டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Breaking News:முழு அரசு மரியாதையுடன், சிவச்சந்திரன், சுப்பிரமணியன் உடல்கள் நல்லடக்கம்

Google Oneindia Tamil News

டெல்லி: காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தின் தற்கொலை தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் பலியாகினர்.

இதையடுத்து பாகிஸ்தானை தனிமைபடுத்த முயற்சியில் இந்தியா ஈடுபட்டு வருகிறது. காஷ்மீர் தாக்குதல் தொடர்பாக ஆலோசனை நடத்த இன்று காலை 1.30 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் டெல்லியில் கூடியது. உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில், துவங்கிய இக்கூட்டத்தில், குலாம் நபி ஆசாத், சரத் பவார் உள்ளிட்ட பல கட்சி தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.

காஷ்மீர் தாக்குதல் தொடர்பான செய்திகளுக்கு இந்த லைவ் பக்கத்தில் இணைந்திருக்கவும்.

Newest First Oldest First
6:49 PM, 16 Feb

புல்வாமா தாக்குதலில் பலியான தமிழக வீரர்களுக்கு மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் இரங்கல்

சுப்பிரமணியன், சிவசந்திரன் ஆகிய இரண்டு மாவீரர்களுக்கு வீரவணக்கம்- ஸ்டாலின்

5:36 PM, 16 Feb

சவலப்பேரி கிராமத்தில் சுப்பிரமணியன் உடல் அடக்கம்

முழு அரசு மரியாதையுடன், மக்களின் கண்ணீருடன் சுப்பிரமணியன் நல்லடக்கம்

5:11 PM, 16 Feb

21 குண்டுகள் முழங்க சிவச்சந்திரன் உடல் நல்லடக்கம்

சிவச்சந்திரன் உடல் மீது போர்த்தப்பட்ட தேசியக்கொடி மனைவி காந்திமதியிடம் வழங்கப்பட்டது

5:07 PM, 16 Feb

கார்குடி கிராமத்தில் சிவச்சந்திரன் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது

ராணுவ மரியாதையுடன், சிவச்சந்திரன் உடல் நல்லடக்கம் செய்ய ஏற்பாடு

5:07 PM, 16 Feb

கார்குடி கிராமத்தில் சிவச்சந்திரன் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது

ராணுவ மரியாதையுடன், சிவச்சந்திரன் உடல் நல்லடக்கம் செய்ய ஏற்பாடு

4:59 PM, 16 Feb

சவலப்பேரி கிராமத்தில் சுப்பிரமணியன் உடலுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அஞ்சலி

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் அஞ்சலி செலுத்தினார்

4:39 PM, 16 Feb

வீர மரணமடைந்த சிஆர்பிஎப் வீரர்களுக்கு மேற்கு வங்க முதல்வர் மமதா இரங்கல்

கொல்கத்தாவில் மமதா பானர்ஜி மெழுகுவர்த்தி ஊர்வலம்

4:34 PM, 16 Feb

சிவச்சந்திரன், சுப்பிரமணியன் புகழுடல்களுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி

அண்டை ஊர்களில் இருந்தும் மக்கள் திரளாக வந்து அஞ்சலி

வீரர்கள் வாழ்க, பாரத் மாதா கி ஜே.. என எழுச்சியாக கோஷமிடும் பொதுமக்கள்

4:23 PM, 16 Feb

சுப்பிரமணியன் உடல் சவலப்பேரி கிராமம் வந்து சேர்ந்தது

கார்குடியில் சிவச்சந்திரன் உடலுக்கும், சவலப்பேரியில் சுப்பிரமணியன் உடலுக்கும் மக்கள் அஞ்சலி

3:59 PM, 16 Feb

சிவசுப்பிரமணியன் உடல் கார்குடி கிராமம் வந்தடைந்தது

திருச்சி விமான நிலையத்திலிருந்து ராணுவ வாகனத்தில் கொண்டுவரப்பட்டது

ஆயிரக்கணக்கானோர் அஞ்சலிக்காக வீட்டில் காத்திருப்பு

3:49 PM, 16 Feb

டெல்லியில் ராஜ்நாத் சிங் தலைமையில் உயர்மட்டக்குழு கூட்டம்

உளவுத்துறை தலைவர், மத்திய உள்துறை செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்பு

3:23 PM, 16 Feb

வீர மரணமடைந்த தமிழக சிஆர்பிஎப் வீரர்கள் வீடுகளில் மக்கள் வெள்ளம்

'எல்லைச்சாமிகளுக்கு' இறுதி அஞ்சலி செலுத்த காத்துள்ளனர்

விமான நிலையங்களிலிருந்து வாகனங்களில் வீரர்கள் உடல் கொண்டு செல்லப்படுகிறது

3:15 PM, 16 Feb

தீவிரவாதிகள் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து பாக். தேசிய கொடி எரிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் கொல்லப்பட்ட சிஆர்பிஎப் வீரர் சுப்பிரமணியன் நண்பர்கள் போராட்டம்

3:15 PM, 16 Feb

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு தமிழகம், புதுவையில் அஞ்சலி

இன்றிரவு 8 மணி முதல் 8.15 மணி வரை பெட்ரோல் பங்க்களில் விளக்குகள்

அணைக்கப்படும் பெட்ரோல் பங்க்கில் 15 நிமிடங்களுக்கு விற்பனை நிறுத்தப்படும்

1:25 PM, 16 Feb

பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் அஜய் பிசாரியா டெல்லி வந்தார்

வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் நடைபெறும் ஆலோசனையில் பங்கேற்பு

1:16 PM, 16 Feb

ராஜ்நாத்சிங் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டம் முடிவடைந்தது

காஷ்மீர் தாக்குதல் பற்றி எதிர்க்கட்சி தலைவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது

அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பதாக எதிர்க்கட்சிகள் அறிவிப்பு

12:56 PM, 16 Feb

காஷ்மீரிலிருந்து சிஆர்பிஎப் வீரர் சுப்பிரமணியன் உடல் மதுரை விமான நிலையம் வந்தது

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் பலியானவர் சுப்பிரமணியன்

மதுரையிலிருந்து சாலை மார்க்கமாக சுப்பிரமணியன் உடல் சொந்த ஊர் கொண்டு செல்லப்படுகிறது

12:22 PM, 16 Feb

உயிரிழந்த தமிழக வீரர்கள் குடும்பத்தில் தலா ஒருவருக்கு அரசு வேலை- முதல்வர்

சிவச்சந்திரன், சுப்பிரமணியன் ஆகியோர் வீர மரணம் அடைந்துள்ளனர்

12:10 PM, 16 Feb

திருச்சி விமான நிலையத்தில், சிவச்சந்திரன் உடலுக்கு நிர்மலா சீதாராமன் அஞ்சலி

அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி உள்ளிட்டோரும் அஞ்சலி

நூற்றுக்கணக்கான பொதுமக்களும் சிஆர்பிஎப் வீரர் உடலுக்கு வீர வணக்கம்

11:36 AM, 16 Feb

அனைத்துக் கட்சி கூட்டத்தில் குலாம் நபி ஆசாத், சரத் பவார் உள்ளிட்டோர் பங்கேற்பு
11:32 AM, 16 Feb

காஷ்மீர் தாக்குதல் தொடர்பாக டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் துவக்கம்

உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்

11:21 AM, 16 Feb

சிவச்சந்திரன் உடலுக்கு எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி செலுத்த உள்ளார்

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் சிவச்சந்திரன்

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணியன் உடலுக்கு ஓபிஎஸ் அஞ்சலி செலுத்த உள்ளார்

அரியலூர் விரைந்தார் எடப்பாடி பழனிச்சாமி, தூத்துக்குடி சென்றார் ஓபிஎஸ்

11:18 AM, 16 Feb

தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட தமிழக சிஆர்பிஎப் வீரர்கள் உடல் திருச்சி வந்தது

அஞ்சலி செலுத்த திருச்சி விமான நிலையத்தில் நிர்மலா சீதாராமன் வருகை

10:23 AM, 16 Feb

இந்தியாவின் பதிலடி தாக்குதலுக்கு அமெரிக்கா ஆதரவு

அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தகவல்

இந்திய பாதுகாப்புத்துறை ஆலோசகர் அஜித் தோவலுடன் ஜான்போல்டன் ஆலோசனை

7:51 AM, 16 Feb

காஷ்மீர் தாக்குதல் தொடர்பாக இன்று அனைத்துக் கட்சி கூட்டம்

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது

8:21 PM, 15 Feb

வீரமரணமடைந்த சிஆர்பிஎப் வீரர்களின் உடல்கள் டெல்லி கொண்டு வரப்பட்டது

டெல்லி பாலம் விமான நிலையத்தில் ராணுவ வீரர்கள் அஞ்சலி

பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அஞ்சலி

6:14 PM, 15 Feb

புல்வாமா தாக்குதல் பற்றி ஆலோசிக்க நாளை அனைத்துக் கட்சி கூட்டம்

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்

5:45 PM, 15 Feb

காயமடைந்த சிஆர்பிஎப் வீரர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் ராஜ்நாத்சிங்
4:25 PM, 15 Feb

இந்தியாவிற்கான பாகிஸ்தான் தூதரை நேரில் அழைத்து அறிவுறுத்தல்

பாக். தூதருக்கு வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே அறிவுறுத்தல்

ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்

3:56 PM, 15 Feb

பாகிஸ்தானிலுள்ள இந்திய தூதர் தாயகம் திரும்ப மத்திய அரசு உத்தரவு

பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இந்தியா தயாராகும் நிலையில் உத்தரவு

READ MORE

Whats is happening now in Jammu Kashmir now- Live updates

English summary
Narendra Modi will chair a meeting of the Cabinet Committee on Security at 9.15 am today to take a call on the next course of action and look at options.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X