டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வெப்பில் வாட்ஸ் ஆப்பா.. அப்போ நிச்சயம் உங்களுக்கு ஆப்புதான்.. ஹேக்கர்கள் இருக்காங்க உஷார்!

Google Oneindia Tamil News

டெல்லி: வாட்ஸ் ஆப்பை வெப்பில் பயன்படுத்தும் போது பயனாளிக்கே தெரியாமல் உரையாடல்களை ஹேக்கர்கள் ஹேக் செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாட்ஸ் ஆப் செயலி அண்மையில் ஒரு புதிய கொள்கையை அறிவித்தது. இதனால் பெரும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது. இதனால் பலர் வாட்ஸ் ஆப்பை விட்டு வெளியேற தொடங்கி விட்டார்கள்.

வாட்ஸ் ஆப்பில் பயனாளிகளின் உரையாடல்கள் கண்காணிக்கப்பட்டு வணிக நோக்கத்தில் அந்த தகவல்கள் பிற நிறுவனங்களுக்கும் வழங்கப்படும் என சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.

பிப்ரவரி மாதம்

பிப்ரவரி மாதம்

இதற்கு ஒப்புதல் அளிக்காதவர்கள் பிப்ரவரி மாதம் 8-ஆம் தேதிக்கு பிறகு வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்தவே முடியாது என அறிவிக்கப்பட்டது. இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து வாட்ஸ் ஆப் பயனாளிகள் பிற செயலிகளுக்கு தாவினர்.

வாட்ஸ் ஆப் நிறுவனம்

வாட்ஸ் ஆப் நிறுவனம்

தங்களது புதிய கொள்கை தொடர்பாக மக்களிடையே தவறான தகவல் பரவுவதால் அதனை நீக்கும் முயற்சியில் ஈடுபட உள்ளதாகவும் மே 15 ஆம் தேதி வரை புதிய கொள்கையை ஆராய்ந்து பயனாளிகள் ஒப்புதல் வழங்கலாம் என்றும் வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் தங்களால் தனிப்பட்ட தகவல்களை பார்க்க முடியாது.

வாட்ஸ் ஆப்

வாட்ஸ் ஆப்

நீங்கள் யாரிடம் பேசுகிறீர்கள் என்பதை கேட்க முடியாது. நாங்கள் பதிவு எதையும் வைப்பதில்லை. பயனாளிகள் ஷேர் செய்யும் லொகேஷன்களை கூட எங்களால் பார்க்க முடியாது என விளக்கமளித்துள்ளனர்.ஆனால் இவற்றை எல்லாம் விட ஆபத்தான ஒரு விஷயம் வாட்ஸ் ஆப்பில் இருப்பது தெரியவந்துள்ளது.

அட்டவணை

அட்டவணை

தனியார் தொலைபேசி எண்களை வாட்ஸ் ஆப் கூகுள் தேடலில் அட்டவணைப்படுத்துவதாக தற்போது தெரியவந்துள்ளது. வாட்ஸ் ஆப் செயலியை கணிப்பொறி, லேப்டாப்களில் இணைந்து வாட்ஸ் ஆப் வெப்பில் பயன்படுத்துபவர்களின் எண்களே கூகுள் தேடலில் அட்டவணைப்படுத்தப்படுவதாக தற்போது தெரியவந்துள்ளது.

வாட்ஸ் ஆப் சாட்கள்

வாட்ஸ் ஆப் சாட்கள்

இதன் மூலம் ஹேக்கர்கள் வாட்ஸ் ஆப் சாட்கள் ஹேக்கர்களின் கைக்கு செல்லும் ஆபத்து ஏற்படுவதாக எச்சரிக்கின்றனர். இது தனிப்பட்டவர்களின் தகவல் திருட்டுக்கு வித்திடும் எனவும் பாதுகாப்பு வல்லுநர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.

விளக்கமளிக்கும்

விளக்கமளிக்கும்

கடந்த 24 மணி நேரத்தில் பயனாளிகள் பலருக்கும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் ஓடிபிக்கள் வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் ஹேக்கர்கள் வாட்ஸ் ஆப் சாட்களை அணுகும் முயற்சியை தொடங்கியிருப்பதாகவே கருதப்படுகிறது. இது தொடர்பாக விரைவில் வாட்ஸ் ஆப் நிறுவனம் விளக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Whats app is used in Web leads for hacking.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X