டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

யார் இந்த பிரசாந்த் கிஷோர்? ஜெகன் மோகனை முதல்வராக்கியது எப்படி? இவர் வியூகம் தோற்றதே இல்லையா?

Google Oneindia Tamil News

Recommended Video

    Jagan Mohan Reddy | ஜெகன் தான் இனி மாநில தலைவர்களில் நாயகன்- வீடியோ

    டெல்லி: கட்சி தொடங்கவில்லை, சினிமாவில் நடிக்கவில்லை, தொழிலதிபரோ, கிரிக்கெட் வீரரோ கூட கிடையாது. ஆனால், இந்திய அரசியலில் கடந்த சில ஆண்டுகளாக தவிர்க்க முடியாத இடம் பிடித்துவிட்டார் பிரசாந்த் கிஷோர்.

    பாண்டவர்களைவிட என்னதான் பல மடங்கு பெரிய படை இருந்தாலும், அதிகப்படியான மாவீரர்களை கொண்டிருந்தாலும், மகாபாரதத்தில், கவுரவர்களை, பாண்டவர்கள் வெற்றி கண்டு, நாட்டை பிடித்தது, எப்படி கிருஷ்ணரால் சாத்தியப்பட்டதோ, அதுபோல, அரசியலிலும், சாதுர்ய கண்ணனாக பார்க்கப்படுவர் பிரசாந்த் கிஷோர்.

    இவரின் சமீபத்திய சிஷ்யன், ஜெகன் மோகன் ரெட்டி. கட்சி துவங்கிய சில ஆண்டுகளில், ஆந்திராவில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில், 151 தொகுதிகளை வென்று முதல்வர் அரியாசனத்தில் ஜெகன் மோகன் ரெட்டி அமர காரணம், பிரசாந்த் கிஷோர். இப்போது, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர், மமதா பானர்ஜி தனது அரசியல் இருப்பை காப்பாற்ற, பிரசாந்த்தை அணுகியுள்ளார்.

    பதவிகளுக்காக பாஜக-வுடன் கூட்டணி அல்ல.. கொள்கை அடிப்படையிலே தான்.. உத்தவ் தாக்கரே விளக்கம் பதவிகளுக்காக பாஜக-வுடன் கூட்டணி அல்ல.. கொள்கை அடிப்படையிலே தான்.. உத்தவ் தாக்கரே விளக்கம்

    அடிப்படை கட்டமைப்பு

    அடிப்படை கட்டமைப்பு

    பிரசாந்த் கிஷோரின் வியூகங்கள்தான், இவரை அனைத்து அரசியல் தலைவர்களின் 'ப்ளூ ஐ பாய்-யாக' வைத்துள்ளது. ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி பூத் மட்டத்தில்தான் பலவீனமாக இருப்பதை புரிந்து கொண்ட பிரசாந்த் கிஷோர், அதை பலப்படுத்த யோசனைகள் வழங்கினார். எனவேதான் கடந்த சட்டசபை தேர்தலில் 66 தொகுதிகளை மட்டுமே வென்ற, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், இம்முறை சக்கைபோடு போட்டுள்ளது.

    முதல்வரான மோடி

    முதல்வரான மோடி

    பிரசாந்த் கிஷோர் முதலில் செய்திகளில் அடிபட ஆரம்பித்தது, 2012ம் ஆண்டு குஜராத் சட்டசபை தேர்தலின்போதுதான். அந்த தேர்தலில் 3வது முறையாக மோடி முதல்வரானார். ஆட்சிக்கு எதிராக இயல்பாக இருக்க கூடிய எதிர்ப்பு அலையை மீறி மோடியை வெற்றிபெறச் செய்ததில், பிரசாந்த் கிஷோர் முக்கிய பங்காற்றினார். இது மட்டுமில்லை, 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலிலும், பிரசாந்த் கிஷோர் பாஜகவுக்கு பக்கபலமாக இருந்தார். பாஜக அறுதிப் பெரும்பான்மையோடு ஆட்சிக்கு வந்தது.

    கட்சி வேறுபாடு இல்லை

    கட்சி வேறுபாடு இல்லை

    ஆனால், பிரசாந்த் கிஷோர் தொழில் ரொம்ப சுத்தம். அவருக்கு கட்சி பாகுபாடு கிடையாது. யாரிடம் பணியில் இருக்கிறாரோ, அவர் சொல்லும் அசைன்மென்ட்டை பக்காவாக முடிப்பது மட்டுமே அவர் வேலை. கட்சி, தனி நபர் என எந்த பச்சாதாபத்தையும், பிரசாந்த் கிஷோரிடம் எதிர்பார்க்க முடியாது.
    2015ம் ஆண்டு, பீகாரில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெறவும், பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரவும், பிரசாந்த் கிஷோர் பின்னணியில் இருந்தார். இந்த நிலையில்தான், ஜெகன் மோகன் ரெட்டியும், பிரசாந்த் கிஷோர் உதவியை நாடினார். வந்தார் பிரசாந்த் கிஷோர், இதோ வென்றும் காட்டிவிட்டார்.

    பாத யாத்திரை, பாடல்கள்

    பாத யாத்திரை, பாடல்கள்

    ஜெகன் மோகன் ரெட்டியை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க பிரஜா சங்கல்ப்ப பாதயாத்திரை உதவியது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தேர்தலுக்காக ஒரு தீம் பாடலை வெளியிட்டது. ராவலி ஜெகன் காவலி ஜெகன்.. அதாவது, ஜெகன் வேண்டும், ஜெகன் வெல்ல வேண்டும் என்று பொருள். 2.25 கோடி வியூவர்ஷிப்புடன், அதிகம் பேரால் பார்க்கப்பட்ட தேர்தல் தீம் சாங் என்ற பெருமையை இது பெற்றது. இதன் பின்னணியில் இருந்தது, சாட்சாத், பிரசாந்த் கிஷோர்தான்.

    சந்திரபாபு நாயுடு

    சந்திரபாபு நாயுடு

    ஜெகன் இமேஜை பூஸ்ட் செய்ததோடு, சந்திரபாபு நாயுடு இமேஜுக்கு வேட்டும் வைத்தார், பிரசாந்த் கிஷோர். நின்னு நம்மாம் பாபு.. அதாவது உங்களை நாங்கள் நம்ப மாட்டோம் சந்திரபாபு என்ற பொருளில் கோஷத்தை உருவாக்கினார். பை-பை-பாபு என்ற கோஷமும் இவர் கைவண்ணம்தான். இதுவும் மக்களிடம் தாக்கம் ஏற்படுத்தியது.

    தோல்வியில் முடிந்த திட்டம்

    தோல்வியில் முடிந்த திட்டம்

    மற்றொருபக்கம், பிரசாந்த் கிஷோர் 400 பேர் கொண்ட ஒரு குழுவை உருவாக்கி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மற்றும், வேட்பாளர்களுக்கு ஃபீல்ட் வேலை செய்ய அனுப்பி வைத்தார். சமூக வலைத்தளங்களிலும் இவர்கள் தீவிரமாக செயலாற்றினர். ஆனால், பிரசாந்த் கிஷோர் தேர்தல் வியூக வரலாற்றிலேயே ஒருமுறைதான் தவறு நிகழ்ந்தது. அது 2017ம் ஆண்டு நடந்த உத்தர பிரதேச தேர்தலின்போது.

    காங்கிரஸ் தலையீடு

    காங்கிரஸ் தலையீடு

    அப்போது, வெற்றிக்காக காங்கிரஸ் கட்சி பிரசாந்த் கிஷோரை அணுகியது. 2014 லோக்சபா தேர்தலில் மிக மோசமாக தோற்ற கட்சியான காங்கிரசை, உ.பி.யில் ஆட்சிக்கு கொண்டுவர வேண்டும் என்பது மிகப்பெரிய பணி. ஆனாலும் தயங்கவில்லை பிரசாந்த் கிஷோர். பல யோசனைகளை வாரி வழங்கினார். அதில் ஒன்று, பிரியங்கா காந்தியை, முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்பது. ஆனால், காங்கிரஸோ, உங்கள் எல்லையோடு நின்று கொள்ளுங்கள். அதிக பிரசங்கித்தனம் செய்ய கூடாது என அதட்டி வைத்ததாக கூறப்பட்டது. இறுதியில், 403 தொகுதிகளை கொண்ட உ.பி. மாநிலத்தில் 7 தொகுதிகளை மட்டுமே காங்கிரஸ் வென்றது. ஒருவேளை பிரசாந்த் கிஷோரை சுயமாக செயல்பட விட்டிருந்தால், அவர் மேஜிக் பலித்திருக்க வாய்ப்பு இருந்திருக்கலாம்.

    English summary
    Who is Prashant Kishor and why he is given so much importance by the political parties.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X