• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

என்னாது கைலாசா தீவில் நித்யானந்தா இல்லையா?.. அது எல்லாமே கப்ஸா? உண்மை என்ன?

Google Oneindia Tamil News

டெல்லி: பனி படர்ந்த மலைகள், மன நிம்மதியை கொடுக்கும் கடல்களுக்கு மத்தியில் இருப்பதாக நித்யானந்தா ஒவ்வொரு முறையும் கூறி வருகிறார். அப்படி அவர் எங்குதான் இருக்கிறார் என்ற கேள்வி எழுகிறது.

திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் நித்யானந்தா. இவர் தன்னை பரமசிவனின் அவதாரம் என கூறிக் கொண்டு பிடதியில் ஆசிரமத்தை தொடங்கினார். சித்து விளையாட்டுகளை கற்று தேர்ந்த இவருக்கு பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது.

இதையடுத்து 2010ஆம் ஆண்டு நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கை அறையில் நித்யானந்தா இருக்கும் காட்சிகள் வீடியோ வெளியானது. அதிலிருந்து அவர் நிறைய சர்ச்சைகளில் சிக்கினார்.

இட்லி சாப்பிட முடியல! பலூன் மாதிரி ஆயிட்டேன்..! மீண்டும் 'ஐ ஆம் பாவம்’ ஸ்டேட்டஸ் போட்ட நித்யானந்தா! இட்லி சாப்பிட முடியல! பலூன் மாதிரி ஆயிட்டேன்..! மீண்டும் 'ஐ ஆம் பாவம்’ ஸ்டேட்டஸ் போட்ட நித்யானந்தா!

பாலியல் வழக்கு

பாலியல் வழக்கு

பெங்களூரில் ஒரு பாலியல் வழக்கு, கடத்தல் வழக்குகளில் தேடப்பட்டு வந்த நித்யானந்தா திடீரென வெளிநாட்டு தப்பி சென்றார். அவர் ஆஸ்திரேலியாவில் கைலாசா எனும் தீவை விலைக்கு வாங்கிக் கொண்டு நிம்மதியாக இருப்பதாக தினந்தோறும் ஒரு காமெடியான சத்சங்கத்தை நடத்தி வந்தார்.

நித்தியானந்தா இருப்பிடம்

நித்தியானந்தா இருப்பிடம்

இவரை கைது செய்ய இவரது இருப்பிடத்தை போலீஸார் அறிய முடியாமல் திணறி வருகிறார்கள். உண்மையிலேயே கைலாசா எனும் தீவு உள்ளதா, இல்லை இவையெல்லாம் கட்டுக்கதைகளா என தெரியவில்லை. வேறு ஏதேனும் நாட்டில் இருந்து கொண்டு அந்த நாட்டின் பெயரை சொன்னால் அந்த நாட்டு போலீஸாரின் உதவியுடன் சிக்கிவிடுவோம் என்பதால் நித்தி உஷாராக இருக்கிறார்.

கைலாசாவில் நித்தியானந்தா

கைலாசாவில் நித்தியானந்தா

அண்மையில் ஒரு வீடியோவில் அவர் கூறுகையில் கைலாசாவில் நித்தியானந்தாவின் அறைகளுக்கு கதவுகளே இல்லை. மூடிய அறைக்குள் தூங்கும் பழக்கமே இல்லை. என் அறைக்கு யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வந்து என்னுடன் எதை பற்றி வேண்டுமானாலும் பேசலாம். ஊஞ்சலில் படுத்து கொண்டு பனி படர்ந்த மலையையும் கடலையும் ரசிக்கிறேன்.

 பனிமலை

பனிமலை


எனது வீடியோவை பார்க்கும் மக்கள் பனிமலையும் கடலும் ஒன்றாக எங்கே இருக்கிறது என கூகுளில் தேட ஆரம்பித்திருப்பார்கள் என நித்தியானந்தா கிண்டல் செய்திருந்தார். அது போல் தற்போது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உள்ள நித்தியானந்தா தனது பேஸ்புக் பக்கத்தில் தன்னால் இட்லி சாப்பிடமுடியவில்லை, 21 நிமிஷம் கூட தூங்க முடியவில்லை என கூறியுள்ளார்.

 உடல்நிலை

உடல்நிலை

அத்துடன் எனது உடல்நிலை நன்றாக இருக்கிறது. இந்த அமைதி, பனி படர்ந்த மலை, கடல்கள் - இவையெல்லாம் என்னை உயிருடனும் ஆற்றலுடனும் வைத்துள்ளன என கூறியுள்ளார். நித்யானந்தா தென் பசிபிக் பெருங்கடலிலுள்ள தீவு ஒன்றில் இருப்பதாகவும் அவர் கரீபியன் தீவில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பசிபிக் தீவுகள்

பசிபிக் தீவுகள்

ஏற்கெனவே அவர் இந்தியாவிலிருந்து வெளியேறி தென் அட்லாண்டிக் பகுதியில் ஒரு தீவில் வசித்தார். அப்போது அவருக்கு ராஜாங்க ரீதியிலான இடர்பாடுகள் ஏற்பட்டதை அடுத்து அவர் அங்கிருந்து தப்பி தென் பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவுக்கு தஞ்சமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தீவில் அவர் கூறுவது போல் பக்தர்கள் கூட்டம் எல்லாம் இருக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

பணம் அனுப்புதல்

பணம் அனுப்புதல்

அவருக்கு பணம் அனுப்புகிறார்கள் என்று கூறுவதும் பொய்தானாம். இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட பணத்தை வைத்துதான் அவர் குடியேறியுள்ள தீவில் வாழ்க்கை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அவர் சொல்வது போல் வங்கிக் கணக்கிற்கு யாராவது பணம் போட்டால் அதை போலீஸார் கண்டுபிடிக்காமல் இருக்க வாய்ப்பே இல்லை.

நித்யானந்தா சத்சங்கம்

நித்யானந்தா சத்சங்கம்

எனவே நித்யானந்தா வழக்கம் போல் சத்சங்கத்தில் அடித்து விடுவது போல் தனக்கு பணம் அனுப்புவதாக கூறி வருகிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது எலும்பும் தோலுமான படங்களை வெளியிட்டு அனுதாபத்தை பெற முயற்சிக்கிறாரா இல்லை உண்மையாகவே அவருக்கு உடல்நிலை பாதிப்பா என்பது தெரியவில்லை.

English summary
Where is Nithyananda? He is not in Kailasa?, he is in South Pacific islands? sources says.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X