• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

இரவு 8 மணிக்கு பிரதமர் வரும்போதெல்லாம், கெட்ட செய்தி பின்னே வருகிறது.. தயாநிதி மாறன்

|

டெல்லி: 564 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த போது லாக்டவுன் அறிவித்த மோடி அரசு, 54 லட்சம் பேருககு இருக்கிற போது திறந்துவிட்டுள்ளது என லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. இரவு 8 மணிக்கு பிரதமர் வரும்போதெல்லாம், கெட்ட செய்தி பின்னே வருகிறது என்று தயாநிதி மாறன் விமர்சித்தார்

கோவிட் -19 நெருக்கடியைக் கையாள்வது தொடர்பாக எதிர்க்கட்சிகள் லோக்சபாவில் பிரதமர் மோடி தலைமயிலான அரசை கடுமையாக விமர்சித்தன. திட்டமிடப்படாத" ஊரடங்கு, அதிகரித்து வரும் கேஸ்கள், புலம்பெயர்ந்தோர் நெருக்கடி போன்றவை மற்றும் இவை அனைத்தாலும் பொருளாதாரத்தில் ஏற்பட்ட விளைவு போன்றவற்றை சொல்லி கடுமையாக பேசின.

காங்கிரஸ் எம்பி சசி தரூர் பேசுகையில் , எதிர்க்கட்சிகளை கலந்தாலோசிக்காமல் ஒருதலைப்பட்ச முடிவுகளை எடுப்பதற்கு அரசு முனைப்பு காட்டியதன் டூமுலம் ஜனநாயகத்தின் அடிப்படை மாண்புகளை மத்திய அரசு சிதைத்துவிட்டது என்று கடுமையாக விமர்சித்தார்.

விவசாயிகளை முதலாளிகளின் அடிமைகளாக்கும்.. இது 'விவசாயிகளுக்கு எதிரான மரண உத்தரவு'.. ராகுல் காந்தி

54 லட்சம் பேருக்கு பாதிப்பு

54 லட்சம் பேருக்கு பாதிப்பு

இது தொடர்பாக அவர் கூறும் போது, "உலக நாடுகளில் சில கொரோனா வைரஸை திறம்பட கட்டுப்படுத்தினர், மற்றவர்கள் பொருளாதாரத்தை தொடர்ந்து கொண்டே வைரஸைக் கட்டுப்படுத்தினர். ஆனால் இந்தியா மிகவும் மோசமான சூழ்நிலையில் உள்ளது. பொருளதாராமும் சரிந்துவிட்டது. வைரசும் கட்டுப்படுத்தப்படவில்லை. இந்தியாவில் மட்டுமே இப்படி நடந்தள்ளது. 564 பேருக்கு பாதிப்பு இருந்த போது லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. ஆனால் 54 லட்சம் பேருக்கு கொரோனா வந்த பிறகு திறந்துவிட்டுள்ளார்கள். தொற்றுநோய் இறுதியாக "அரசாங்கத்தின் தவறுகளை மறைக்க வாய்ப்பை கொடுத்துள்ளது என்று அவர் கூறினார்.

பாஜ எம்பி பாராட்டு

பாஜ எம்பி பாராட்டு

பாஜக எம்.பி. கிரிட் சோலங்கி, சசி தாரூரின் குற்றச்சாட்டை மறுத்தார்.- பிரதமர் நரேந்திர மோடி "ஒற்றைக் கையால் கொரோனாவிற்கு எதிரான போரை வழிநடத்தியதாக" அவர் பாராட்டினார். எனினும் லோக்சபாவில் மாநிலங்களை கலந்தாலோசிக்க அரசாங்கம் முடிவெத்ததாக குற்றச்சாட்டு விவாதம் முழுவதும் இருந்தது.

இரவு 8மணிக்கு மோடி

இரவு 8மணிக்கு மோடி

மோடி அரசு எந்த ஒரு மாநிலத்தையோ, நாட்டையோக நம்பிக்கை தருபவையாக முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு செயல்படவில்லை என்று திமுக எம் பி தயாநிதி மாறன் குற்றம்சாட்டினார். இரவு 8 மணிக்கு பிரதமர் வரும்போதெல்லாம், கெட்ட செய்தி பின்னே வருகிறது என்று தயாநிதி மாறன் கூறினார். "எந்தவொரு யுக்தி சார்ந்த திட்டமிடலும் இல்லாமல் லாக்வுடன் விதிக்கப்பட்டது, மாநிலங்கள் என்ன செய்வது என்று தெரியாத நிலைக்கு தள்ளப்பபட்டன. குழப்பம் ஏற்பட்டது. ஆனால் பிரதமர் மோடியோ கைதட்டுங்கள் மற்றும் விளக்குகளை அணையுங்கள் என்று கேட்டார், ஒரு மத்திய அமைச்சர் ‘கோ கொரோனா கோ' என்று கூறினார் ஆனால் கொரோனா செல்லவில்லை. " என்றார்.

கோவிட் தொகுப்பு

கோவிட் தொகுப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை குறைப்பது தனியார் நிறுவனங்களுக்கு இதேபோன்ற ஊதியக் குறைப்புகளைச் செய்வதற்கான செய்தியை அனுப்பும் என்றும் தயாநிதி மாறன் கூறினார். கொரோனாவில் இருந்து உயிர் பிழைத்த காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், ரூ .20 லட்சம் கோடி "கோவிட் தொகுப்பு" ஒரு "முழுமையான மாயை என்று அழைத்தார்.

ஜிஎஸ்டி இழப்பீடு

ஜிஎஸ்டி இழப்பீடு

சிவசேனா எம்.பி. அரவிந்த் சாவந்த் பிரதமரிடம் "தொடர்ந்து வழிநடத்த வேண்டும்" என்றும் "மாநிலங்களை சிக்கலில் விடக்கூடாது" என்றும் வலியுறுத்தினார். "நீங்கள் முன்பு எங்களுக்கு பிபிஇ கருவிகளையும் வென்டிலேட்டர்களையும் கொடுத்தீர்கள்" ஆனால் "என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் நீங்கள் இப்போது அதை நிறுத்திவிட்டீர்கள், மேலும் எங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்க மறுக்கிறீர்கள் என்றார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
“Whenever the PM comes at 8 pm, bad news follows,” “The lockdown was imposed with no strategic planning, states were unaware and chaos ensued. Maran said.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X