டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சீன அதிபருடனான முறைசாரா சந்திப்புக்கு மாமல்லபுரத்தை தேர்வு செய்தது யார்? வெளியுறவுத்துறை விளக்கம்

Google Oneindia Tamil News

Recommended Video

    Xi jinping appreciated Tamil people & culture | தமிழர்களின் விருந்தோம்பலை பாராட்டிய சீன அதிபர்

    டெல்லி: சீன அதிபர் ஜி ஜின்பிங் உடனான முறைசாரா உச்சி மாநாட்டுக்கு மாமல்லபுரத்தை தேர்வு செய்தது பிரதமர் நரேந்திர மோடிதான் என்று, வெளியுறவு துறை செயலாளர் விஜய் கோகலே, இன்று தெளிவுபடுத்தியுள்ளார்.

    கடந்த இரு நாட்களாக நடைபெற்ற இந்த முறைசாரா உச்சி மாநாட்டிற்கு, மாமல்லபுரத்தை தேர்வு செய்தது சீன அதிபர் என்று, சில உள்நாட்டு, ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் விஜய் கோகலே அளித்துள்ள விளக்கம் முக்கியத்துவம் பெறுகிறது.

    Who choose Mahabalipuram for Narendra Modi and China president meet?

    டெல்லியில் இன்று நிருபர்களிடம் பேசிய அவர் இது தொடர்பாக கூறியதாவது: இரு நாடுகளுக்கும், மக்களுக்கும் நடுவேயான உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் நடுவே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    இந்த உச்சிமாநாட்டில் இன்றைய தினம் 90 நிமிடங்கள் இரு தலைவர்களும் பேசிக்கொண்டனர். இரு நாட்களும் சேர்த்து இருவரும் 6 மணிநேரம் உரையாடி கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது.

    டோன்ட் கோ பேக் மோடி.. புதிய ஆயுதத்தை கையில் எடுத்த பாஜக.. தேசிய அளவில் டிரெண்ட்.. பதிலுக்கு பதில்!டோன்ட் கோ பேக் மோடி.. புதிய ஆயுதத்தை கையில் எடுத்த பாஜக.. தேசிய அளவில் டிரெண்ட்.. பதிலுக்கு பதில்!

    இந்த சந்திப்பின்போது, ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. மேலும், மாமல்லபுரத்தை தேர்வு செய்தது பிரதமர் நரேந்திர மோடி தான் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    English summary
    Foreign Secretary Vijay Gokhale said the issue of Kashmir was not discussed between Prime Minister Narendra Modi and Chinese President Xi Jinping, during India-China's second informal summit.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X