டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அயோத்தி வழக்கில் தீர்ப்பை எழுதியது யார்? அறிவிக்கவில்லை.. உச்சநீதிமன்ற வரலாற்றில் அரிதான நிகழ்வு

Google Oneindia Tamil News

Recommended Video

    Aspects in Ayodhya verdict | அயோத்தி வழக்கின் தீர்ப்பு.. முக்கிய அம்சங்கள் என்னென்ன?

    டெல்லி: அயோத்தி நில விவகாரம் தொடர்பாக நாடு உற்று நோக்கிய வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தனது தீர்ப்பை வழங்கியது.

    தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு இந்த தீர்ப்பை ஒருமித்த கருத்துடன் வழங்கியுள்ளது.

    மொத்தம், 1045 பக்கங்கள் அடங்கிய இந்த தீர்ப்பில் ஒரு முக்கியமான அம்சம் தென்படுகிறது. அது என்னவென்றால் இந்த தீர்ப்பை எழுதிய நீதிபதி யார் என்ற பெயர் அதில் இடம் பெறவில்லை.

    Who Is The Author Of Ayodhya verdict as no name mentioned

    பொதுவாக உச்சநீதிமன்றத்தில் ஒரு அமர்வு தீர்ப்பை வழங்கினால், அந்த தீர்ப்பை எழுதியவர் யார் என்பது தொடர்பாக குறிப்பு இருக்கும். அயோத்தி வழக்கை பொறுத்தளவில் ஐந்து நீதிபதிகளும் ஒருமித்த கருத்து அடிப்படையில் தீர்ப்பு வழங்கியதாக தலைமை நீதிபதி தெரிவித்திருந்தார். எனவே இயல்பாகவே இந்த தீர்ப்பை யார் எழுதினார்கள் என்ற அம்சம் இடம்பெற்றிருக்கும் என்று சட்ட வல்லுநர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவ்வாறு எதுவும் இல்லை.

    அயோத்தி வழக்கில் மறுசீராய்வு இல்லை.. உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்கிறோம்.. சன்னி வக்ஃப் வாரியம் முடிவுஅயோத்தி வழக்கில் மறுசீராய்வு இல்லை.. உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்கிறோம்.. சன்னி வக்ஃப் வாரியம் முடிவு

    இந்த அமர்வில் ரஞ்சன் கோகாய் தவிர, தலைமை நீதிபதியாகப் போகும், எஸ்.எஸ்.போப்டே, நீதிபதிகள், டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண் மற்றும் அப்துல் நசீர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுபற்றி, சட்ட வல்லுனர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து, தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் எதற்காக தீர்ப்பு எழுதிய நீதிபதியின் பெயர் இடம்பெறவில்லை என்பது இதுவரை தெரியவில்லை.

    English summary
    Who Is The Author Of Ayodhya verdict as no name mentioned, and dmany legal faces wonder why.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X