டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

யார் இந்த ஜேபி நட்டா? பாஜகவில் அமித்ஷாவுக்கு அடுத்து பெரிய பதவி கிடைத்தது எப்படி?

Google Oneindia Tamil News

Recommended Video

    TN BJP - டெல்லி சென்ற அதிமுக அமைச்சர்கள்...ஆராய சொன்ன அமித்ஷா

    டெல்லி: பிரதமர் மோடியின் 57 பேர் கொண்ட அமைச்சரவை பட்டியலில், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ஜேபி நட்டா பெயர் இல்லாத போது, அவருக்கு கட்சியில் மிகப்பெரிய பொறுப்பு காத்திருப்பதாக ஊகங்கள் பரவத் தொடங்கின.

    பாஜகவின் தேசியத் தலைவராக நட்டா நியமிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக வதந்திகள் றெக்கை கட்டி பரவின. ஆனால், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

    அதில், ஜேபி நட்டா அடுத்த ஆறு மாத காலத்திற்கு, பாஜகவின் செயல் தலைவராக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    தமிழில் பதவியேற்றுக் கொண்ட புதுச்சேரி வைத்திலிங்கம்.. கரகோஷத்தால் அதிர்ந்த லோக்சபா தமிழில் பதவியேற்றுக் கொண்ட புதுச்சேரி வைத்திலிங்கம்.. கரகோஷத்தால் அதிர்ந்த லோக்சபா

    அரசியல் அனுபவம்

    அரசியல் அனுபவம்

    இமாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்த நட்டா, பாஜகவின் இளைஞர் அணி பிரிவு தலைவராகவும் பதவிவகித்த அனுபவம் கொண்டவர். 2014ஆம் ஆண்டு பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அப்போது, கட்சித் தலைவராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமித் ஷா தலைவர் ஆக்கப்பட்டார். இதையடுத்து நட்டாவுக்கு, மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. பாஜக நாடாளுமன்ற குழுவின், உறுப்பினராக நட்டா நியமிக்கப்பட்டார். இந்த குழு அந்தக் கட்சியின் அதிகாரம் கொண்ட குழுக்களில் முக்கியமான ஒன்றாகும் .

    மாணவர் இயக்கம்

    மாணவர் இயக்கம்

    ஜேபி நட்டா, ஏபிவிபி மாணவர் இயக்கத்தின் தலைவராக அரசியல் வாழ்க்கையில் காலடி எடுத்து வைத்தவர். ஆர்எஸ்எஸ் அமைப்பில் உறுப்பினர். நரேந்திர மோடி, அமித் ஷா, நிதின் கட்கரி ஆகிய பாஜகவின் மூத்த தலைவர்களுடன் அப்போது இருந்தே, நீண்ட தொடர்பை மேம்படுத்தி வந்தவர்.

    அமைதியான அரசியல்வாதி

    அமைதியான அரசியல்வாதி

    பூர்வீகம் இமாச்சல் பிரதேசம் என்றாலும் ஜேபி நட்டா, பிறந்தது பீகார் மாநிலம் பாட்னாவில்தான். ராஞ்சி பல்கலைகழகத்தில் ஜேபி நட்டாவின் தந்தை, என்எல் நட்டா, துணைவேந்தராக பதவி வகித்தவர் ஆகும். கான்வென்ட் பள்ளியில் கல்வியை முடித்தவர். எப்போதுமே அதிரடி அரசியலை விடுத்து, அமைதியான அரசியலுக்கு பெயர் பெற்றவர்.

    முதல்வர் ரேஸ்

    முதல்வர் ரேஸ்

    2017ஆம் ஆண்டு இமாச்சல பிரதேச தேர்தலில், பாஜகவின் முன்னாள் முதல்வர், தூமல் தோல்வியடைந்ததும், நட்டா அந்த பதவிக்கான, ரேஸில் முன்னணியில் இருந்தார். ஆனால் இவர் பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர் நட்டா. இமாச்சல பிரதேச அரசியலில், ராஜபுத்திர ஜாதியை சேர்ந்த ஒருவர் முதல்வர் பதவிக்கான வேட்பாளராக தேவைப்பட்டார். எனவே, நட்டா அந்த வாய்ப்பை இழந்தார்.

    English summary
    In 2017, after the loss of CM-face Dhumal, Nadda had emerged as the front-runner to the top post in the state.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X