டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

துணியால் செய்யப்பட்ட மாஸ்குகளை எங்கு பயன்படுத்தக்கூடாது.. உலக சுகாதார அமைப்பு முக்கிய அறிவுரை

Google Oneindia Tamil News

டெல்லி: சமூக விலகலை பின்பற்ற முடியாத கூட்டமான இடங்களில் துணியிலிருந்து தயாரிக்கப்படும் முககவசங்களை பயன்படுத்தக்கூடாது என்று உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.

Recommended Video

    துணியால் செய்யப்பட்ட மாஸ்குகளை பயன்படுத்துபவர்களுக்கு WHO முக்கிய அறிவுரை

    உடல் ரீதியான சமூக இடைவெளி தூரத்தை பின்பற்ற முடியாத இடங்களில், ஆபத்து அதிகமாக உள்ள கூட்டமான இடங்களில் துணியால் உருவாக்கப்பட்ட முககவசங்களைவிட மருத்துவ முககவசத்தை விரும்பி அணிய வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

    WHO advised where crowed places not to wear a mask made from cloth

    கொரோனா வைரஸ் 5 நாட்களுக்கு மேலாக தொற்று 9000 ஆயிரம் பேருக்கு அதிகரித்து வரும் நிலையில் இந்தியா முழுவதும் கோவில், வணிக வளாகங்கள், உணவங்கள் திறக்கப்பட்டுள்ளன.

    இந்த சூழலில் எப்படிப்பட்ட மாஸ்குகளை அணிய வேண்டும் என்பது குறித்து உலக சுகாதார அமைப்பு விளக்கி உள்ளது. இதன்படி முககவசம் அணிவதும், கண்களை பாதுகாக்க பாதுகாப்பு அம்சங்களை அணிவதுமே கொரோனா வராமல் தடுக்கும்.

    சமூக விலகலை பின்பற்ற முடியாத கூட்டமான இடங்களில் துணியிலிருந்து தயாரிக்கப்படும் முகமூடிகளை பயன்படுத்தக்கூடாது. உடல் ரீதியான சமூக இடைவெளி தூரத்தை பின்பற்ற முடியாத இடங்களில், துணியால் உருவாக்கப்பட்ட மாஸ்கைவிட மருத்துவ முககவசத்தையே அணிய வேண்டும்.

    மேற்கு வங்க மாநிலத்தில் லாக்டவுன் ஜூன் 30 வரை நீட்டிப்பு: முதல்வர் மம்தா அறிவிப்புமேற்கு வங்க மாநிலத்தில் லாக்டவுன் ஜூன் 30 வரை நீட்டிப்பு: முதல்வர் மம்தா அறிவிப்பு

    60 வயதிற்கு மேற்பட்டவர்கள்,இருதய நோய்கள், நுரையீரல் நோய், நீரிழிவு நோய், புற்றுநோய், மற்றும் பிற தொற்றா நோய்கள் உள்ளிட்டவற்றால் ஏற்கனவே பாதிக்கப்பட்ட வர்கள், அவர்களுக்கான மருத்துவ முககவசத்தை (துணியால் அல்ல) மட்டுமே அணிய வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. சொந்த பாதுகாப்புக்காக துணியிலிருந்து தயாரிக்கப்படும் முகமூடிகள் பொதுப் போக்குவரத்தில் செல்லும் போது பயன்படுத்தலாம். ஆனால் அவற்றை தொடாமல் எப்போதும் கை சுகாதாரம் மற்றும் உடல் ரீதியான தூரத்தோடு இருக்க வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

    English summary
    The World Health Organisation (WHO) has said that face masks made from cloth should not be used in places where social distancing norms are not followed.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X