டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மோடியை 'டைம்' இதழ் அட்டைப்படம் போட்டு விமர்சிக்க காரணம் என்ன? கடைசியில் 'கண்டுபிடித்துவிட்டது' பாஜக!

Google Oneindia Tamil News

Recommended Video

    பிளவுவாதிகளின் தலைவர் மோடி - டைம் இதழ் கடும் விமர்சனம்- வீடியோ

    டெல்லி: பிளவுவாதிகள் தலைவர் என்று, பிரதமர் நரேந்திரமோடியை அமெரிக்காவின் 'டைம்' செய்தி இதழ் குறிப்பிட்டு, அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டுள்ளதன், பின்னணியில் பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் இருப்பதாக பாஜக குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.

    டைம் இதழில் பிரதமர் நரேந்திர மோடி அட்டைப்படத்துடன் பிளவுவாதிகளின் தலைவர், என்ற தலைப்பில் வெளியான செய்தி கட்டுரை இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

    Who is TIME magazine article author? BJP finds

    இந்தியாவில் சிறுபான்மையினர் நலன்கள் மோடி ஆட்சியில் பாதிக்கப்பட்டதாகவும், மாநில சுயாட்சி நசுக்கப்பட்டதாகவும், அந்த கட்டுரையில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா இன்று டெல்லியில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்த கட்டுரையை எழுதிய பத்திரிக்கையாளர் ஆதிஷ் தஷீர் என்பவர், பாகிஸ்தானைச் சேர்ந்தவர். பாகிஸ்தானிடமிருந்து வேறு மாதிரியான கட்டுரையை நாம் எதிர்பார்க்க முடியாது.

    வேற இடமே இல்லையா.. சத்ருகன் சின்ஹா வீட்டு வழியாதான் அமித் ஷா பேரணி போகணுமா.. பாட்னாவில் பரபரப்பு வேற இடமே இல்லையா.. சத்ருகன் சின்ஹா வீட்டு வழியாதான் அமித் ஷா பேரணி போகணுமா.. பாட்னாவில் பரபரப்பு

    மறைந்த பாகிஸ்தான் அரசியல்வாதியும் தொழிலதிபருமான சல்மான் தஷீர் மற்றும் இந்திய பத்திரிகையாளர் தவ்லீன் சிங் ஆகியோரின் மகன் தான் இந்த கட்டுரையை எழுதிய ஆதிஷ் தஷீர்.

    மோடி அரசின் கீழ் இந்தியா புதுப்பொலிவு பெற்றுள்ளது. சீரமைப்பு செயல்பாடு போன்றவை மோடி ஆட்சியில் உறுதி செய்யப்பட்டுள்ளன. மணப்பெண் கையில் உள்ள வளையலைப்போலதான், மோடியும், வேலை பார்ப்பது போன்ற சத்தம் வருகிறது, ஆனால், வேலை நடப்பதில்லை என காங்கிரஸின் நவ்ஜோத்சிங் சித்து கூறியுள்ளார். இது காங்கிரசின் மனநிலையை காட்டுகிறது. இவ்வாறு சம்பித் பத்ரா தெரிவித்தார்.

    English summary
    The BJP on Saturday slammed a TIME magazine article, which called Prime Minister Narendra Modi "divider in chief", as an attempt to malign Modi's image, accusing its author of pursuing Pakistan's agenda.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X