 முறையும், முஸ்லிம் என்ற வார்த்தையை 7 முறையும், போர் என்ற வார்த்தையை 6 முறையும் மோடி என்ற வார்த்தையை 7 முறையும், ஆர்எஸ்எஸ் என்ற வார்த்தையை 10 முறையும், ஜாதி என்ற வார்த்தையை 9 முறையும் நாசி என்ற வார்த்தையை 6 முறையும் பயன்படுத்தியுள்ளார்.

10 முறையும்

10 முறையும்

ஆனால் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் இம்ரான் கான் போல் அல்லாமல், குடிமகன் என்ற வார்த்தையை 47 முறையும், சுதந்திரம் என்ற வார்த்தையை 30 முறையும், ஏழை என்ற வார்த்தையை 17 முறையும் 70 ஆண்டுகள் என்ற வார்த்தையை 10 முறையும், முஸ்லிம் என்ற வார்த்தையை 5 முறையும், பயங்கரவாதம் என்ற வார்த்தையை 16 முறையும், சுற்றுலா என்ற வார்த்தையை 13 முறையும் அமைதி என்ற வார்த்தையை 6 முறையும் ராணுவம் என்ற வார்த்தையை 10 முறையும் பயன்படுத்தினார். தண்ணீர் என்ற வார்த்தையையும் பயன்படுத்தினார்.

English summary
What are the words mostly used by Pakistan PM Imran Khan and PM Narendra Modi in their Independence day address.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X