டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

யார் இந்த அங்கி தாஸ்.. பாஜக-பேஸ்புக் 'வெறுப்பு பேச்சு' சர்ச்சையின் பரபர பின்னணி

Google Oneindia Tamil News

டெல்லி: ஆளும் பாஜகவினருக்கு எதிராக "வெறுக்கத்தக்க பேச்சு விதிகளைப் பயன்படுத்துவதை, அங்கி தாஸ் எதிர்த்தார் என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கை கட்டுரை வெளியிட்டது. இவர் பேஸ்புக் நிறுவனத்தின் இந்தியா, தெற்காசியா மற்றும் மத்திய ஆசியாவிற்கான அதன் பொதுக் கொள்கையின் இயக்குனராக உள்ளதால் பாஜகவிற்கு ஆதரவாக பேஸ்புக் செயல்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

Recommended Video

    BJP- க்கு ஆதரவு.. Facebook மீது குவியும் விமர்சனங்கள்

    அமெரிக்காவின் வால் ஸ்டிரீட் ஜர்னல் எழுதிய அந்த ஆய்வு கட்டுரையில், பேஸ்புக் நிறுவனம் இந்தியாவில் பாஜகவினர் செய்யும் வெறுப்பு பேச்சுக்களை நீக்குவது இல்லை. பாஜகவினர் செய்யும் போஸ்ட்களை கண்மூடித்தனமாக பேஸ்புக் ஆதரிக்கிறது.

    அதேபோல் பாஜக மட்டுமின்று வேறு மூன்று இந்து அமைப்புகள், கட்சிகள் செய்யும் போஸ்டுகளையும் பேஸ்புக் அனுமதிக்கிறது என்றும் இந்தியாவில் அரசை எதிர்த்தால் தங்களின் மார்க்கெட் மோசமாகிவிடும் என்று பேஸ்புக் மௌனம் காப்பதாக கூறப்பட்டுள்ளது.

    விழுப்புரத்தில் கேட்ட பயங்கர சத்தம்.. போலீஸ்காரரின் ஏழுமலையின் நெற்றியை துளைத்த குண்டு.. ஷாக்விழுப்புரத்தில் கேட்ட பயங்கர சத்தம்.. போலீஸ்காரரின் ஏழுமலையின் நெற்றியை துளைத்த குண்டு.. ஷாக்

    பேஸ்புக் ஆதரவு

    பேஸ்புக் ஆதரவு

    Facebooks Hate-Speech Rules Collide With Indian Politics என்ற பெயரில் அந்த கட்டுரையில்,. இந்தியாவின் பேஸ்புக் குழுவில் இருக்கும் சில முடிவு எடுக்கும் அதிகாரம் கொண்ட அதிகாரிகள் சிலர் பாஜகவிற்கு ஆதரவாக செயல்படுவதாகவும். வன்முறையை தூண்டும் வகையில் பாஜகவினர் செய்யும் போஸ்ட்களை இந்திய பேஸ்புக் அதிகாரிகள் வேண்டும் என்றே நீக்குவது இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுளளது.

    பாஜக எம்எல்ஏவின் பேச்சு

    பாஜக எம்எல்ஏவின் பேச்சு

    குறிப்பாக இதற்கு உதாரணமாக. பாஜகவின் தெலுங்கானா எம்எல்ஏ டி ராஜா சிங்கின் வெறுப்பு பேச்சுக்கள் மற்றும் போஸ்ட்களை புகார் அளித்தும் பேஸ்புக் நீக்கியது இல்லை, என்றும் பேஸ்புக்கில் இருக்கும் சிலர் தலையிட்டு இவரின் வெறுப்பு பேச்சுக்களை நீக்க கூடாது என்று கூறியதாகவும் வால் ஸ்டிரீட் ஜர்னல் இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    பாஜக எம்எல்ஏ ராஜா சிங், இந்தியா வரும் ரோஹிங்கியா இஸ்லாமியர்களை சுட்டு வீழ்த்த வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். அதேபோல் இவர் மாட்டுக்கறி உண்ணும் இஸ்லாமியர்களை சுட்டு வீழத்த வேண்டும் என்றும் கூறியிருந்தார். ஆனால் இவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கூடாது. இவரின் கணக்கை நீக்க கூடாது என்று இந்திய பேஸ்புக் குழுவில் இருக்கும் சிலர் அழுத்தம் கொடுத்தனராம். அவரின் சில பேஸ்புக் போஸ்ட்களை மட்டும் பேஸ்புக் நீக்கி இருக்கிறதாம். இதுமட்டுமின்றி பாஜகவின் கபில் மிஸ்ரா, அனந்த குமார் ஹெக்டே போன்ற சில தலைவர்கள் செய்யும் போஸ்ட்களை பேஸ்புக் நீக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

    பேஸ்புக் கொள்கை

    பேஸ்புக் கொள்கை

    இதனிடையே ஆளும் பாஜகவினருக்கு எதிராக "வெறுக்கத்தக்க பேச்சு விதிகளைப் பயன்படுத்துவதை, இந்தியா, தெற்காசியா மற்றும் மத்திய ஆசியாவிற்கான அதன் பொதுக் கொள்கையின் சக்திவாய்ந்த இயக்குநரான பேஸ்புக்கின் அங்கி தாஸ் எதிர்த்தார் என்றும் வால் ஸ்டிரீட் ஜர்னல் கட்டுரை வெளியிட்டுள்ளது. இது தான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    2011ல் பேஸ்புக்கில் இணைந்தார்

    2011ல் பேஸ்புக்கில் இணைந்தார்

    மும்பையைச் சேர்ந்த அங்கி தாஸ் (49 வயது), 2011 ஆம் ஆண்டில் மைக்ரோசாப்ட் நிறுவனத்திலிருந்து பேஸ்புக்கில் இணைந்தார். இந்தியாவில் பேஸ்புக்கின் கொள்கை ரீதியான முக்கிய பொறுப்பில் கடந்த 10 ஆண்டுகளாக இருக்கும் இணைய இணைப்பினை இதுவரை பெறாத அனைவரும், அதனைப் பெறும் வகையில், பேஸ்புக் நிறுவனம் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்துடன் இணைந்து, இண்டர்நெட் டாட் ஓ.ஆர்.ஜி. என்னும் திட்டத்தினை இந்தியாவில் 2015ம் ஆண்டு செயல்படுத்தியது. இந்த திட்டம் அப்போது இந்தியாவில் தோல்வி அடைந்துவிட்டது. இந்நிலையில் அப்போது கொள்கை ரீதியாக முடிவெடுக்கும் இடத்தில் அங்கி தாஸ் தான் இருந்தார் என்று கூறப்படுகிறது.

    பேஸ்புக் அனுமதி

    பேஸ்புக் அனுமதி

    இதனிடையே 2016 ஆம் ஆண்டில் பேஸ்புக் கொள்கை ரீதியாக ஒருமுடிவெடுத்தது இதன்படி யாராவது ஒரு அறிக்கையை வெளியிட்டால் அல்லது பேஸ்புக் சமூகத் தரங்களை மீறும் ஒரு கட்டுரையை பகிர்ந்து கொண்டால், அதைப் பார்ப்பதற்கான பொது ஆர்வம் அபாயத்தை விட அதிகமாக இருக்கும் என்று பேஸ்புக் நிர்வாகிகள் நம்பினால், அதை பொதுவெளியில் வெளியிட பேஸ்புக் அனுமதிக்கிறது.

    உயிருக்கு அச்சுறுத்தல்

    உயிருக்கு அச்சுறுத்தல்

    இதனிடையே பேஸ்புக் இந்தியா, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவின் பொது கொள்கை இயக்குனர், அங்கி தாஸ், வால் ஸ்ட்ரீட் கட்டுரைக்கு பின்னர் தனக்கு ஆன்லைனில் பலர் கொலை மிரட்டல் விடுப்பதாக குற்றம்சாட்டி உள்ளதுடன் பலருக்கு எதிராக டெல்லி போலீசில் புகார் அளித்துள்ளார்.

    English summary
    Wall Street Journal report that Facebook’s Ankhi Das, its powerful director of public policy for India, South Asia and Central Asia allegedly “opposed applying hate speech rules” against a controversial Telangana politician belonging to the ruling Bharatiya Janata Party (BJP) — T Raja Singh and “at least three other” figures associated with party and its ideology.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X