டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாஜக எம்பியுடன் தொடர்புடைய போலி பேஸ்புக் கணக்குகளை நீக்க மறுத்தார்கள் - முன்னாள் ஊழியர் பகீர்..!

Google Oneindia Tamil News

டெல்லி: பாஜக எம்பியுடன் தொடர்புடைய போலி பேஸ்புக் கணக்குகளை நீக்க மறுத்தார்கள் என முன்னாள் ஊழியர் பகீர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

கடந்த ஆண்டு டெல்லி தேர்தலின் போது போலி கணக்குகளை நீக்கும் விவகாரத்தில் பேஸ்புக் நிறுவனமானது பாரபட்சமாகவே நடவடிக்கை எடுத்ததாகவும் அந்த நிறுவனத்தின் முன்னாள் தரவு விஞ்ஞானியும் சமூக நல ஆர்வலருமான சோஃபி ஜாங் குற்றம்சாட்டியுள்ளார்.

Whistleblower says that FB didnot block fake account linked to BJP MP

இந்த நிலையில் சோஃபி ஜாங், பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் போலி பேஸ்புக் கணக்குகளை கொண்டு தேர்தலை சந்தித்தன. இதில் பாஜக எம்பியுடன் நேரடி தொடர்பில் உள்ள கணக்குகள் பேஸ்புக் நிறுவனத்தால் நீக்கப்படவில்லை. நீக்கவும் மறுத்துவிட்டார்கள் என சோஃபி குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளாக பேஸ்புக் நிறுவனத்தில் பணியாற்றி வந்த சோஃபி கூறுகையில் நாங்கள் 5 நெட்வொர்குகளில் 4 ஐ டெலிட் செய்துவிட்டோம். ஆனால் 5ஆவது நெட்வொர்கை அகற்றுவதற்கு முன்னர் பார்த்தால் அது பாஜக எம்பியுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்தோம். இந்த போலி கணக்குகளை வைத்து கொண்டு என்ன செய்ய போகிறார்கள் என்பதற்கான விடையை யாரும் தரவில்லை.

கடந்த 2019 ஆம் ஆண்டு 4 போலி நெட்வொர்க்குகள் இருந்தன. அந்த 4 இல் தலா இரண்டு பாஜக , காங்கிரஸ் கட்சியினுடையது. அந்த 4 இல் 3 நெட்வொர்க்குகளை நீக்கிவிட்டோம். அப்போது கடைசியாக 4 ஆவது நெட்வொர்க்கானது பாஜக அரசியல்வாதியின் ஒருவரது நேரடி கணக்கு என்பது தெரியவந்ததும் அந்த நெட்வொர்க்கை எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை.

Whistleblower says that FB didnot block fake account linked to BJP MP

கடந்த 2020 ஆம் ஆண்டு கூட ஆயிரக்கணக்கான நெட்வொர்க்குகளை நீங்கள் கண்டுபிடித்தோம். அவரை ஆம் ஆத்மி கட்சி ஆதரவாக மெசேஜ்களை அனுப்ப பயன்படுத்தப்பட்டது என்பதை அறிந்தோம். அது போல் சில கணக்குகள் தங்களை பாஜக ஆதரவாளர்கள் என தவறாக சித்தரித்தும் பயன்படுத்தப்பட்டவையாகும்.

5ஆவது நெட்வொர்க் கடந்த ஜனவரி மாதம் இறுதியில் நீக்கப்பட்டுவிட்டது. ஆனால் பாஜகவினர் ஒருவருக்கு சொந்தமான கணக்கை மட்டும் எங்களால் நீக்க முடியவில்லை. பணக்காரர்கள், அதிகாரமிக்கவர்களுக்கு ஒரு சட்டம், ஏழைகளுக்கு ஒரு சட்டம் என இருந்தால் ஜனநாயகம் இருக்காது என்றார் ஜாங். ஆனால் ஜாங்கின் குற்றச்சாட்டுகளை பேஸ்புக் நிறுவனம் மறுத்துள்ளது. சட்டவிரோத செயல்பாடுகளுடன் தொடர்புடைய 150 க்கும் மேற்பட்ட நெட்வொர்க்குகளை நாங்கள் ஏற்கெனவே நீக்கிவிட்டோம் என்றும் சட்டவிரோத செயல்பாடுகளை ஒடுக்குவதுதான் எங்கள் முதல் பணியாகும். அதே நேரத்தில் ஸ்பாம் மற்றும் போலி கணக்குகள் குறித்த பிரச்சினைகளை தீர்ப்பதிலும் நாங்கள் உறுதியாக உள்ளோம் என பேஸ்புக் நிறுவனம் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.

English summary
Whistleblower says that Facebook didnot block fake account linked to BJP MP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X