டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பேசாமல் இந்த ஆண்டு நீட் தேர்வை ரத்து செய்யலாமே.. கட்டாயம் நடத்தித்தான் ஆக வேண்டுமா?

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் பெரும் பாதிப்பை சந்தித்து வரும் நிலையில் நீட் தேர்வுகளை இந்த ஆண்டு ரத்து செய்தால் மாணவர்களின் நலனுக்கு உதவியாக இருக்கும் என அனைவரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

தமிழகத்தில் ஜெயலலிதா இருக்கும் வரை நீட் தேர்வு உள்ளே வரவில்லை. அவர் இறந்த பிறகு கடந்த 2017ஆம் ஆண்டு முதல் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கு முன்னர் வரை மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் இயற்பியல், கணிதம், உயிரியல், வேதியியல் ஆகிய மதிப்பெண்களின் கட் ஆஃப் மதிப்பெண்களை கொண்டு மருத்துவ சேர்க்கை நடைபெற்று வந்தது.

ஆனால் நீட் தேர்வுபடி இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான தேர்வு அந்தந்த பிராந்திய மொழிகளில் நடைபெறும். அதில் அதிக மதிப்பெண்கள் பெறுவதை வைத்தே மருத்துவ சேர்க்கை நடைபெறுகிறது.

மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு ஜூலை 26-ல் நடைபெறும்- மத்திய அரசு மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு ஜூலை 26-ல் நடைபெறும்- மத்திய அரசு

மாநில பாடப்பிரிவு

மாநில பாடப்பிரிவு

இந்த தேர்வு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு வேண்டுமானாலும் எளிதாக இருக்கும். ஆனால் மாநில பாடப்பிரிவின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு இந்த தேர்வுக்கு தயாராவது என்பதே பெரும் சவாலாக உள்ளது. இதனால்தான் தமிழகம், புதுவை உள்ளிட்ட அரசுகள் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்குமாறு கோரிக்கை விடுத்தன.

குழந்தை

குழந்தை

மேலும் வசதி வாய்ப்பை பெற்றிருக்கும் குழந்தைகள் நீட்டுக்கான சிறப்பு வகுப்புகளில் லட்சக்கணக்கில் பணம் செலுத்தி கற்றுக் கொள்கின்றனர். ஆனால் உணவுக்கே வழியில்லாமல் மருத்துவராகி இலவச வைத்தியம் பார்க்க வேண்டும் என்ற உயரிய லட்சியத்துடன் இருக்கும் ஏழை கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு என்பது எட்டாக்கனியாகி வருகிறது.

பாதிப்பு

பாதிப்பு

இது போன்று பிரச்சினைகள் இருக்க தற்போது கொரோனா லாக்டவுன் வேறு வந்துவிட்டது. இதனால் வழக்கமாக மே மாதம் நடைபெறும் நீட் தேர்வு முதலில் ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது ஜூலை மாதம் 26 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா லாக்டவுனால் நாடு முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மாணவர்களால் வெளியே சென்று புத்தகங்களை வாங்கவோ, கோச்சிங் வகுப்புகளுக்கு செல்லவோ வழியில்லாமல் போய்விட்டது.

பயிற்சிகள்

பயிற்சிகள்

என்னதான் ஆன்லைன் மூலம் நீட் தேர்வுக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டாலும் அந்த வசதிகளை இல்லாத ஏழை மாணவர்களின் நிலையை கருத்தில் கொள்ள வேண்டும். அரசும் தன்னார்வலர்களும் இலவசமாக நடத்தி வந்த நீட் தேர்வு வகுப்புகளில் படித்து வந்தார்கள். தற்போது வெளியே போக முடியாததால் இவர்கள் தேர்வு தயாராவதில் சிக்கல் உள்ளது.

நன்றிக் கடன்

நன்றிக் கடன்

எனவே நாடு முழுவதும் நீட் தேர்வை இந்த ஆண்டு மட்டுமாவது ரத்து செய்தால் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மருத்துவர்கள், மருத்துவமனைகள் பூக்களை தூவியும் கைகளை தட்டியும் விளக்குகளை ஏற்றியும் நன்றிக் கடன் செலுத்துவதை காட்டிலும் ஏழை மாணவர்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும். இந்த கொரோனா, மருத்துவர்களின் அருமையையும் அவர்களின் அர்ப்பணிப்பையும் புரிய வைத்திருக்கும். அந்த அர்ப்பணிப்புக்கு நன்றி செலுத்தும் விதமாக நீட் தேர்வை இந்த ஆண்டு ரத்து செய்ய வேண்டும்.

English summary
Students and Parents are expected whether the Neet exam for this year will be cancelled because of Lockdown.?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X