டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தெற்கு அரபிக் கடலில் எப்போது தொடங்கும் தென்மேற்கு பருவமழை? தென் தமிழகத்தின் வறட்சியை போக்குமா?

Google Oneindia Tamil News

Recommended Video

    TN Weather Update: தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று இடியுடன் கனமழை பெய்யும்- வீடியோ

    டெல்லி: தெற்கு அரபிக்கடலில் தென்மேற்கு பருவமழை எப்போது தொடங்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    ஜூன் மாத தொடக்கத்தில் பெய்யத் தொடங்கும் தென்மேற்கு பருவ மழையின் மூலம் அதிகளவு மழைப்பொழிவை இந்தியா பெறுகிறது. இந்தியா பெறும் மழையளவில் சுமார் 70 சதவீத மழை தென்மேற்கு பருவ காலத்தின் போதுதான்.

    தென்மேற்கு பருவ மழையின் போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாநிலங்கள், கோவா, குஜராத், மத்தியப்பிரதேசம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் அதிக மழைப்பொழிவை பெறும்.

    பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன அய்யாக்கண்ணு.. கர்நாடக அரசை 'டிஸ்மிஸ்' செய்ய வலியுறுத்தல் பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன அய்யாக்கண்ணு.. கர்நாடக அரசை 'டிஸ்மிஸ்' செய்ய வலியுறுத்தல்

    அந்தமானில் தொடங்கிவிட்டது

    அந்தமானில் தொடங்கிவிட்டது

    தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்களும் இந்தக் காலக்கட்டத்தில் பரவலாக நல்ல மழையை பெறும். இந்நிலையில் தெற்கு அந்தமான் பகுதியில் ஏற்கெனவே பருவமழை தொடங்கி விட்டது.

    எப்போது தெற்கு அரபிக்கடலில்?

    எப்போது தெற்கு அரபிக்கடலில்?

    வரும் 5ஆம் தேதிக்குப் பிறகு கேரள மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் தெற்கு அரபிக்கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    குடிநீருக்காக அலையும் மக்கள்

    குடிநீருக்காக அலையும் மக்கள்

    தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. பல இடங்களில் குடிநீர் கூட இல்லாத நிலையில் மக்கள் பல கிலோ மீட்டர் தொலைவு குடி தண்ணீருக்காக குடத்தை தூக்கிக்கொண்டு அலைகின்றனர்.

    பாழாய் போகும் விளைநிலங்கள்

    பாழாய் போகும் விளைநிலங்கள்

    பருவமழை பொய்த்துப்போனதால் பல மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் அதளபாதாளத்துக்கு சென்றுவிட்டது. இதனால் கைப்பம்புகள் மற்றும் மோட்டார் பம்புகள் மூலம் தண்ணீர் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் விளை நிலங்கள் பழாய் போகின்றன.

    மேய்ச்சலுக்கு விடப்பட்ட விளை நிலங்கள்

    மேய்ச்சலுக்கு விடப்பட்ட விளை நிலங்கள்

    தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் தண்ணீரின்றி விளை நிலங்களும் விவசாய பயிர்களும் காய்ந்து சறுகாகியுள்ளன. பல இடங்களில் பயிரிடப்பட்ட விவசாய நிலங்களை தண்ணீர் இல்லாதததால் கால்நடைகளின் மேய்ச்சலுக்காக விட்டுள்ளனர் விவசாயிகள்.

    நீர்த்தேவை பூர்த்தியாகவில்லை

    நீர்த்தேவை பூர்த்தியாகவில்லை

    தமிழகத்தின் ஒரு சில இடங்களில் அவ்வப்போது கோடை மழை பெய்தாலும், அது வெப்பத்தை தணிக்கும் வகையில்தான் உள்ளதே தவிர, நீர் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு இல்லை. இதனால் எப்போது மழை பெய்யும் என காத்துக்கிடக்கின்றனர் தமிழக மக்கள்.

    எதிர்பார்ப்பு அதிகரிப்பு

    எதிர்பார்ப்பு அதிகரிப்பு

    இந்நிலையில் தென்மேற்கு பருவமழையின் போது கேரள மாநிலம் முல்லைப் பெரியாறு உள்ளிட்ட அணைகளும், கன்னியாகுமரி மாவட்டத்தின் நீர் ஆதாரங்களும் நிரம்பி பயன்பெறும் என்பதால் தென்மேற்கு பருவமழை குறித்த எதிர்பார்ப்பு தமிழக மக்களிடம் அதிகரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    The Indian Meteorological Center has said that when the southwest monsoon begins in southern Arabian sea. Within 24 hours southwest monsoon will start in Southern Arabian sea.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X