டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரதமர் நிவாரண நிதியில் சேர்ந்த ரூ. 200 கோடி... எப்படி வந்தது... யார் கொடுத்தது!!

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் நிவாரண நிதிக்கு ரிசர்வ் வங்கி, ஏழு பொதுத்துறை வங்கிகள், ஏழு நிதித்துறை நிறுவனங்கள் ரூ. 200 கோடி நிதி அளித்து இருப்பது தெரிய வந்துள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்த தகவல் வெளியாகியுள்ளது. ரிசர்வ் வங்கி, ஏழு பொதுத்துறை வங்கிகள், ஏழு நிதித்துறை நிறுவனங்களின் ஊழியர்களிடம் இருந்து சம்பளம் பிடிக்கப்பட்டு பிரதமர் நிவாரண நிதிக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Who contributed Rs. 200 crore to PM Cares

எல்ஐசி மற்றும் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா ஆகியவை ரூ. 144.5 கோடி அளவிற்கு நிதி வழங்கியுள்ளன. எல்ஐ சி மட்டும் ரூ. 113.63 கோடியை வழங்கியுள்ளது. இதில் ரூ. 5 கோடி ஊழியர்களின் சம்பளத்தில் இருந்தும், ரூல் 100 கோடி கார்ப்பரேட் தொடர்புகளில் இருந்தும், ரூ. 5 கோடி கோல்டன் ஜூப்ளி பவுண்டேஷனில் இருந்தும் வழங்கப்பட்டுள்ளது.

பொதுத்துறை வங்கிகளில் எஸ்பிஐ வங்கி மட்டும் அதிகபட்சமாக ரூ. 107.95 கோடி வழங்கியுள்ளது. இது முழுக்க முழுக்க அரசு ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து வழங்கப்பட்டுள்ளது. இதில் ரூ. 7.34 கோடியை ஊழியர்கள் நன்கொடையாக வழங்கியதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

குட்கா: உரிமைக்குழு நோட்டீசுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி ஹைகோர்ட்டில் மேல்முறையீடு குட்கா: உரிமைக்குழு நோட்டீசுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி ஹைகோர்ட்டில் மேல்முறையீடு

பிரதமர் நிவாரண நிதியில் எவ்வளவு நிதி சேர்ந்துள்ளது என்பது குறித்த தகவலை வெளியிட மத்திய அரசு மறுத்துவிட்டது. இது தனி டிரஸ்ட் என்றும், பொதுத்துறை நிறுவனத்தின் கீழ் வராது என்றும் தெரிவித்து இருந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனம் தெரிவித்து இருந்தன. வெளிப்படைத்தன்மை இல்லை என்று குற்றம்சாட்டி இருந்தனர்.

இந்த டிரஸ்டில் பிரதமர், உள்துறை அமைச்சர், நிதித்துறை அமைச்சர், பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆகியோர் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.

English summary
PM Cares received over Rs 200 crore from salaries of RBI, govt banks, LIC employees
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X