டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எக்சிட் போல்.. நட்சத்திர வேட்பாளர்கள் கம்பீர், ஊர்மிளா, ஹேமமாலினி, சத்ருஹன் நிலை என்ன?

Google Oneindia Tamil News

டெல்லி: தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளின்படி வடமாநிலத்தில் போட்டியிட்ட நட்சத்திர வேட்பாளர்களின் நிலை என்ன என்பது குறித்த முடிவுகள் வெளியாகியுள்ளன.

நாளை மறுதினம் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளன. இந்த நிலையில் தற்போது தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் குறித்துதான் ஊரெல்லாம் பேச்சாக இருக்கிறது.

அந்த கருத்து கணிப்புகளில் பாஜகதான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என கூறியுள்ளன.

மீண்டும் மோடி... அன்று.. முலாயம்சிங் சொன்ன அந்த 'வாழ்த்து' பலிக்கிறதா? மீண்டும் மோடி... அன்று.. முலாயம்சிங் சொன்ன அந்த 'வாழ்த்து' பலிக்கிறதா?

எக்சிட் போல்

எக்சிட் போல்

இந்த நிலையில் நட்சத்திர வேட்பாளர்களான சன்னி தியோல், கவுதம் காம்பீர், ஊர்மிளா, ஹேமமாலினி, ஜெயப்பிரதா, ரவிகிஷான், மூன் மூன் சென், பாபுல் சுப்ரியோ, சத்ருஹன் சின்ஹா, ஸ்மிருதி இரானி, ராகுல் காந்தி, மனோஜ் திவாரி, ஷீலா தீட்ஷித் உள்ளிட்டோரின் வெற்றி வாய்ப்பு குறித்து இந்தியா டுடே எக்சிட் போலில் தகவல்கள் கிடைத்துள்ளன.

தேர்தல் பிரசாரம்

தேர்தல் பிரசாரம்

பாஜகவில் அண்மையில் இணைந்த கவுதம் கம்பீர் கிழக்கு டெல்லியில் போட்டியிட்டார். அவர் அத்துமீறி தேர்தல் பிரசாரம் செய்வதாகவும், வெயில் கொடுமையால் தனக்கு பதிலாக ஒரு டூப் போட்டு அவரை வெயிலில் நிற்க வைத்துவிட்டு இவர் கூலாக ஏசி காரில் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் இந்த தொகுதியில் இவர் வெற்றி பெறுவார் என கருத்து கணிப்புகள் கூறியுள்ளன.

மதுரா தொகுதி

மதுரா தொகுதி

மதுரா தொகுதியின் எம்பியாக இருப்பவர் ஹேமமாலினி. இவர் மீண்டும் பாஜக சார்பில் இதே தொகுதியில் போட்டியிட்டார். அந்த தொகுதிக்குள்பட்ட கிராம மக்களிடம் வாக்கு சேகரிக்க சென்ற ஹேமமாலினி டிராக்டரில் ஏசி இயந்திரம் பொருத்தப்பட்டு சொகுசாக டிராக்டர் ஓட்டினார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் கருத்து கணிப்புகளின்படி அவருக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ரவி கிஷான்

ரவி கிஷான்

அது போல் குருதாஸ்பூரில் பாஜக சார்பில் போட்டியிடும் நடிகர் சன்னி தியோல், கோரக்பூரில் போட்டியிடும் போஜ்புரி நடிகர் ரவி கிஷான், அசான்சோல் தொகுதியில் போட்டியிடும் பாபுல் சுப்ரியோ உள்ளிட்டோர் வெற்றி பெற வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ்

காங்கிரஸ்

பாஜகவில் அதிருப்தி எம்பியாக செயல்பட்டு வருபவர் சத்ருஹன் சின்ஹா. இவர் அண்மையில் காங்கிரஸில் இணைந்தார். இவருக்கு இவர் கடந்த முறை போட்டியிட்ட பாட்னாசாஹிப் தொகுதியே ஒதுக்கப்பட்டது. இந்த முறை அவர் வெற்றி பெற வாய்ப்பு குறைவு என கருத்து கணிப்புகள் சொல்கின்றன. அது போல் சமாஜ்வாதி கட்சியிலிருந்து பாஜகவில் இணைந்து ராம்பூரில் போட்டியிட்ட ஜெயப்பிரதா, பாஜகவிலிருந்து காங்கிரஸில் இணைந்து ஃபதேபூர் சிக்ரியில் போட்டியிட்ட ராஜ் பப்பர், அசான்சோலில் போட்டியிட்ட மூன் மூன் சென், மும்பை வடக்கில் போட்டியிட்ட ஊர்மிளா மடோன்கர் உள்ளிட்டோர் தோல்வியை சந்திப்பார்கள் என கருத்து கணிப்புகள் கூறுகின்றன.

ஷீலா தீட்சித் - மனோஜி திவாரி

ஷீலா தீட்சித் - மனோஜி திவாரி

அது போல் அமேதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை எதிர்த்து பாஜகவின் ஸ்மிருதி இரானி போட்டியிட்டார். வடகிழக்கு டெல்லியில் பாஜக வேட்பாளர் மனோஜ் திவாரியை எதிர்த்து டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் போட்டியிட்டார். இவர்கள் 4 பேருக்கிடையே கடும் போட்டி நிலவும் என கூறப்பட்டுள்ளது.

English summary
Exit poll says What will be the fate of the star candidates?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X