டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கன்னா.. சமையலை ருசிக்க ஆசையா.. சூப்பர் சுரேஷ்.. ருசியில் மெய் மறந்த விஐபிகள் லிஸ்ட்.. இதோ!

Google Oneindia Tamil News

டெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அவரது மனைவி மெலானியா மற்றும் குடும்பத்தினருக்கு சமைக்க இருக்கும் செஃப் சுரேஷ் கன்னா இதுவரை யார் யாருக்கெல்லாம் தன் கைவண்ணத்தை காண்பித்திருக்கிறார் தெரியுமா?

Recommended Video

    Schedule of President Trump’s India visit | இன்று இந்தியா வரும் டிரம்பின் பயண விபரங்கள்

    அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் வெற்றி பெற முனைப்பு காட்டி வருகிறார்.

    இதனிடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார்.

    ஆக்ரா

    ஆக்ரா

    இந்த அழைப்பை ஏற்று டொனால்ட் டிரம்ப் இன்று இந்தியாவுக்கு வருகிறார். அவர் சபர்மதி ஆசிரமத்திலும் மோடேரா ஸ்டேடியத்திலும் சிறிது நேரத்தை செலவிடுகிறார். இதைத் தொடர்ந்து அவர் அங்கிருந்து 3.30 மணிக்கு ஆக்ரா புறப்படுகிறார். டிரம்ப் குஜராத் மாநிலத்தில் இருக்கும் வரை அவருக்கு தேவையான உணவுகளை சமைக்க மூத்த சமையல் கலைஞர் சுரேஷ் கன்னா நியமிக்கப்பட்டுள்ளார்.

    உணவு

    இவர் பார்ட்சூன் லேண்ட்மார்க் ஹோட்டலில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ளார். சபர்மதி ஆசிரமத்தில் கமான் டோக்லா, ஸ்பெஷல் குஜராத்தி ஜின்ஜர் டீ, பிரக்கோலி மற்றும் கார்ன் சமோசா, ஐஸ் டீ, கிரீன் டீ, மல்ட்டி கிரைன் குக்கீஸ் ஆகியன வழங்கப்படவுள்ளது. விருந்தினர்களுக்கு உணவுகளை அளிப்பதற்கு முன்னதாக இவர் சமைக்கும் உணவுகளை உணவு பாதுகாப்பு ஆய்வாளர்கள் ருசிப்பர்.

    உணவு சமைத்து கொடுத்தல்

    உணவு சமைத்து கொடுத்தல்

    சுரேஷ் கன்னா இது வரை ஏராளமான பிரபலங்களுக்கு சமைத்து கொடுத்த அனுபவம் கொண்டவர். அவர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோருக்கு உணவு சமைத்துக் கொடுத்துள்ளார். அது மட்டுமல்லாமல் திரை பிரபலங்களான அமிதாப் பச்சன் மற்றும் ஷில்பா ஷெட்டி ஆகியோருக்கும் சமைத்துள்ளார்.

    தேசிய விருது

    தேசிய விருது

    கடந்த 1990-ஆம் ஆண்டு சமையல் கலைஞர்களுக்கு வழங்கப்படும் தேசிய விருதை பெற்றுள்ளார். இதுகுறித்து கன்னா கூறுகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடிக்கு சமைத்து கொடுப்பதில் மிகவும் மகிழ்ச்சி. மத்திய அரசால் ஆர்டர் செய்யப்பட்ட மெனுவை தயார் செய்ய நாங்கள் டீமாக பணியாற்றி வருகிறோம். ஆவியில் வேக வைத்த உணவுகளை சமைக்க திட்டமிட்டுள்ளோம். மசாலாக்களையும் பயன்படுத்துவோம். அதில் எந்த கட்டுப்பாடும் இல்லை என்றார்.

    English summary
    Suresh Khanna a chef who is going to cook food for US President Donald Trump and his dignitaries. He had experience for preparing meals for Kalam, Modi etc.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X