டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மேடம், சாம்சங் பிரிட்ஜ் ரிப்பேர்.. பிரதர் இது என் வேலையில்லை.. அசால்ட் செய்த சுஷ்மா

Google Oneindia Tamil News

Recommended Video

    Sushma Tweets | ட்விட்டரில் நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்த சுஷ்மா- வீடியோ

    டெல்லி: மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், டிவிட்டரில் பலரது குறைகளையும் கேட்டறிந்து தீர்த்து வைத்தவர். எந்த அளவுக்கு என்றால், வீட்டு குளிர்சாதன பெட்டி பழுதடைந்த விவகாரம் வரை அவரிடம் டிவிட்டரில் புகார் அளிக்கப்படும் அளவுக்கு..

    ஆமாம். வெளிநாடு வாழ் இந்தியர்கள் சந்திக்கும் பிரச்சினைகள், உள்நாட்டு இந்தியர்களின் பாஸ்போர்ட் பிரச்சினைகள் உள்ளிட்டவை குறித்து கவனித்து வந்த சுஷ்மா சுவராஜுக்கு, சாம்சங் பிரிட்ஜால் ஒருமுறை தலைவலி ஏற்பட்டது.

    When Sushma Swaraj says Brother, I cannot help you in matters of a refrigerator

    சாம்சங் நிறுவனத்தில் குளிர்சாதன பெட்டி வாங்கியிருந்த, வெங்கட் என்பவர் அந்த குளிர்சாதன பெட்டியில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்ய நிறுவனம் தவறி விட்டதாக, சுஷ்மா சுவராஜின் டுவிட்டர் பக்கத்தில் புகார் தெரிவித்திருந்தார்.

    நேற்று இரவு 8.45 மணிக்கு கூட என்னிடம் போனில் பேசினார்.. சுஷ்மா சுவராஜ் குறித்த உருகிய நண்பர்! நேற்று இரவு 8.45 மணிக்கு கூட என்னிடம் போனில் பேசினார்.. சுஷ்மா சுவராஜ் குறித்த உருகிய நண்பர்!

    அது 2016ம் ஆண்டு ஜூன் மாதம். அப்போது வெளியுறவுத்துறை அமைச்சராக சுஷ்மா பொறுப்பேற்று 2 வருடங்கள்தான் ஆகியிருந்தது. பல்வேறு மக்கள் பிரச்சினைகளில் சுஷ்மா பிஸியாக இருந்த காலகட்டம் அது.

    இந்த நிலையில், இப்படி ஒரு ட்வீட்டை பார்த்து மனம் வெறுத்துப் போனார் சுஷ்மா. 'பிரதர்.., ஆபத்தில் தவித்துவரும் மனிதர்களை பாதுகாப்பது தொடர்பான பணிகளில் நான் மிகவும் பிஸியாக இருக்கிறேன். இந்நிலையில், உங்கள் வீட்டு பிரிட்ஜ் விவகாரம் தொடர்பாக நான் உதவி செய்ய முடியாது' என்று தெரிவித்தார்.

    இந்த ட்வீட் அந்த காலகட்டத்தில் வைரலாக சுற்றி வந்தது. ஒரு வழியாக தனது தவறை உணர்ந்த, வெங்கட், ட்வீட்டை டெலிட் செய்துவிட்டார். ஆனால், சுஷ்மா ட்வீட் இன்னும் அப்படியே உள்ளது.

    English summary
    Help fix my fridge- External Affairs Minister Sushma Swaraj was today requested by a netizen, but had to plead that she was not in a position to oblige.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X