டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இதுபோதுமே.. பொய்யான செய்திகளை கண்டுபிடிக்க புதிய வசதி.. தேர்தல் நேரத்தில் கலக்கும் வாட்ஸ் ஆப்!

லோக்சபா தேர்தலை முன்னிட்டு வாட்ஸ் ஆப்பில் பொய்யான செய்திகள் பரவுவதை தடுக்கும் வகையில் ''செக்பாயிண்ட் டிப்லைன் (Checkpoint Tipline)'' என்ற வசதி ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Whatsapp New Update: வாட்ஸ் ஆப்பில் கடைசியாக அந்த அப்டேட் வந்துடுச்சு- வீடியோ

    டெல்லி: லோக்சபா தேர்தலை முன்னிட்டு வாட்ஸ் ஆப்பில் பொய்யான செய்திகள் பரவுவதை தடுக்கும் வகையில் ''செக்பாயிண்ட் டிப்லைன் (Checkpoint Tipline)'' என்ற வசதி ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.

    கடந்த வருடம் முழுக்க வாட்ஸ் ஆப்பில் பொய்யான செய்திகள் நிறைய பரவி பெரிய பிரச்சனையை ஏற்படுத்தியது. அதில் முக்கியமானது என்றால் குழந்தை கடத்தல் வதந்தி. இதை தடுப்பதற்காக வாட்ஸ் ஆப் மெசேஜ்களை பார்வேட் செய்ய சில கட்டுப்பாடுகளை விதித்தது.

    அதன்படி ஒரு நபர் ஒரு மெசேஜை ஐந்து முறை மட்டுமே பார்வேட் செய்ய முடியும் என்று கட்டுப்பாடு விதித்தது. இந்த நிலையில் தேர்தலை முன்னிட்டு பொய்யான செய்திகளை கண்டுபிடிக்க புதிய முறை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    எப்படி

    எப்படி

    வாட்ஸ் ஆப்பில் நாம் பேசுவது end-to-end encryption செய்யப்பட்ட செய்திகள் ஆகும். இதனால் ஒருவர் அனுப்பும் மெசேஜை அனுப்பியவரும், பெறுபவரும் மட்டுமே படிக்க முடியும். வேறு யாரும் படிக்க முடியாது. இதனால் ஒருவர் இன்னோர் நபருக்கு அனுப்பும் செய்தியை பொய்யான செய்தியா என்று வாட்ஸ் ஆப்பால் கூட கண்டுபிடிக்க முடியாது. இதற்குத்தான் தற்போது தீர்வு கிடைத்துள்ளது.

    தீர்வு என்ன

    தீர்வு என்ன

    புரோட்டோ (PROTO) என்ற நிறுவனம் இதற்காக ''செக்பாயிண்ட் டிப்லைன் (Checkpoint Tipline)'' என்ற வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. +91-9643-000-888 என்ற எண்தான் இந்த செக்பாயிண்ட் டிப்லைன் வசதியின் வாட்ஸ் ஆப் எண் ஆகும். இதன் மூலம்தான் தற்போது பொய்யான தகவல்களை கண்டுபிடிக்க போகிறார்கள்.

    மோடியே சொன்னார்.. சரின்னுட்டேன்.. சுரேஷ் கோபி அதிரடி மோடியே சொன்னார்.. சரின்னுட்டேன்.. சுரேஷ் கோபி அதிரடி

    நல்ல யோசனை

    நல்ல யோசனை

    முதலில் செக்பாயிண்ட் டிப்லைன் வசதியில் நிறைய பொய்யான செய்திகள், தகவல்கள் சேகரிக்கப்படும். அதன்பின் புதிது, புதிதாக வரும் பொய்யான தகவல்களை நாமும் அவர்களிடம் கொடுக்கலாம். செக்பாயிண்ட் டிப்லைன் பின்னில் இயங்கும் பலர் பல்வேறு துறைகளில் செய்திகளை ஆராய்ந்து வருவார்கள். இதனால் இந்த டேட்டா பேஸ் மூலம் புதிதாக எந்த பொய்யான செய்தி வந்தாலும் அவர்கள் கண்டுபிடித்து விடுவார்கள்.

    எப்படி செய்ய வேண்டும்

    எப்படி செய்ய வேண்டும்

    இதில் நாம் செய்ய வேண்டியது எல்லாம் ஒரே விஷயம்தான். நமக்கு ஒரு வாட்ஸ் ஆப் செய்தி மீது நம்பிக்கை இல்லையென்றால் போதும், அதை இந்த வாட்ஸ் ஆப் பக்கத்திற்கு அனுப்ப வேண்டும். அவர்கள் அதை தங்களிடம் இருக்கும் டேட்டா பேஸ், அறிவுஜீவிகளின் உதவியுடன் பொய்யா, உண்மையா என்று கண்டுபிடித்து பதில் அனுப்புவார்கள்.

    எளிதாக முடியும்

    எளிதாக முடியும்

    இதை வாட்ஸ் ஆப் நிறுவனமும் இணைந்து உருவாக்கி இருக்கிறது என்பதுதான் குறிப்பிடத்தக்க விஷயம். இதன் மூலம் எளிதாக ஒரு செய்தி பொய்யா உண்மையா என்று கண்டுபிடிக்க முடியும். முக்கியமாக தேர்தல் தொடர்பான செய்திகளை எளிதாக கண்டுபிடிக்க முடியும்.

    English summary
    WhatsApp introduces CheckPoint Tipline platform to scrub fake news during election time.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X