டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மெகா கூட்டணி இருக்கட்டும்... பிரதமர் வேட்பாளர் யாரு?.. பாஜக நக்கல்!

Google Oneindia Tamil News

Recommended Video

    மெகா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யாரு?.. பாஜக நக்கல்- வீடியோ

    டெல்லி: டெல்லியில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடப்பதற்கு முன் பிரதமர் வேட்பாளர் யார் என்று அறிவிக்க வேண்டும் என பாஜக தேசியச் செயலாளர்களில் ஒருவரான கைலாஷ் விஜய்வர்கியா நக்கலாக கேட்டுள்ளார்.

    பாஜகவுக்கு எதிரான மெகா கூட்டணி உருவாகி உள்ளது. அதன்படி டெல்லியில் இன்று காங்கிரஸ் கட்சி தலைமையில் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    who is the Prime Minister candidate in opposition parties, BJP mocks

    இந்தநிலையில், பாஜக தேசியச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா கூறியதாவது: பாஜகவை ஆட்சியில் இருந்து கீழ் இறக்குவது பிறகு இருக்கட்டும், முதலில் எதிர்க்கட்சியில் யாரு பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்கட்டும். எங்கள் அணியில் பிரதமர் மோடி உள்ளார். உங்கள் அணியில் இருப்பது யார்? என்று கேள்வி எழுப்பினார்.

    டெல்லியில் நடக்கும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்க சென்றுள்ளார். அதே போல், பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணியை உருவாக்க முதலில் களமிறங்கிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் டெல்லி வந்தடைந்தார்.

    இதனிடையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன், திரினாமுல் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைக்குமா? என்பதை விளக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் முகுல் ராய் கேட்டுக் கொண்டுள்ளார்.

    20 ஆண்டுகளாக கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக களமிறங்கி விட்டு, இப்போது, பாஜகவுக்கு எதிராக அவர்களுடன் கூட்டணியா? என்றும் விளக்கம் கேட்டுள்ளார்.

    முன்னதாக, இத்தனை பேர் ஒன்று சேர்ந்து ஒருவரை எதிர்க்கிறார்கள் என்றால், யார் பலசாலி என்பதை தெரிந்து கொள்ளுங்கள் என்று ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருந்தது நினைவிற்குரியது.

    English summary
    Prime minister Modi is in our team. Who's in your team? asked BJP national general secretary Kailash Vijayvargiya
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X