டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உலகின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில்.. சரி பாதி இந்தியாவில் மட்டும்... உலக சுகாதார மையம் எச்சரிக்கை

Google Oneindia Tamil News

டெல்லி: கடந்த வாரம் ஒட்டுமொத்தமாக உலகில் கண்டறியப்பட்ட கொரோனா பாதிப்பில் 50% இந்தியாவில் மட்டும் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தற்போது கொரோனா 2ஆம் அலையின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 3.82 லட்சம் பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் தொடர்ந்து 14ஆவது நாளாக மூன்று லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா கண்டறியப்படுகிறது.

WHO says India accounts for nearly 50% of the worlds new Covid-19 cases, 25% of deaths

இந்நிலையில் கடந்த ஒரு வாரத்தில் உலகில் உறுதி செய்யப்பட்ட கொரோனா வழக்குகளில் கிட்டதட்ட பாதி, இந்தியாவில் மட்டும் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் சுமார் 46% இந்தியாவில் மட்டும் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

நாளை முதல் மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள்.. அலுவலகம் வர தேவையில்லை.. தமிழக அரசு சபாஷ் உத்தரவுநாளை முதல் மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள்.. அலுவலகம் வர தேவையில்லை.. தமிழக அரசு சபாஷ் உத்தரவு

அதேபோல கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்தியாவில் 3,780 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர் இது ஒட்டுமொத்தமாக உலகில் பதவி செய்யப்பட்ட உயிரிழப்புகளில் 25% என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது..

மேலும், நாட்டில் பல்வேறு இடங்களிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழக்கும் சம்பவங்களும் தொடர்ந்து நடைபெறுகிறது.

இதையடுத்து மோடி அரசு கொரோனா 2ஆம் அலையைக் கையாள்வதில் தோல்வியடைந்து விட்டதாகப் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதற்குப் பொறுப்பேற்று பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் எனப் பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் விமர்சித்துள்ளார்.

English summary
India accounts for nearly 50% of the world's new Covid-19 cases says WHO
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X