டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பரவும் விஷம்.. காற்று மாசுபாட்டால் ஆண்டுக்கு 70 லட்சம் பேர் பலி.. பதற வைக்கும் தகவல்..!

காற்று மாசுபாட்டால் 70 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள் என்று கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

டெல்லி: ஒவ்வொரு வருடமும் காற்று மாசுபாட்டால் 70 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

சமீப காலமாகவே நாம் சுவாசிக்கும் காற்று சுத்தமாக இல்லை... பெருமளவு மாசு கலந்து உள்ளது.. இதற்கு, பெருகிவரும் தொழிற்சாலைகள், வாகனங்களும் பிரதான காரணமாக இருக்கின்றன..

ஒருபக்கம் தொழிற்சாலைகளில் இருந்து வெளியிடுகிற நைட்ரஜன் மற்றும் கந்தக ஆக்சைடுகள், மற்றொரு பக்கம் வாகனங்களில் இருந்து வெளிவருகிற ஹைட்ரோகார்பன்கள், கார்பன்மோனாக்சைடு போன்றவையும்தான் காற்றை மாசுபடுத்த காரணமாக அமைந்து வருகின்றன.

திமுக தேர்தல் வாக்குறுதிகள் மீது அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் பிரசாரம் செய்ய அதிமுக வியூகம்! திமுக தேர்தல் வாக்குறுதிகள் மீது அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் பிரசாரம் செய்ய அதிமுக வியூகம்!

 அறிக்கை

அறிக்கை

இப்படிப்பட்ட நச்சு காற்றை சுவாசிப்பது நுரையீரல்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது.. இறுதியில் மரணம் வரை சென்றுவிடுகிறது. இப்படிப்பட்ட சூழலில்தான், உலக சுகாதார அமைப்பு காற்றுமாசு தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது.. 2005-ம் ஆண்டுக்கு பிறகு இப்போதுதான் அப்படி ஒரு அறிக்கையை வெளியிடுகிறது. அந்த அறிக்கையில் உள்ளதாவது:

 உயிரிழப்பு

உயிரிழப்பு

காற்று மாசுபடுவது, மனித குலத்தின் ஆரோக்கியத்துக்கே எதிராக அமைந்து வருகிறது.. காற்று மாசுபாட்டால் உலகமெங்கும் வருடத்துக்கு 70 லட்சம் பேர் உரிய காலத்துக்கு முன்பாகவே உயிரிழக்கிறார்கள்.. இஸ்கிமிக் இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்றவைகள் வயது முதிர்ந்தவர்களை தாக்குகிறது.. இதனால் அவர்களின் மரணத்துக்கு முன்பேயே இறக்கும் சூழலும் ஏற்பட்டுவிடுகின்றன.

 காற்று

காற்று

அதேபோல, நீரிழிவு, நரம்பு நோய்கள் போன்ற பிற விளைவுகளுக்கும் சான்றுகள் இருக்கின்றன... காற்று மாசுபாட்டால் ஏற்படும் நோய்களின் ஆபத்து என்பது புகைபிடித்தல், ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவது போன்றதற்கு சமமாகும்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது... அதேசமயம், புதிய வழிகாட்டுதலின் கீழ் பி.எம். 2.5 நிலைக்கான பரிந்துரைக்கப்பட்ட வரம்பை ஒரு கன மீட்டருக்கு 10 மைக்ரோ கிராமில் இருந்து 5 மைக்ரோ கிராமாக உலக சுகாதார நிறுவனம் குறைத்திருக்கிறது...

 வழிகாட்டுதல்

வழிகாட்டுதல்

இதைதவிர, பி.எம். 10த்திற்கான பரிந்துரைக்கப்பட்ட வரம்பானது, 20 மைக்ரோ கிராமில் இருந்து 15 மைக்ரோ கிராமாக குறைக்கப்பட்டுள்ளது... நகரமயமாக்கலும் பொருளாதார வளர்ச்சி எதிரொலியாக பெட்ரோல், டீசல் பயன்பாடு அதிகரித்து வருவதாலும்தான், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் வாழும் மக்கள் காற்றுமாசினால் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கலக்கம்

கலக்கம்

காற்றின் தரத்தை மேம்படுத்துவது காலநிலை மாற்றத்தை சரிசெய்ய உதவும் என்றும் மாசு காற்றை சுவாசிப்பதால், இதயம், நுரையீரல், நரம்பு மண்டலம் ஆகியவற்றின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு மரணங்களின் விகிதம் அதிகரித்து வருவதாகவும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது கலக்கத்தை தந்து வருகிறது.

English summary
WHO report, Air pollution kills nearly 7 million every year
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X