டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லியில் வழிபாட்டு கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களே அதிகம்! பகீர் தகவல்

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் வழிபாட்டு கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களே அதிகம் பேர் உள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

    டெல்லியில் நடைபெற்ற கூட்டம்... பலருக்கு கொரோனா பாதிப்பு... என்ன நடந்தது?

    இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1359 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் டெல்லியில் மார்ச் 1-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை தப்லீகீ- ஜமாத் என்ற அமைப்பினர் ஒரு வழிபாட்டு கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது தெரியவந்தது.

    Who attended the Tablighi Jamaat event in Delhi?

    இந்த காலகட்டத்தில் இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஏராளமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்ததுள்ளது. இதுமட்டுமல்லாது சவுதி, இந்தோனேஷியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இந்த கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.

    இது போன்ற கூட்டம் மலேசியாவிலும் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் 16 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். அவர்களில் 1300 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. அவர்களுள் 50 சதவீதம் பேர் மலேசியா நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்த தப்லீகீ அமைப்பானது 180- முதல் 200 நாடுகளில் காணப்படுகிறது. இந்த கூட்டத்தில் 1900 இந்தியர்கள் கலந்து கொண்டிருப்பர் என அரசின் தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றனர்.

    கொரோனா: பிரதமரின் நிவாரண நிதிக்கு மோடியின் தாய் ரூ. 25 ஆயிரம் நிதியுதவி! கொரோனா: பிரதமரின் நிவாரண நிதிக்கு மோடியின் தாய் ரூ. 25 ஆயிரம் நிதியுதவி!

    அவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஏராளம். அதாவது தமிழகத்திலிருந்து 501 பேர் கலந்து கொண்டனர். அஸ்ஸாமிலிருந்து 216 பேரும், உத்தரப்பிரதேசத்திலிருந்து 156 பேரும், மகாராஷ்டிராவிலிருந்து 109 பேரும், மத்திய பிரதேசத்திலிருந்து 107 பேரும் கலந்து கொண்டனர். அது மட்டுமல்லாமல் பீகாரில் இருந்து 86 பேரும், தெலுங்கானாவிலிருந்து 55 பேரும், ஜார்க்கண்டிலிருந்து 46 பேரும், கர்நாடகாவிலிருந்து 45 பேரும், உத்தரகண்ட்டிலிருந்து 34 பேரும், அந்தமானிலிருந்து 21 பேரும், ராஜஸ்தானிலிருந்து 19 பேரும், இமாச்சல பிரதேசம், கேரளா, ஒடிஸாவிலிருந்து தலா 15 பேரும், பஞ்சாபிலிருந்து 9 பேரும், மேகாலயாவிலிருந்து 5 பேரும் கலந்து கொண்டுள்ளனர்.

    English summary
    Here are the list of attendees who attended the Tablighi Jamaat event in Delhi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X