டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவில் மூன்றாவது அலை எப்போது?.. தாக்கம் எப்படி இருக்கும்?.. நிபுணர்கள் கருத்து

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை பிப்ரவரி மாதம் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் டெல்டாவை போல் ஓமிக்ரான் பெரிய பாதிப்பை தராது என்ற ஆறுதலான செய்தியும் கிடைத்துள்ளது.

2019ஆம் ஆண்டு இறுதி முதல் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று வெளிநாடுகளில் 3ஆவது அலை, 4 ஆவது அலை வரை சென்றுவிட்டது. இந்தியாவில் 2 அலைகள் இது வரை ஏற்பட்டுள்ளன.

இதில் முதல் அலையை விட இரண்டாவது அலை வீரியமிக்கதாக இருந்தது. அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் 3ஆவது அலை பற்றிய அச்சம் மக்களிடையே இருந்தது.

இந்தியாவில் ஓமிக்ரான் 23 பேருக்கு பாதிப்பு: மகாராஷ்டிராவில் மேலும் இருவருக்கு தொற்று உறுதி இந்தியாவில் ஓமிக்ரான் 23 பேருக்கு பாதிப்பு: மகாராஷ்டிராவில் மேலும் இருவருக்கு தொற்று உறுதி

முக்கிய காரணம்

முக்கிய காரணம்

2ஆவது அலைக்கு முக்கிய காரணம் டெல்டா வேரியண்ட். இது உருமாற்றமடைந்ததால்தான் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. அது போல் 3-ஆவது அலை ஏற்பட வேண்டுமென்றால் ஒரு புதிய வேரியண்ட் வந்தால்தான் என்ற நிலை இருந்தது.

புதிய வேரியண்ட்

புதிய வேரியண்ட்

தற்போது தென்னாப்பிரிக்காவிலிருந்து புதிய வேரியண்ட் ஓமிக்ரான் பரவி வருகிறது. இது அந்த நாட்டில் 4ஆவது அலை ஏற்பட காரணமாயிற்று. அந்த வகையில் இந்தியாவிலும் இந்த வேரியண்ட்டால் 3ஆவது அலை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஓமிக்ரான் மேலும் பரவாமல் இருக்க விமான நிலையங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஐஐடி

ஐஐடி

இந்த நிலையில் இந்தியாவில் 3ஆவது அலை குறித்து ஐஐடி பேராசிரியர் மனிந்தர அகர்வாலிடம் கேட்ட போது அவர் கூறுகையில் ஓமிக்ரான் வைரஸால் இந்தியாவில் பிப்ரவரி மாதத்தில் மூன்றாவது அலை ஏற்படலாம் என்றும் ஆனால் அதன் தாக்கம் இரண்டாவது அலையைவிட குறைவாகவே இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

Recommended Video

    Omicron Symptoms என்ன? | உருமாறிய புதிய Corona Variant | Oneindia Tamil
    ஓமிக்ரான் வைரஸ் தாக்குதல்

    ஓமிக்ரான் வைரஸ் தாக்குதல்

    பிப்ரவரி மாதம் ஓமிக்ரான் வைரஸ் தாக்குதல் உச்சத்தில் இருக்கும் போது இந்தியாவில் நாளொன்றுக்கு 1.50 லட்சம் பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட கூடும். டெல்டா பரவலின் போது கடைப்பிடிக்கப்பட்டது போல் இரவு நேர ஊரடங்கு போல் மிதமான ஊரடங்கு, கூட்டங்களுக்குத் தடை விதிப்பது போன்றவற்றை கடைப்பிடித்தாலே போதுமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    English summary
    The 3rd wave in India will become peak in February month, says IIT Expert.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X