டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாக். விமானப்படை வீரரின் மகனுக்கு பத்ம ஸ்ரீ விருதா? அப்பறம் ஏன் சிஏஏ.. மத்திய அரசுக்கு காங். கேள்வி

பாகிஸ்தான் விமானப்படை வீரர் அர்ஷத் சாமி கானின் மகன் அட்னன் சமிக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: பாகிஸ்தான் விமானப்படை வீரர் அர்ஷத் சாமி கானின் மகன் அட்னன் சமிக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டிற்கான மத்திய அரசு நேற்று அறிவித்தது. இதில், 7 பேருக்கு பத்ம விபூஷண், 16 பேருக்கு பத்ம பூஷண் மற்றும் 118 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டது. இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பாடகர் அட்னன் சமி கானுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது.

When you can give Padma Shri for Adnan Sami, Why bring CAA? asks Congress

அட்னன் சமி கான் லண்டனில் பிறந்தவர். இவர் கனடாவில் வசித்து வந்தார். அதன்பின் 2015ல் இந்தியாவில் குடியேறினார். 2016ல் இவருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது.

இவரின் அப்பா அர்ஷத் சாமி கான் பாகிஸ்தானை சேர்ந்தவர். அவர் பாகிஸ்தான் விமானப்படை வீரர். இவர் பாகிஸ்தானில் நிறைய அரசியல் பணிகளை செய்துள்ளார். ராணுவம் தொடர்பான முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். அதோடு கார்கில் போரில் பாகிஸ்தான் சார்பாக கலந்து கொண்டு இருக்கிறார்.

இந்த நிலையில்தான் இந்தியாவில் குடியேறிய அவரின் மகன் அட்னன் சமிக்கு பத்ம ஸ்ரீ அளிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் இந்த முடிவை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்வீர் செர்கில் தெரிவித்துள்ள கருத்தில், அட்னன் சமிக்கு குடியுரிமை வழங்க முடிகிறது. அவருக்கு பத்ம ஸ்ரீ கூட வழங்க முடிகிறது. ஆனால் ஏன் இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்த அரசு சிஏஏ சட்டம் கொண்டு வருகிறது.

3 பைக்கில் வந்த 6 மர்ம நபர்கள்.. குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி.. போலீஸ் விசாரணை3 பைக்கில் வந்த 6 மர்ம நபர்கள்.. குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி.. போலீஸ் விசாரணை

ஒரு பாகிஸ்தானி முஸ்லீமிற்கு அரசு இவ்வளவு செய்யும் போது, ஏன் அரசு சிஏஏ கொண்டு வருகிறது. மக்களை பிரிக்கும், இந்து - இஸ்லாமியர்களை பிரிக்கும் சிஏஏவை ஏன் கொண்டு வருகிறார்கள். அதிலும் அட்னன் சமியின் அப்பா பாகிஸ்தானின் விமானப்படையில் இருந்தவர்.

அரசுக்கு சாதகமாக இருந்தால் அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் போல. கார்கில் போரில் இந்தியாவிற்காக போராடியவர் முகமது சன்னஉல்லா. ஆனால் என்ஆர்சி மூலம் அசாமை சேர்ந்த அவரின் குடியுரிமையை பறித்துவிட்டீர்கள்.

இந்தியாவிற்காக போராடிய ராணுவ வீரருக்கு இதுதான் நிலை. ஆனால் பாகிஸ்தான் விமானப்படை வீரரின் மகனுக்கு இந்தியாவில் மிக உயரிய விருது. இதுதான் உங்கள் புதிய இந்தியாவா? என்ன நியாயம் இது என்று ஜெய்வீர் செர்கில் கேள்வி எழுப்பி உள்ளார்.

English summary
When you can give Padma Shri for Adnan Sami, Why bring CAA? asks Congress to Center.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X