டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வாட்ஸ் ஆப் பயன்படுத்தறீங்களா.. உடனே அப்டேட் செய்யணுமாம்.. இல்லையேல் ஹேக்கிங் ஆபத்து இருக்காம்!

Google Oneindia Tamil News

டெல்லி: நீங்கள் வாட்ஸ் ஆப் பயன்படுத்துகிறீர்களா உடனே அப்டேட் செய்யுங்கள் - இல்லையேல் ஆபத்து என்று வாட்ஸ் ஆப் நிறுவனம் எச்சரித்துள்ளது.

வாட்சாப் பயன்படுத்தும் பயனாளிகள் தங்களது வாட்சாப் செயலியை உடனடியாக அப்டேட் செய்யுமாறு வாட்சாப் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. அப்டேட் செய்யப்படாத செயலிகளில் ஹேக்கர்கள் புகுந்துவிட வாய்ப்பு இருப்பதால் அந்நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

Whats App asks its users to download the updated version

இன்று உலகம் முழுவதும் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோரின் என்னிக்கஈ நாளுக்கு அதிகரித்த வண்ணம் உள்ளது. அதிலும் இந்திய சந்தைகளில் ஸ்மார்ட் போன் விற்பனை தாறுமாறாக எகிறி வருகிறது. அதற்கு காரணம் நம்மவர்கள் வீடுகளில் கழிப்பறைகள் உள்ளதோ இல்லையோ ஒவ்வொருவருக்கும் குறைந்த பட்சம் ஒரு ஸ்மார்ட் போனும் இரு நம்பர்களுமாவது உள்ளன. அதிலும் வாட்சப் பயன்படுத்தாதவர்கள் இல்லையென்றே கூறலாம். காரணம் அதில் உள்ள வசதிகள் அப்படி.

இப்போது அரசு நிறுவனங்கள் தொடங்கி, தனியார் நிறுவனங்கள் வரை தங்களது அதிகாரப் பூர்வ தகவல் பரிமாற்றத்திற்கு வாட்சப்பையே நம்பியுள்ளன. காரணம் செய்திகள்,, ஆடியோக்கள், வீடியோக்கள் உள்ளிட்ட தகவல்களை எளிதாகவும் வேகமாகவும் பரிமாறிக் கொள்ள முடியும். அதோடு வாட்சப் தகவல்கள் வேறு யாராலும் ஊடுருவி பார்க்க முடியாது என்ற உத்திரவாதத்தை ஃபேஸ் புக் நிறுவனமும் கொடுத்திருந்தது.

இந்நிலையில் வாட்சப்பில் உள்ள சில குறைபாடுகளை பயன்படுத்தி வாட்சப் பயன்படுத்தப் பட்டு வரும் ஸ்மார்ட் போன், கம்ப்யூட்டர் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களில் சில ஹேக்கர்கள் அவர்களது சாப்ட்வேர்களை நிறுவ முயன்றுள்ளனர். ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான வாட்சாப்பின் குறிப்பிட்ட சில பயன்பாட்டாளர்களை மட்டும் குறி வைத்து, ஹேக்கிங்கில் கில்லாடிகளான சில ஹேக்கர்கள் இந்த வேலையை செய்துள்ளனர்.

இதை கண்டுபிடித்த வாட்சப் நிறுவனம் தங்களது பிற வாடிக்கையாளர்களை காப்பாற்ற உடனடியாக புதிய வாட்சப் அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இந்த அப்டேட்டில் ஹேக்கர்கள் ஊடுருவ முடியாத வகையில் சில வசதிகள் மேம்படுத்தப் பட்டுள்ளன. இதனையடுத்து வாட்சப் செயலியின் புதிய பதிப்பை வாடிக்கையாளர்கள் உடனடியாக அப்டேட் செய்யுமாறு வாட்சப் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. வாட்சப் நிறுவனத்திற்கு 1.5 பில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிட தக்கது

English summary
Whats App has asked its users to download the updated version to escape from Hacking.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X