டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டைம்ஸ் இதழில் மிகவும் செல்வாக்கு பெற்ற 100 பேரில் ஒருவராக பில்கிஸ் பாட்டி...யார் இவர்?

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் சிஏஏவுக்கு எதிராக தொடர்ந்து நடந்து வந்த போராட்டத்தில் விடாமல் கலந்து கொண்டு இந்த சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தி வந்த 82 வயது வீரப்பெண்மணிதான் பில்கிஸ். டைம்ஸ் இதழின் மிகவும் செல்வாக்கு பெற்ற நூறு பேர் பட்டியலில் இவரது பெயரும் இடம் பெற்றுள்ளது. இந்தப் பட்டியலில் நூறு பேரில் ஒருவராக பிரதமர் மோடியின் பெயரும் இடம் பெற்றுள்ளது.

நாட்டில் சிஏஏ என்ற இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து டெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை என்று நாட்டின் அனைத்து நகரங்களிலும் போராட்டம் வெடித்தது. டெல்லியில் ஷாஹீன் பாக் என்ற இடத்தில் முஸ்லிம்கள், இந்துக்கள் என்று மத வேற்றுமை இன்றி அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் பெரிய அளவில் மீடியாக்களின் கவனத்தை உலகம் முழுவதும் ஈர்த்து இருந்தது.

 ராஜ்ய சபா தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு...நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் பேரணி!! ராஜ்ய சபா தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு...நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் பேரணி!!

கட்சிகள்

கட்சிகள்

டெல்லி ஷாஹீன் பாக்கில் 100 நாட்களுக்கும் மேலாக ஆயிரக்கணக்கில் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி தேர்தல் நடந்தபோதும் இவர்களை இந்த இடத்தில் இருந்து வெளியேற்ற முடியவில்லை. அரசியல் கட்சியினரும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வந்தனர்.

துப்பாக்கிச் சூடு

துப்பாக்கிச் சூடு

ஷாஹீன் பாக்கில் நடந்த போராட்த்தில் 82 வயது பாட்டியான பில்கிஸ் கலந்து கொண்டார். இவருக்கு டெல்லியில் சிலரிடம் இருந்து எதிர்ப்பு மிரட்டல் வந்தபோதும் சரி, டெல்லியின் கடும் குளிர் காலத்தின்போதும் வெளியேற மறுத்துவிட்டார். இந்த இடத்தின் அருகே துப்பாக்கிச் சூடும் இரண்டு முறை நடத்தப்பட்டது. அப்போதும் தைரியமாக அந்த இடத்தில் அமர்ந்து இருந்தார். யார் சொல்லியும் கேட்கவில்லை.

தேர்வு ஏன்

தேர்வு ஏன்

மக்களுக்கு எதிரான குடியுரிமை சட்டத்தை வாபஸ் பெற்றால்தான் இந்த இடத்தை விட்டு நகருவேன் என்று பிடிவாதமாக அமர்ந்து இருந்தார். இவரது வயதையும் மீறி துணிச்சலாக, தைரியத்துடன், லட்சியத்தை அடைய வேண்டும் என்பதற்காக இவர் போராட்டம் நடத்தியதால், இவரை மிகவும் செல்வாக்குமிக்க 100 பேர் பட்டியலுக்கு டைம்ஸ் இதழ் தேர்வு செய்துள்ளது.

அமித் ஷா யார்

அமித் ஷா யார்

பில்கிஸ் அளித்து இருந்த பேட்டியில், ''அவர்கள் எங்களை துரோகிகள் என்று அழைக்கட்டும். பிரிட்டிஷ்காரர்களை இந்தியாவில் இருந்து விரட்டி இருக்கிறோம், நரேந்திர மோடி, அமித் ஷா யார்? எங்கள் மீது யாராவது துப்பாக்கிச் சூடு நடத்தினாலும், ஒரு இஞ்ச் கூட இந்த இடத்தை விட்டு நகர மாட்டோம். முதலில் என்ஆர்சி மற்றும் சிஏஏவை அகற்றுங்கள். அந்த நிமிடத்திலேயே நாங்களும் இந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுகிறோம். எங்களுக்கு மத வித்தியாசம் இன்று பிஸ்கட், ஜூஸ் கொடுக்கின்றனர்'' என்று தெரிவித்து இருந்தார்.

மார்ச் 24

மார்ச் 24

இவரது பேச்சு நாடு முழுவதும் மாணவர்களையும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட வைத்தது. நாடு முழுவதும் மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி இருந்தனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக வலுக்கட்டாயமாக ஷாஹீன் பாக் பகுதியில் இருந்து போராட்டக்காரர்கள் மார்ச் 24ஆம் தேதி அகற்றப்பட்டனர்.

சுந்தர் பிச்சை

சுந்தர் பிச்சை

இவரைத் தவிர இந்தியர்களாக இந்த இதழில் பிரதமர் மோடி, கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா, ஹெச்ஐவி ஆராய்ச்சியாளர் ராவீந்தர் குப்தா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். மோடி கடந்த 2014, 2015, 2017 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து இந்த இதழில் இடம் பெற்று வருகிறார்.

English summary
Who is Shaheen Bagh 'dadi' Bilkis named in Time Magazine; Modi name also in the list
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X